பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பிப்.13 முதல் தமிழகம் முழுவதும் இணையவழியில் மட்டுமே பத்திரப்பதிவு
பகிருங்கள்

பிப்.13 முதல் தமிழகம் முழுவதும் இணையவழியில் மட்டுமே பத்திரப்பதிவு

தமிழகத்தில் வரும் 13-ம் தேதி முதல் முழுமையாக இணைய வழியில் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல பதிவுத் துறை துணைத் தலைவர் சிவக்குமார் தெரிவித்தார்.

பத்திரப்பதிவை விரைவுபடுத்தவும் நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவும் 2.0 மென்பொருள் அறிமுகமாக உள்ளது. இணைய வழியில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் இன்று (பிப்.12) தொடக்கி வைக்க உள்ளார். இதையடுத்து பிப்.13 முதல் முழுமையாக (100 சதவீதம்) இணைய வழியில் மட்டுமே பத்திரங்கள் பதிவு செய்யப்படும்.

இணையவழி மூலம் ஆவணங்கள் கிடைத்ததும் இளநிலை உதவியாளர் ஆய்வு செய்து சார்-பதிவாளருக்கு அனுப்புவார். அவர் பரிசீலித்து ஆவணத்தை பதிவு செய்யலாம் என உத்தரவு தருவார்.

இதன் பிறகு எந்த நாள், என்ன நேரத்தில் பதிவு செய்யலாம் என்பதை சொத்து வாங்குபவரே முடிவு செய்யலாம். குறிப்பிட்ட நேரத்தில் பதிவு அலுவலகத்துக்கு நேரில் வந்தால் 10 நிமிடங்களில் ஆவணங்களை பதிவு செய்யலாம். அன்றே பதிவான ஆவணங்களையும் பெற்றுச் செல்லலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top