பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பகிருங்கள்

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையாட்டுத் துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு பல்வேறு துறைகளில் சேவை ஆற்றியவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. விளையாட்டுத் துறையில் சாத னைப் புரிந்தவர்களுக்கு 2019-ம் ஆண்டுக்கான இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை www.padmaaward.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் ஜூன் 30-ம் தேதிக் குள் அனுப்ப வேண்டும்.

எனவே இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஆதாரம் : தி இந்து

Back to top