பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவம்
பகிருங்கள்

வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவம்

வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 12-ம் தேதி கிழக்கு தாம்பரத்தில் இலவச சித்த மருத்துவம் அளிக்கப்படுகிறது.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கமும் இணைந்து வெண்புள்ளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து வழங்கி வருகின்றன. விட்டிலைகோ, லூக்கோடெர்மா எனப்படும் வெண்புள்ளிகள் தோலில் ஆங்காங்கே, திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளிகளாகவோ காணப்படும். வெண்புள்ளிகள் நோயல்ல; பிறருக்குத் தொற்றும் தன்மை கொண்டதல்ல.

வெண்புள்ளிகள் இருப்போருக்கு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தேசிய கரோடியா மேல்நிலைப் பள்ளியில் வரும் 12-ம் தேதி இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மருந்துகள் வழங்கப்படவுள்ளன. வெண்புள்ளிகள் இருப்பவர்கள் 044-22265507 / 22265508 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது 9840052464 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top