பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பத்திர பதிவை எளிதாக்கும் ‘ஸ்டார் 2.0’ திட்டம் தொடக்கம்
பகிருங்கள்

பத்திர பதிவை எளிதாக்கும் ‘ஸ்டார் 2.0’ திட்டம் தொடக்கம்

பொதுமக்கள் தங்களது ஆவணப்பதிவு தொடர்பான தேவைகளை விரைவில் பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையில், ரூ.176 கோடியே 44 லட்சம் மதிப்பில் ‘ஸ்டார் 2.0’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டம் மூலம், பொதுமக்கள் தாங்களாகவே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்னரே, இணையவழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, அலுவலக வருகைக்கு முன்பதிவு செய்யும் வசதி, ஆவணங்களை 10 நிமிடத்தில் பதிவு செய்து திரும்ப வழங்குதல் உள்ளிட்ட வசதிகளைப் பெறமுடியும்.

மேலும், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக, உடனுக்குடன் ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவித்தல், மோசடி பத்திரப்பதிவுகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரது கைரேகையை ஒப்பிட்டு ஆள்மாறாட்டத்தை தடுத்தல், கட்டணமில்லா தொலைபேசி வழியாக பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்தல், பதிவுக்குப் பிறகு பட்டா மாறுதல் மனுக்களை இணைய வழியாக உடனுக்குடன் வருவாய்த் துறைக்கு அனுப்பி, பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய நடைமுறை ஆகியவை இந்த புதிய மென்பொருள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : தி இந்து

Back to top