பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை
பகிருங்கள்

புதிய வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை

வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வண்ணப் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது பதிவுகளில் திருத்தம் செய்வதற்கான படிவம்-8 மற்றும் முகவரி மாற்றத்திற்கான படிவம்-8ஏ, 3.41 லட்சம் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டன. அவர்களுக்கும் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாக்காளர்கள் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையத்தை அணுகி ரூ.25 கட்டணமாக செலுத்தி வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top