பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்தது
பகிருங்கள்

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்தது

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின், கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் மற்றும் புதுவையில் 22.32 லட்சம் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை யில் இதுவரை 22 லட்சத்து 32,451 இணைப்புகள் வழங்கப்பட்டுள் ளன. மேலும், 80 ஆயிரம் பேருக்கு புதிய இணைப்புகள் வழங்கப் பட உள்ளன. இதன்மூலம், இத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.

மேலும், எரிவாயு இணைப்பு வழங்குவது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாப்பகாக பயன்படுத்துவது குறித்து கிராமப்புற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு பாதுகாப்பு வழிகாட்டி அட்டை வழங்கப்படுகிறது. அத்துடன், எரிவாயு அடுப்பை பயன்படுத்தும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு உதவும் வகையில் ரூ..2.5 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top