பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு கட்டணத்தை இன்று முதல் வரைவோலையாகவும் செலுத்தலாம்
பகிருங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு கட்டணத்தை இன்று முதல் வரைவோலையாகவும் செலுத்தலாம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு கட்டணத்தை இன்று (வெள்ளிக் கிழமை) முதல் வரைவோலையாகவும் (டி.டி.) செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கட்டணம் நெட்பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக மட்டுமின்றி வரைவோலையாகவும் பெற்றுக்கொள்ளப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தால் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்களில் மட்டும் 18-ம் தேதி (இன்று வெள்ளிக்கிழமை) முதல் வரைவோலைகள் ஏற்றுக்கொள்ளப்படும். வரைவோலையானது ‘The Secretary, Tamil Nadu Engineering Admissions, Anna University’ என்ற பெயரில் சென்னையில் செலுத்தக் கூடியதாக ஒரே தொகையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும். பதிவுக்கட்டணம் விவரம்:

பொதுப்பிரிவினர் - ரூ.500

எஸ்சி, எஸ்சி (அருந்ததி யினர்), எஸ்டி - ரூ.250

சிறப்பு ஒதுக்கீடுப் பிரிவு (ஒவ்வொரு பிரிவுக்கும்) - ரூ.100

ஆன்லைன் பதிவு மே 30-ம் தேதி முடிவடைகிறது.

ஆதாரம் : தி இந்து

Back to top