பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / வறுமை ஒழிப்பு திட்டங்கள் / நகர்புற வறுமை ஒழிப்பு / நகர்புற மேம்பாட்டிற்கு உதவும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

நகர்புற மேம்பாட்டிற்கு உதவும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள்

நகர்புற மேம்பாட்டிற்கு உதவும் வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஒரு மாநிலம் அல்லது நகரத்திற்கான வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் (DCR) என்பது அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் பூகோள அமைப்புக்கேற்ப உருவாக்கப்படுகிறது. அந்த விதிகள் நகரத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை மற்றும் தரை பரப்பளவு ஆகிய காரணிகளுக்கு ஏற்ப அமைவதோடு, காற்று, வெளிச்சம் உள்ளிட்ட தட்பவெப்ப நிலைகளுக்கு தக்கவாறு வீடுகள் மற்றும் அதன் அறை அமைப்புகள் ஆகியவற்றின் அளவுகளையும் தெளிவுபடுத்துகிறது. இத்தகைய வளர்ச்சி கட்டுப்பாடு விதிகள், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

1971–ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் மற்றும் அதன் பிறகு திருத்தி அமைக்கப்பட்ட சட்டங்களின்படியும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அளவை ஆய்வு செய்து 1975–ல் சென்னை பெருநகர பகுதிக்கான முழுமை திட்டத்தை தயாரித்து அளித்து அரசின் ஒப்புதலை பெற்றது.

திட்ட எல்லைகள்

இந்த முழுமை திட்டம் ஏறத்தாழ 1170 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் சென்னை பெருநகர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அம்பத்தூர் தாலுகாவின் ஒரு பகுதி, தாம்பரம் மற்றும் திருவள்ளூர் தாலுகா, செங்கல்பட்டு தாலுகா, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பொன்னேரி தாலுகா மற்றும் பூந்தமல்லி தாலுகா பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. இப்பகுதியில் சென்னை மாநகராட்சி நீங்கலாக திருவொற்றியூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், அம்பத்தூர், ஆவடி, மாதவரம் மற்றும் கத்திவாக்கம் என 8 நகராட்சிகளும், 28 பேரூராட்சிகளும், ஏராளமான கிராமங்களும் அடங்கியுள்ளன.

சென்னை பெருநகரம் வளர்ச்சி பெறவும், நீண்டகால தேவைகளை எதிர்கொள்ளும்படியான கொள்கைகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவை இந்த முழுமை திட்டத்தில் அடங்கியுள்ளன. இந்த திட்டம் நில சீரமைப்பு மற்றும் கட்டிட பயன்பாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. தொழிற்சாலைகள், வணிக பகுதிகள், குடியிருப்புகள், விளையாட்டு திடல்கள் மற்றும் பெரிய அளவிலான நகர்ப்புற நிலங்கள் ஆகியவற்றை உரிய இடங்களில் வகைப்படுத்தி ஒன்றோடு ஒன்றை உரிய முறையில் இணைத்து செயல்படத்தக்கவாறு இந்த திட்டத்தில் ஒழுங்கு முறை செய்யப்பட்டுள்ளது.

நிலங்களின் வகைப்பாடுகள்

 1. ஆதார குடியிருப்பு பகுதி
 2. கலப்பு குடியிருப்பு பகுதி
 3. வணிக பகுதி
 4. இலகு ரக தொழிற்சாலை பகுதி
 5. பொது தொழிற்சாலை பகுதி
 6. அபாயகர தொழிற்சாலை பகுதி
 7. நிறுவன பகுதி
 8. திறந்தவெளி மற்றும் பொழுது போக்குப் பகுதி
 9. வேளாண்மை பகுதி
 10. நகர் மயமாகாத பகுதி

மேற்கண்ட ஒவ்வொரு பகுதியிலும் பொதுவான சில பயன்பாடுகள் அனுமதிக்கப்படும்.

மேலும், சில பயன்பாடுகள் பெருநகர் குழுமத்திடம் மேல் முறையீடு செய்யும் பட்சத்தில் தக்க ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும். மற்ற வகை பயன்பாடுகளுக்கு அனுமதி கிடையாது. சென்னைப் பெருநகர்ப் பகுதிக்குள் அடங்கிய வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அனுமதி வழங்கலானது சென்னை பெருநகர் பகுதிக்கான முழுமை திட்டத்தில் உள்ள வளர்ச்சி கட்டுப்பாட்டு விதிகள் அவ்வப்போது அரசின் ஒப்புதலோடு முறைப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் : டவுன் நீயூஸ் வார இதழ்

2.77777777778
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top