பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்
பகிருங்கள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்கள்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வசதியாக சென்னை மாதவரத்தில் உள்ள மத்திய பனைப் பொருட் கள் பயிற்சி நிறுவனம் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறது.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கு பனைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு பனைப் பொருட்கள் தயாரிப்பு மட்டுமல்லாமல் தையல் கலை, அழகுக் கலை, தொங்கட்டம் உள்ளிட்ட செயற்கை ஆபரணங்கள், நாப்கின் தயாரிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். சூரியஒளித் தகடு பதித்தல், ஏசி மெக்கானிக், கணினி வன்பொருள், மென்பொருள், செல் போன் பழுதுபார்த்தல், தேனீ வளர்ப்பு போன்ற பயிற்சியும் உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது.

பயிற்சி முடித்தவர்கள் தொழில் தொடங்க விரும்பினால் ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வங்கிக் கடனுதவி 35 சதவீத மானியத்துடன் வழங்கப்படும்.

ஆதாரம் : தி இந்து

Back to top