பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / தேசிய திறனாய்வு தேர்வுக்கு புதிய அனுமதி சீட்டு
பகிருங்கள்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு புதிய அனுமதி சீட்டு

தேசிய திறனாய்வுத் தேர்வுக் கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு (முதல்கட்ட மாநில அளவிலான தேர்வு) நவம்பர் 18-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 10-ம் தேதி (இன்று) முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இத்தேர்வு கடந்த 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாக 18-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஒரு லட்சத்துக்கு 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தி இந்து

Back to top