பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / விவசாயிகளின் தேவைகளை எளிமையாக்கும் இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகம்
பகிருங்கள்

விவசாயிகளின் தேவைகளை எளிமையாக்கும் இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகம்

விவசாயிகளின் தேவைகளை எளிமையாக்கும் இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இ-அடங்கல் திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. பயிர்க்கடன், தேவைகளை பெறுவதற்கு அடங்கல் முக்கிய ஆவணமாக உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்து, திருத்தம் செய்து வழங்குவார்கள். இன்று, இ-அடங்கல் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளே தங்கள் விவரங்களை இதில் பதிவு செய்யலாம். அடங்கல் பதிவேட்டை எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். விவசாயத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, புள்ளியியல் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறையினரும் இதை பார்வையிடலாம். மாறுபாடுகள் இருந்தால் ஒப்பிட்டு சரி செய்யும் வசதியும் உள்ளது.

இதன்மூலம், விவசாயிகள் பயிர்க்கடன் பெற நாட்கணக்கில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. இருந்த இடத்திலேயே இருந்து கைபேசி செயலி மூலம் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யலாம். விவசாயம் மட்டுமின்றி, அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து, நிவாரணங்களை அளிக்கவும் இந்த புள்ளிவிவரங்கள் உதவியாக இருக்கும். பேரிடர் காலங்களில் இந்த புள்ளிவிவரம் மிகவும் உதவியாக இருக்கும். கால விரயத்தை தடுப்பதாகவும் இ-அடங்கல் இருக்கும்.

மேலும், வருவாய்த் துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், கையால் எழுதப்படும் நிலையை மாற்றவும் தகவல் மேலாண்மை அமைப்பு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ‘TNSMART’ செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், வெப்பசலனம், வெப்பக்காற்று எச்சரிக்கைகளை பெறும் வசதியும் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top