பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்
பகிருங்கள்

தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6-ம் தேதி வருகிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு செல்வார்கள்.

வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டன. தீபாவளி பண்டிகையின்போது, சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஆண்டுதோறும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கவுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top