பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஆயில் மில் – சுயதொழில்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆயில் மில் – சுயதொழில்

ஆயில் மில் – சுயதொழில் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், அசைவ உணவுகள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.

முதலீடு

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்

இத்தொழிலில் வேலையாட்களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

மூலப் பொருட்கள்

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது.

இயந்திரம்

எக்ஸ்பெல்லர், வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.

தயாரிப்பு முறை

  • தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம்.
  • இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள்.
  • பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது.
  • இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

ஆதாரம் : தொழில்யுகம் மாத நாளிதழ்

3.14545454545
ராமலட்சுமி Aug 02, 2019 10:08 PM

எந்த வகை மரம், கல், இரும்பு எந்த செக்கை பயன் படுத்துவது

வேல் முருகன் May 29, 2019 09:04 AM

வேப்ப எண்ணெய் இயந்திரம் என்ன விலை வரும்? வேப்ப எண்ணெய் எவ்வாறு தயாரிப்பது பற்றி விளக்கம் கிடைக்குமா

ராஜ் Aug 27, 2018 10:16 AM

மிகவும் பயனுள்ள தகவல்... மரசெக்கு இயந்திரம் 80000 வரும். ஆனால் நீங்கள் உற்பத்திசெய்து கொடுக்கும் எண்ணெய் மிகவும் தரமானதாக இருக்கவேண்டும். சல்பர் பயன் படுத்தாத தேங்காக்களை பயன்படுத்துங்கள். இயற்கையே சிறந்தது.

எம். மாலினி Mar 22, 2018 04:48 PM

நானும் மரச்செக்கு இயந்திரங்கள் வாங்கி தொழில் தொடங்க விரும்புகிறேன். அதற்கான விவரங்கள் தேவை

Easanatham, R, SELVARAJ Mar 14, 2018 03:20 PM

எந்த வகை செக்கு போடலாம் 1) மரசெக்கு,2)கல் மரசெக்கு, 3) இரும்பு செக்கு இந்த மூன்று வகை செக்கில் எதை தேர்வு செய்து போடலாம் நண்பர்களே

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top