பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள்
பகிருங்கள்

செய்திகள்

தேதி தலைப்பு விவரம்
Nov 11, 2017 10:43 AM ‘இன்சூரன்ஸுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ அனைத்துவிதமான இன்சூரன்ஸ் பாலிசிகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) அறிவுறுத்தி உள்ளது.
Nov 11, 2017 10:40 AM முதல்வர் கணினித் தமிழ் விருது: 2018 ஜன.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ‘முதல்வர் கணினித் தமிழ்’ விருதுக்கு ஜனவரி 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
Nov 11, 2017 10:48 AM வெண்புள்ளிகளுக்கு இலவச சித்த மருத்துவம் வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் 12-ம் தேதி கிழக்கு தாம்பரத்தில் இலவச சித்த மருத்துவம் அளிக்கப்படுகிறது.
Nov 10, 2017 10:27 AM சிறப்பு எம்பிஏ படிப்பு சென்னை ஐஐடி அறிமுகம் பணியில் உள்ளவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான சிறப்பு எம்பிஏ படிப்பை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Nov 10, 2017 10:49 AM அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை சென்னை, விழுப்புரம், மதுரை ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ளது.
Nov 10, 2017 10:32 AM பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இனி ஆன்லைன் மூலம் கலந்தாய்வு பொறியியல் படிப்புக்கு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகமே தொடர்ந்து நடத்தும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
Nov 10, 2017 10:25 AM தேசிய திறனாய்வு தேர்வுக்கு புதிய அனுமதி சீட்டு தேசிய திறனாய்வுத் தேர்வுக் கான திருத்தப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
Nov 08, 2017 10:16 AM முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து சென்னை மாவட்டத்தில் நவம்பரில் நடைபெறுவதாக இருந்த எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முன் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
Nov 06, 2017 10:29 AM தொலைதூர பிஎட் படிப்புக்கு நவ. 30 வரை விண்ணப்பிக்கலாம் - திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Nov 06, 2017 10:16 AM இபிஎப்ஓ ஓய்வூதியதாரர்கள் நவ. 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களுடைய ஆயுள் சான்றிதழை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Back to top