பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கான தடைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கான தடைகள்

தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களுக்கான தடைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள பழமையான தொழிலாளர் சட்டங்கள் தொழிற்சாலைக்கு உகந்த தொழிலாளர் சந்தையை உருவாக்குவதில் மிகப்பெரும் தடைக்கற்களாக உள்ளன. தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைவுபடாமல் தொழிலாளர் சட்டங்கள் தொடர்ந்து பார்த்து  கொள்கின்றன. போட்டியில் இருந்து உள்நாட்டு தொழிலதிபர்களை பாதுகாத்த தொழில் உலகின் பாதுகாப்பு கவசம் 1991க்கு பிறகு மறைந்த விட்டது. 1991 இல் இருந்து கிளைத்தெழுந்த உலகமயமாதலும் தாராளமயமாதலும் இந்தியச் சந்தையில் சர்வதேச தொழில் அதிபர்களைக் காலூன்ற அனுமதித்தன. இதனால் வியாபாரம் மற்றும் வர்த்தகத்தின் சூழலானது அடிப்படையில் மாறியது. தற்காலிக ஊழியர், மூன்றாம் தரப்பு வேலை, முதலாளி, மாறிவரும் போக்குகளுக்கு ஏற்ப தொழிலாளர் சட்டங்களை இயற்றுவது தேவையாகின்றது. தொழிற்சாலைகள் அனைத்திலும் தொழிலாளர் தர மதிப்பீடுகள் செயல்படுத்தப்பட்டாக வேண்டும்.

தொழிலாளர்களின் புள்ளி விவரம்

நாடு முழுவதும் உள்ள குறிப்பிடத்தக்க தொழில்திறன் போதாமை என்ற விஷயமானது இந்தியத் தொழிலாளர் சட்டங்கள் என்பதைக்காட்டிலும் தொழிலாளர் சந்தையில் மந்தமாகவே உள்ளது. குறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் இல்லை.  உள்நாட்டு பெரிய தொழில் அதிபர்களும் குறுசிறு நடுத்தர தொழில்களில் ஈடுபடும் தொழில்முனைவோர்களும் தொழில்திறன் பெற்ற ஊழியர்கள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.  திட்டக்குழுவின் ஒரு ஆய்வு (2001) ஊரகப் பகுதிகளில் ஆண் தொழிலாளர்கள்களில் 10.1% பேரும் பெண் தொழிலாளர்களில் 6.3% பேரும் குறிப்பிட்ட சந்தைக்கு தேவையான தொழில்திறன்களைக் கொண்டுள்ளனர். அதே போன்று நகரப் பகுதிகளில் ஆண் தொழிலாளர்களில் 19.6 %  பேரும் பெண் தொழிலாளர்களில் 11.2% பேரும் தேவையான தொழில்திறன்களைப் பெற்றுள்ளனர் என்கிறது. மேலும் இந்த ஆய்வின்படி, 20/24 வயதுப் பிரிவில் உள்ள இந்தியத் தொழிலாளர்களில் 5 % பேர்தான் தொழில்படிப்புத் திறன் பெற்றுள்ளனர்.  தொழில்யுக நாடுகளில்  இந்த சதவிகிதம் மிக அதிகமாகும்.  அதாவது இந்த நாடுகளில் இது 60 % முதல் 80 % வரை உள்ளது.

