பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பொறியியல் பட்டப் படிப்பு; அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சிபெற கடைசி வாய்ப்பு
பகிருங்கள்

பொறியியல் பட்டப் படிப்பு; அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சிபெற கடைசி வாய்ப்பு

பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்பவர்கள் தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடு தாண்டி அரியர் வைத்து பொறியியல் படிப்பை முடிக்காத மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு செமஸ்டர் தேர்வும், தொடர்ந்து ஆகஸ்டு மாதத்தில் மற்றொரு செமஸ்டர் தேர்வும் நடத்தப்படும். அரியர் மாணவர்கள் இரு வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.

பிரிவு-1: அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகளில் கடந்த 2000-ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் சேர்ந்தவர்கள்.

பிரிவு-2: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 2001-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்பு சேர்ந்தவர்கள் (3-வது செமஸ்டர் முதல்), 2002-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னர் சேர்ந்தவர்கள் (முதல் செமஸ்டர்).

அரியர் தேர்வுகள், அதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான விவரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (www.annauniv.edu), தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக இணையதளத்திலும் (coe1.annauniv.edu) விரிவாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.

பழைய அரியர் பாடங்களை எழுதி தேர்ச்சிபெற இதுதான் கடைசி வாய்ப்பு ஆகும். இனிமேல் எந்தவித வாய்ப்பும் அளிக்கப்பட மாட்டாது. எனவே, அரியர் வைத்துள்ள பழைய பொறியியல் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அந்த மாணவர்கள் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஆதாரம் : தி இந்து

Back to top