பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாத கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம்
பகிருங்கள்

மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாத கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம்

மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தாத கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை. இதனால் மழைநீர் சேமிப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறைந்து விட்டது. மழைநீர் சேமிப்பு வசதியில்லாத கட்டிடங்களுக்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என விதிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக எந்த கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை முறையாக ஏற்படுத்துவதில்லை. எனவே மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆதாரம் : தி இந்து

Back to top