பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / முதல்வர் கணினித் தமிழ் விருது: 2018 ஜன.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
பகிருங்கள்

முதல்வர் கணினித் தமிழ் விருது: 2018 ஜன.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ‘முதல்வர் கணினித் தமிழ்’ விருதுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டு முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர், நிறுவனத்திடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள் 2014, 15, 16-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இவ்விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் ‘www.tamilvalachithurai.org’ என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். விருதுக்கான விண்ணப்பம் 2018 ஜனவரி 2-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 28190412 அல்லது 044-28190413 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top