பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / வாக்காளர், வேட்பாளர் வசதிக்காக புதிய செயலிகள்
பகிருங்கள்

வாக்காளர், வேட்பாளர் வசதிக்காக புதிய செயலிகள்

வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் வகையில் புதிய கைபேசி செயலிகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காகசி விஜில்(cVIGIL) எனும் கைபேசிசெயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, நடத்தை விதிகள், தேர்தல் செலவு தொடர்பான விதிமீறல்களை புகைப்படம் அல்லது வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்யலாம். இந்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பெறப்பட்டு 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தகவல் அனுப்பியவரின் கைபேசி எண்ணுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இறுதியாக தேர்தல் அதிகாரியால் இறுதிநடவடிக்கை அறிக்கை அனுப்பப்படும். கைபேசி எண் இல்லாமல் வரும் தகவல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.

இதுதவிர, ‘PwD’ என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசிசெயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியில் சம்பந்தப்பட்ட வாக்காளர், தான் ஒருமாற்றுத்திறனாளி என்பதை அதில்உள்ள பிரிவுகள் அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் வாக்குச்சாவடியில் அவருக்கான வசதிகள் செய்யப்படும். இதுதவிர, வாக்காளர் பதிவு, முகவரி மாற்றம், திருத்தம் அல்லது நீக்கம், வாக்குச்சாவடி அமைவிடம், விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் வேட்பாளர், அரசியல்கட்சிகளுக்கான கைபேசி செயலிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘suvidha-nomination’ என்ற செயலியில், வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டபின், அவர்களுடைய ‘அபிடவிட்’களை பொதுமக்கள் இந்த செயலி மூலம்பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட 2 நாட்களில் இந்த விவரங்களை செயலியில் பெற முடியும்.

வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களுக்கான அனுமதிக்கு விண்ணப்பித்தல், உத்தரவு பெறுவதற்காக ‘suvidha-permission’ என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் விண்ணப்பித்தால், ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பெற்றுக் கொண்டதற்கான சீட்டு வழங்கப்படும்.

ஆதாரம் : தி இந்து

Back to top