பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு
பகிருங்கள்

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பவர்களுக்கு நீட் தேர்வு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examina tion - FMGE) எழுத வேண்டும்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து படிக்கின்றனர். இங்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் சீனா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று மருத்துவம் படிக்கின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய வேண்டும் என்றால் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வை (Foreign Medical Graduates Examina tion - FMGE) எழுத வேண்டும். இந்நிலையில் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவர் களுக்கும் கட்டாயம் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற நடைமுறையை கொண்டுவர இந்திய மருத்துவ கவுன்சில் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

ஆதாரம் : தி இந்து

Back to top