பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

காவல்துறை சீர்திருத்தம்

காவல்துறை சீர்திருத்தம்

Posted by Anonymous at September 30. 2015
காவல்துறையில் சீர்திருத்தம் மிகவும் அவசியம் முறையான விசாரணையில்லாமல் பல மர்ம மரணங்களுக்கு காவல் துறைதான் பெறுப்பு. பணம் பலம். ஜாதிய செல்வாக்கால் நடைபெறும் காவல் துறையின் செயல்களை இன்று ஊடங்கள் அதிகமாக டவெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. இருந்தும் சீர் செய்ய முடியவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமாக தொடர காவல்துறை சீர்திருத்தம் தேவை. கே.பி. இளங்கோவன் ஆண்டிப்பட்டி, மதுரை

Re: காவல்துறை சீர்திருத்தம்

Posted by Anonymous User at February 23. 2016
காவல் துறை சீர் திருத்தம் அவசியம்தான் விசாரணை என்ற பெயரில் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று முறையான வாரன்ட் இல்லாமலும் கோர்ட் ஆர்டர் இல்லாமலும் பெண் கைதிகளை நடத்த வேண்டிய முழுமையான புரிதல் இல்லாமலும் காவலர்களே இவர்தான் குற்றவாளி என்று தீர்மானித்து தண்டனை நிறைவேற்ற துணிவது சட்டப்படி குற்றமாகும். இந்த நடைமுறையில் பாதிக்கப்பட்டவர் இறந்து விட்டால் வேறு விதமாக கதை கட்டி விடுவது என்கௌன்ட்டர் என்ற போர்வையில் பலியிடுவது போன்ற சில காவலர்கள் செய்வது ஒட்டு மொத்த காவல் துறைக்கே களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. பொது மக்களை நண்பர்களாக எண்ணும் நோக்கம் உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து செயல் பட வேண்டும். அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை மிரட்டுவதை விட்டு விட்டு அதே அதிகாரத்தால் அன்பான முறையில் பொது இடங்களில் மக்களிடம் நாகரீகமாக நடந்து கொண்டால் காவலர்க்கு உரிய மரியாதையும் கௌரவமும் தானாக உண்டாகி நற்பெயரையும் வாங்கலாம். இதை கவனத்தில் கொண்டு முயற்சித்து நடைமுறை செய்வார்களா? நமக்கு மட்டுமின்றி நம்மை சார்ந்த துறைக்கும் நற்பெயர் பெற்று தர முயற்சிப்பார்களா ?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top