பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பகிருங்கள்

வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வித்யாலட்சுமி இணையதளம் மூலம் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 6 மடங்காக அதிகரித்துள்ளது.

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. குறிப்பாக பொறியியல், மருத்துவம், வணிக மேலாண்மை போன்ற தொழில் சார்ந்த படிப்புகளுக்கு கல்வி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும் கல்விக் கடன் பெற்றவர்கள் வேலை கிடைத்த பின்னரும் கடனைச் சரியாக திருப்பி செலுத்துவது இல்லை என வங்கிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதன்காரணமாக ஏழை மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கி கிளைகளுக்கு செல்லும்போது அலைக்கழிக்கப்படுகின்றனர்.

எனவே கல்விக் கடன் பெற எளிதாக விண்ணப்பிப்பதற்காக www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் (விஎல்பி) 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15- ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 35 பொதுத்துறை, தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணையதளத்தில் எளிமையாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த பின்னர் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top