பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
பகிருங்கள்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

பொறியியல் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகமே தொடர்ந்து நடத்தும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் சென்னை வந்து கலந்தாய்வில் கலந்து கொண்டு கல்லூரிகளை தேர்வுசெய்வார்கள். மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 2018-ம் ஆண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறை கொண்டுவரப்படும் என உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், 2018-19-ம் கல்வி ஆண்டு முதல் பிஇ, பிடெக், பிஆர்க், எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் ஆகிய பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top