பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / துபாய் சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு
பகிருங்கள்

துபாய் சுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு

சென்னையில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்ல ஐஆர்சிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த 5 நாள் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.53,700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) பல்வேறு விதமான சுற்றுலா திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ரயில் மூலம் மட்டுமின்றி விமானம் மூலமாகவும் சென்னையில் இருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதன்படி, இம்மாதம் சென்னையில் இருந்து துபாய்க்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 5 நாள் சுற்றுலாவுக்கு ஒரு நபருக்கு ரூ.53,700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், விமானக் கட்டணம், 3 ஸ்டார் ஓட்டலில் தங்கும் வசதி, நுழைவுக் கட்டணம், உணவு, சுற்றுலா வழிகாட்டி மற்றும் விசா அடங்கும். முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களை அறிய 9840902918, 9840902919 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top