பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Jan 22, 2019 10:28 AM முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை ஆகியோருக்கு உதவித் தொகை உயர்கிறது நாட்டில் உள்ள ஏழை முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 80 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு மாத உதவித் தொகையை உயர்த்த மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Jan 22, 2019 10:26 AM தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் தமிழகம் முழுவதும் அரசு நடுநிலைப்பள்ளிகளில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜியில் மாணவர் சேர்க்கைக்கான மழலையர் வகுப்புகள் தொடங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப் பட்டுள்ளது.
Jan 22, 2019 10:13 AM எஸ்எஸ்எல்சி தேர்வு - தனி தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு அரசுத் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவைமையத்துக்கு வரும் 23, 24-ம் தேதிகளில் (புதன், வியாழன்) நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Jan 21, 2019 10:51 AM ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை பிப். 15-க்குள் வெளியீடு ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவணை பிப்ரவரி 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Jan 21, 2019 10:39 AM ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7-ம் தேதி கடைசி நாள் ஜேஇஇ மெயின் ஏப்ரல் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நடைமுறை பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி முடிகிறது. ஏப்ரல் 6 முதல் 20-ம் தேதிக்கு இடையே தேர்வு நடைபெறும்.
Jan 21, 2019 10:22 AM போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு தமிழகத்தில் பிப்ரவரி 3-ம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Jan 21, 2019 10:29 AM ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட் தொகை உடனடியாக கிடைக்க புதிய திட்டம் ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட் தொகையை பயணிகள் உடனடியாக திரும்பப் பெற ஐஆர்சிடிசி சார்பில் ‘ஐ’ எனும் புதிய நுழைவு கட்டண முறை (பேமென்ட் கேட்வே) விரைவில் தொடங்கப்படவுள்ளது.
Jan 14, 2019 10:08 AM ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
Jan 12, 2019 10:07 AM அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் வரும் 21-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 2,381 மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
Jan 11, 2019 10:46 AM ஏழைப் பெண்கள் பயன்பெறும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் தமிழ்நாட்டில் 77 ஆயிரம் கிராமப் புற ஏழைப் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வளர்ப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.
Back to top