தொழிலாளர் கொள்கை

தொழில்படிப்பு சார்ந்த திறன்களில் அடிப்படையில் மெக்சிகோ போன்ற சில வளரும் நாடுகளைவிட இந்தியா மோசமான நிலையிலேயே உள்ளது. மெக்சிகோ நாட்டில் தொழில்படிப்பு சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்களின் சதவிகிதம் 28%ஆகும். கட்டுப்பாடுகள் தளர்ந்த தொழிலாளர் சந்தையை உருவாக்குகின்ற முயற்சிக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது ஒருமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் கொள்கை இல்லாததே ஆகும். கட்டுப்பாடற்ற தொழிலாளர் சந்தைதான் நாட்டில் போட்டி நிறைந்த உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கான சூழல்சார் அமைப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் இருக்க அனைத்தும் செய்கின்றன, என்றாலும் ஒருமுகப்படுத்தப்பட்ட தேசிய தொழிலாளர் கொள்கை சரிவர இல்லாமலேயே உள்ளது.  இதற்கு மாறாக அரசாங்கம் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களைச் செய்கிறது.  இதனோடு தேசிய உற்பத்திக் கொள்கை, திறன் மேம்பாடு குறித்த தேசியக் கொள்கை, தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை, ஹெக் ஐ.வி / எய்ட்ஸ் குறித்த தேசியக் கொள்கை, பாதுகாப்பு குறித்த கொள்கை, பணியிடத்தில் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் என பலவற்றில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த சுட்டிக்காட்டல்கள் உள்ளன.  தொழிலாளர் கொள்கை குறித்த கடைசிச் சுவடுகள் மூன்றாவது ஐந்தாண்டு திட்ட வரைவு ஆவணத்தில் காணக் கிடைக்கின்றன.  அந்தக் கொள்கை வழக்கொழிந்தது ஆகும். உலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப தொழிலாளர் சந்தையை தாராளமயமாக்குவதில் அத்தகைய திசையற்ற தற்காலிக முயற்சிகள் நல்லது எதையும் செய்யவில்லை.

பழமையான தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும் என்பதுதான் இந்தியாவில் தொழிலாளர் சீருதிருத்தச் சொல்லாடல்களின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. இந்தச் சட்டங்கள் அனைத்தையும் விரிவாக மீளாய்வு செய்வது என்பது நிச்சம் தேவையான ஒன்றாகும். சட்டங்கள் எளிமையாக்கப்பட வேண்டும் என்பதோடு தற்காலப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு இயற்றப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக நடப்புக்கால சர்வதேச நடைமுறைக்கு ஏற்ப இருக்க வேண்டும். சல சமயங்களில் பிரச்சனையாக சட்டங்கள் இருப்பதில்லை. நீண்டு தொடரும் சட்ட நடைமுறைகள்தான் பிரச்சனையாக உள்ளன. இதனால் தொழிலாளரை வாடகைக்கு அமர்த்தும் செலவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது. இதனோடு தொடர்புடைய இடைஞ்சல்களையும் இது அதிகரிக்கிறது. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளுடனும் அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பல்வேறு ஆய்வாளர்களால் சில பிரச்சனைகள் உள்ளன. வேலை அளிப்பவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகப்படியான அதிகாரத்தை இந்த அமைப்புகள் பயன்படுத்துகின்றன (அதாவது லஞ்சம் பெறும் நோக்கில் அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றன) என்ற புகார்களும் தொழிற்சாலைகளால் அடிக்கடி எழுப்பப் படுகின்றன. இது சிறிய அளவிலான தொழில்முனைவோர்களுக்கு அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்துகின்றன. தொழிலாளர் சட்டங்களை மேலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

ஒருங்கிணைத்த சட்டத்தை உருவாக்கும் தருணம்

தற்போது இருக்கின்ற தொழிலாளர் சட்டங்களில் உள்ள அபத்தங்கள், இரட்டைத் தன்மைகள் மற்றும் இருண்மைகளை நீக்க வேண்டியது முக்கியமாகும். அப்போதுதான் சட்டம் குறித்த எவ்விதமான பயமும் இல்லாமல் நாட்டில் உள்ள தொழிலாளர் சந்தையின் முழு ஆற்றலையும் முடக்கிவிக்கூடிய ஒரு நல்ல நிலைமைக்கு தொழில் உலகம் வரும். வேலைவாய்ப்பு நடைமுறைகளைப் பொறுத்த அளவில் ஒரு உகந்த சூழ்நிலையை தொழிலாளர் சட்டங்கள் பேணிப்பாதுகாக்க வேண்டும். விரைவில் நாம் விதிகளுக்கு உட்பட்டு நடத்தல் என்கின்ற மனோபாவத்தை தாண்டியாக வேண்டும் (தொழிலாளர் சட்டங்களின் இறுக்கத்தால் ஏற்பட்டவை) உற்பத்தி மற்றும் அதேபோன்று சேவை பிரிவுகளில் உலகளாவிய போட்டியை மேம்படுத்துகின்ற நமது வாய்ப்புகளே சிறந்தவை ஆகும்.

