பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு

ஊறுகாய் மற்றும் தக்காளி ஜாம் தயாரிப்பு முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தக்காளி

''தக்காளிக்கு வருடம் முழுவதும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமாக இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரையில் விளைச்சலை அப்படியே சந்தையில் விற்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அதற்க்கு மேல் யோசிப்பதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்திற்க்குக் காரணம். விலை குறையும் போது சாலையில் கொட்டி வீணாக்குவதற்கு பதிலாக அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ மாற்றினால் நஷ்டம் வருவதற்க்கு வாய்ப்பே இல்லை.

உதாரணமா, ஒரு கிலோ தக்காளியில் சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரித்தால், 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்றைய சந்தையில் 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபா வரை விற்கப்படுகிறது. குறைந்தபட்சம் 20 ரூபாய் என்றாலும், 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதற்க்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழித்தாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வைத்துக் கொண்டால், தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும்''

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்:

நன்றாகப் பழுத்தத் தக்காளி - ஒரு கிலோ, மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - 1 ஸ்பூன், ரீஃபைண்ட் ஆயில் - 250 மில்லி, பூண்டு - 20 பல், பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு

தக்காளியை நன்றாக சுத்தம் செய்து மிக்ஸியில் நன்கு கூழாகும் வரை அரைக்க வேண்டும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வாணலியில் இட்டு அடுப்பில் வைத்துச் சூடாக்க வேண்டும். நன்கு கொதிக்கும் நிலையில் நீர்வற்றி கெட்டியாக மாறும். அப்போது சூடு படுத்திய எண்ணெயை தக்காளியுடன் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு மிதமாக எரியும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கலவை கொதி வந்த பிறகு, கலவையில் உள்ள எண்ணெய் முழுவதும் பிரிந்து வரும் வரை வேகவிட்டு, பின்பு இறக்க வேண்டும்.

பிறகு, வறுத்துத் தூளாக்கிய வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி தக்காளிக் கலவையில் சேர்த்து, நன்றாக ஆறவிட்டு, ஈரம் இல்லாத பாட்டில்களில் நிரப்பி மூடி வைக்க வேண்டும். இது, சாதாரண நிலையிலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாத்தால் நீண்டநாட்களுக்கு வைத்திருக்கலாம். இதை, அனைத்து உணவுகளுக்கும் தொட்டுச் சாப்பிட பயன்படுத்தலாம்.

தக்காளி ஜாம்

தேவையான பொருட்கள்:

தக்காளி பழக்கூழ் - ஒரு கிலோ. சர்க்கரை - 750 கிராம். சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி.

தக்காளியைச் சுத்தம் செய்து தோல், விதைகளை நீக்கி சதைப்பகுதிகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவற்றை மிக்ஸி மூலம் கூழாகும் வரை அரைத்து வடிகட்ட வேண்டும் (இதுதான் தக்காளி பழக்கூழ்). கொஞ்சம் போல தண்ணீர் எடுத்து, அதில் சிட்ரிக் அமிலத்தைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளிக் கூழை பாத்திரத்தில் இட்டு, சிறிது நேரம் வேகவிட்டு ஒரு கொதி வந்தவுடன் சர்க்கரையைச் சேர்த்து, அடுத்து சிட்ரிக் அமிலம் கலந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் கலவையை ஒரு ஸ்பூனில் சிறிதளவு எடுத்து ஒரு தட்டில் ஊற்றிப் பார்த்தால்... கெட்டியாக விழ வேண்டும். அதுவரை கலவை வேக வேண்டும். இந்தப் பதம் வந்தபின் பாத்திரத்தை இறக்கி வைத்து கொஞ்சம் மட்டும் ஆறவிட்டு, வாய் அகன்ற கண்ணாடி பாட்டில்களில் சூடாகவே நிரப்பி வைக்க வேண்டும். இந்த நிலையிலேயே முழுவதும் ஆறவிட்டு, அதன்பிறகு பாட்டில்களை மூடி வைக்க வேண்டும். சூடானக் கலவையை பாட்டில்களில் நிரப்பும்போது பாட்டில்களை தரை மீது வைப்பதைத் தவிர்த்து, மரப்பலகை மீது வைத்துக் கொண்டால், சூட்டின் மூலம் பாட்டில்கள் உடைந்து போகாமல் தடுக்க முடியும்.

விற்பனை

நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்''.

முருங்கைக்காய் ஊறுகாய் தயாரிப்பு


முருங்கைக்காய் ஊறுகாய் தயாரிப்பு

ஆதாரம் : தீபம் கல்வி மற்றும் பயிற்சி ­­மையம், சென்னை

3.08955223881
Anonymous Dec 17, 2018 11:57 AM

பாரம்பரிய முறையில் பாறைஉப்பு, மரச்செக்கு நல்லெண்ணை, விளக்கெண்ணை பயன்படுத்தி தயாரிக்கப்படும் எலுமிச்சை ஊறுகாய்-க்கு மொத்த கொள்முதல் நிறுவனம் உள்ளதா?

பாரூக் பாட்ஷா Nov 23, 2017 06:49 AM

அருமை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top