பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வீடு மற்றும் மனைகளின் தர மதிப்பீடு

தேசிய வீட்டு வசதி வங்கியின் வீடு மற்றும் மனைகள் தர மதிப்பீடு செய்யும் முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

பெருநகர பகுதிகளில் வீடு அல்லது மனை வாங்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள சொத்தின் சந்தை விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ள விரும்புவது வழக்கம். அதற்கான தகவல்களை தேசிய வீட்டு வசதி வங்கி (National Housing Bank Residex) இந்திய அளவில் புள்ளி விபரங்களை வழங்கி வருகிறது.

குறியீடுகள்

குறியீடுகளாக உள்ள அந்த தகவல்கள் மூலம், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள வீடு அல்லது மனைகளின் தற்போதைய விலை மற்றும் 3 மாதங்களுக்கு முந்தைய விலை நிலவரம் போன்ற தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சொத்தை வாங்குவது பற்றி முடிவு செய்ய இயலும். குறிப்பாக, தேசிய வீட்டு வசதி வங்கியின் ‘ரெசிடெக்ஸ்’ குறியீடுகள் அடிப்படையில் வீடு அல்லது மனையின் விலையை பேரம் பேசி நிர்ணயிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

தேசிய வீட்டு வசதி வங்கி அளிக்கும் ‘என்.எச்.பி ரெசிடெக்ஸ்’ குறியீடு என்பது இந்திய அளவில் வீடு மற்றும் மனைகளின் விலைகளுக்கான அதிகாரப்பூர்வ மதிப்பீடாகும். இந்திய அரசு நிதி அமைச்சகத்தின் கீழ் தேசிய வீட்டு வசதி வங்கி இந்த முறையை செயல்படுத்தி வருகிறது. 2007–ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மதிப்பீட்டு முறை தக்க தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் வழிகாட்டுதலின் கீழ் அட்டவணையாக தொகுத்து வழங்கப்படுகிறது.

மேற்கண்ட குறியீடுகள் மூலம் ஒரு வீடு அல்லது மனையின் ஒரு சதுர அடி விலை, சதுர மீட்டர் விலை, வீட்டின் சராசரி விலை மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள வீட்டு வாடகை நிலவரம் என பல அம்சங்களை கவனித்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.

என்.எச்.பி ரெசிடெக்ஸ் புள்ளி விபரங்கள்

வீட்டு விலை குறியீடு (Housing Price Indices), நிலத்தின் விலை குறியீடு (Land Price Indices)  மற்றும் கட்டுமான பொருட்கள் விலை குறியீடு (Building Materials Price Indices), மேலும் வீட்டு வாடகை குறியீடு (Hosing Rental Index)  ஆகியவற்றை உள்ளடக்கிய என்.எச்.பி ரெசிடெக்ஸ் புள்ளி விபரங்கள் மூலம் மார்க்கெட் நிலவரம் பற்றி அறிந்து செயல்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் 4 காலாண்டுகளுக்கு ஒரு முறை வீடு மற்றும் மனை மதிப்புகள் வெளியிடப்படுகின்றன. தமிழக அளவில் சென்னை, கோவை ஆகிய இரு நகரங்கள் மட்டுமே ‘ரெசிடெக்ஸ்’ குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

ஆதாரம் : முற்றம் மாத இதழ்

Filed under:
3.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top