தற்போது உள்ள தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக அரசாங்கம் மாற்ற வேண்டிய சரியான தருணமும் இதுவே ஆகும். இந்தச் தனிச் சட்டத்தில் தொழிலாளர் ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பணியிடத்தில் பாதுகாப்பு, நல்வாழ்வு அம்சங்கள், வேலைவாய்ப்பு குறித்த விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் தொழிற்சங்கங்களை அங்கீகரித்தல், ஒன்றாகச் சேர்ந்து ஒரு விஷயத்திற்காகப் பேரம் பேசுதல் மற்றும் அனைத்திற்கும் மேலாக சர்வதேச தொழிலாளர் தரமதிப்பீடுகளை நடைமுறைப்படுத்துதல் போன்ற தனிப்பட்ட பிரிவுகள் இருக்க வேண்டும். மாநில அரசுகள் மத்திய சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக இருக்கலாம். அல்லது பிராந்திய முக்கியத்துவத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக மாநில அரசுகள் குறைந்த மாற்றத்துடன் இதே போன்ற சட்டத்தை இயற்றிக் கொள்ளலாம். அனைவருக்கும் ஏற்றதாக இருந்தால் மட்டுமே அத்தகைய ஒரு சட்டம் பயனுள்ளதாக இருக்கும். முறைசார்ந்த மற்றும் முறை சாராத பிரிவுகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏற்றதாக சட்டமானது இருக்க வேண்டும்.

விரிவான மற்றும் ஒருமுகப்படுத்தப்பட்ட தேசிய தொழிலாளர் கொள்கையை உருவாக்காமல் தொழிலாளர் சந்தையில் புரட்சிகரமான சட்டத்திருத்தங்களை கொண்டுவர இயலாது.  இதற்கு இந்திய அரசாங்கம் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்த தேசிய கொள்கை வரைவை அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலோடு உருவாக்க கவனம் செலுத்த வேண்டும். தொழில் உலகத்தைத் திருப்தி செய்வதற்காக தொழிலாளர் சட்டங்களில் சில ஷரத்துகளை திருத்தம் செய்யும் தற்காலிக அணுகுமுறையைத் தொடர்வதைவிட தொழிலாளர் கொள்கையை உருவாக்குவது அவசியம் ஆகும். கடந்த 20 ஆண்டுகளில் எண்ணற்ற ஆய்வுகளில் ஆலோசனைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கும் வகையில் தேசியத் தொழிலாளர் கொள்கை வரைவை உருவாக்குவது எளிதானதாகவே இருக்கும்.

அதிக அளவிலான தானியங்கி உற்பத்தி முறைச் சூழல் இருக்கும் நிலையில் நாட்டில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. எனவே புதிய வேலை வாய்ப்புகளை இந்திய அரசாங்கம் உருவாக்க வேண்டியதும் முக்கியமானதாகும்.  இந்தியாவில் உருவாக்குங்கள் என்ற இயக்கம் ஏற்கனவே முதலீடுகளை ஈர்க்க ஆரம்பித்து விட்டது என்றாலும் உற்பத்தித் துறையில் அதற்தேற்ப குறிப்பிடத்தக்க மிக அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.  இதற்காக மிக அதிகத் திறமைகளுடன் சேவைத் துறையில் இந்திய இளைஞர்கள் வேலையில் அமர அரசு உதவ வேண்டும். அதிகத் திறன் பெற்ற நபர்களால் தொழிலாளர் சந்தையானது நிரம்பியிருக்கும் போதுதான் தொழிலாளர் சீர்திருத்தம் என்பது உண்மையான அர்த்தத்தில் அமையும். வேலையளிப்போரால் தான் சுரண்டப்படலாம் எனற பயம் ஏதுமின்றி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் மதிப்பு கூட்டப்பட்டவர்களாக தொழிலாளர் சந்தையில் இவர்கள் இருக்கும்போதுதான் சீர்திருத்தம் என்பது அர்த்தம் பெறும். எனவே அண்மைக்காலத்தில் இந்திய அரசாங்கம் எடுத்து வரும் தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கான முயற்சிகள் வரவேற்கப்படக் கூடியவைதான். அதேநேரம் தொழிலாளர்களை அவர்களது திறனை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கான அதிகாரத்தை பெறச் செய்வதும் அதே அளவிற்கு முக்கியமானதாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆசிரியர் : பிரவீன்ஜா

3.09523809524
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top