பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / திறன் மேம்பட்டிற்கு தேசிய அளவில் நிதி அளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திறன் மேம்பட்டிற்கு தேசிய அளவில் நிதி அளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம்

திறன் மேம்பட்டிற்கு தேசிய அளவில் நிதி அளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

திறன் பயிற்சியின் தேவை

திறன்மிக்கப் பணியாளர்களுக்கான தேவை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கிறது. 2022 ஆம் ஆண்டுவாக்கில் 400 மில்லியன் பேருக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான தேவை இருப்பதாக தேசியத்திறன் கொள்கை 2015 கூறுகிறது. நம் நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 5 மில்லியன் பேர்களுக்கு மட்டுமே திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை நிலவரமாக இருக்கிறது. இதனை மேலும் அதிகப்படுத்துவதற்கு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இதற்கான நிதி ஒதுக்கீடு பொது வரி வருவாயைச் சார்ந்து குறைவான அளவிலேயே செய்யப்படுகிறது. பெருநிறுவனங்களின் சமூகப்பொறுப்புணர்வு என்பது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. நிறுவனம் சார்ந்த பயிற்சி என்பது 39 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கிறது. இதையுமே பெரிய நிறுவனங்கள் மட்டுமே நடத்திவருகின்றன.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி

திறன் மேம்பாட்டு அமைச்சகம் புதிதாக உருவாகியிருக்கிறது. திறன் மேம்பாட்டிற்கென உலகவங்கி தரும் கடனை இது பெற்றுவருகிற போதிலும் இந்திய அரசின் லட்சியமான திறன்மிகு இந்தியாவை அடைவதற்கு இன்னும் அதிகமான நிதி தேவைப்படுகிறது. திறன் மேம்பாட்டிற்கு நிதி அளிப்பதில் வெற்றிகண்டுள்ள நாடுகளில் பெரும்பாலும் தனியார்துறை உந்துதலினால் ஏற்பட்டதாகவே இருக்கிறது. நிதி வழங்குதலின் உந்துதலுக்கேற்பவே திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் அளவும் தன்மையும் இருந்து விடுகிறது. திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொழில் துறையின் வழிகாட்டுதலுடனும், நிதி வழங்கலுக் கேற்ற உந்துதலுடனும் இருப்பது என்பது தோல்விக்கான ஒரு செயல் முறையாகவே இருக்கும். திறன் மேம்பாட்டு தேசியக்கழகத்தின் நிதியுடன் செயல்படும் தனியார் தொழில் பயிற்சிமையங்களும் கூட நிதி வழங்கலுக்கேற்றபடி தொழில் பயிற்சியை அளிக்கின்றன. இதன் விளைவு தரமில்லாத பயிற்சி. திறன் பயிற்சிக்கு நிதி வழங்குவதற்கான மாதிரி ஒன்றை உருவாக்குவது பற்றி மத்திய அரசு சிந்திக்கவேண்டும். இந்த மாதிரி பின்வரும் அமைப்பில் இருக்கும்:

திறன்மேம்பாட்டிற்கென சிறப்பாக ஒதுக்கப்படும் நிதியை வேறு வகையாக செலவிடும் நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படவேண்டும். பயிற்சிகளுக்காகும் செலவை இது போன்ற தனிப்பட்ட நிதியில் இருந்து நிறுவனங்கள் எடுத்து கொள்ள வேண்டும். உலகில் ஏறத்தாழ 63 நாடுகள் இதுபோன்றதொரு விருப்பத்தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் பிரேசிலையும் சேர்த்து 17 நாடுகள் உள்ளன. சகாராவுக்கு கீழ் இருக்கும் ஆப்ரிக்கப்பகுதியில் 17 நாடுகளும் ஐரோப்பாவில் 14 நாடுகளும் மத்திய கிழக்கிலும் வட அமெரிக்கப்பகுதியிலும் 7 நாடுகளும் ஆசியாவில் 7 நாடுகளும் இத்தகைய நிதியை உடையனவாக உள்ளன.

தேசியப் பயிற்சி நிதியை இந்தியாவில் இப்போது ஏன் உருவாக்க வேண்டும்?

நாம் முதலில் கண்டதை போல தற்போதைய திறன் மேம்பாட்டு திறம் ஒரு அளவுக்கு உட்பட்டதாகவே உள்ளது. இரண்டாவதாக கடந்த பத்தாண்டுகளின் மத்தியில் திறன் மேம்பாடு முன்னுரிமை கொண்டதாக மாறியது. தொழில்நுட்பக்கல்வியும் பயிற்சியும் தொழில்கள் சார்ந்த கல்வியும் பயிற்சியும் வழங்குவதற்கான வாய்ப்புகளை விரிவாக்குவது என்பதுமிக மெதுவாகவே அதிகரித்து வந்துள்ளது. தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதும் தேசியத்திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியோடு தொழிற்பயிற்சி தருபவர்களின் (VTP) எண்ணிக்கை பெருகி இருப்பதும் திறன்பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 5 மில்லியனாக உயர்த்தியுள்ளன. எனினும் இந்த வேகத்தில் சென்றால் இந்தியாவில் உற்பத்தி என்ற நமது இலக்கை அடைய முடியாது. இளைஞர் சக்தி பயன்படுத்தப்படாமல் வீணாகும். குடிமக்களின் மூலம் கிடைக்க கூடிய ஈவு தேசத்திற்குக் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது.

மூன்றாவதாக திறன் மேம்பாட்டிற்காக திரட்டப்படக்கூடிய பொது வருவாய்க்கு ஒரு எல்லை இருக்கிறது. பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய நிலை ஒரு புறமும், சுகாதாரம் கல்வி உள்கட்டமைப்பிற்கான முதலீடு போன்ற பலவிதமான முக்கிய சுமைகள் மறுபுறமும் அரசுக்கு இருக்கின்றன.

நான்காவதாக திறன் மேம்பாடிற்கான ஆதாரங்களுக்கு நிதி அளிப்பது உலகெங்கும் தனியார் துறையாகவே இருக்கிறது. இதன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள் தனியார் துறையினரே. வழிவகுத்துத்தரும் பங்குப்பணி மட்டுமே அரசுகளுக்கு உள்ளது. இந்த கடினமான பணிக்கு தன்னையும் உயர்த்திக்கொள்ளும் தேவை அரசுக்கு இருக்கிறது. எனவே ஒரு தேசிய பயிற்சி நிதியம் விரைவாகத் தேவைப்படுகிறது. இந்த நிதியத்திற்கு சாத்தியமாக ஒரு வடிவம் பற்றி இங்கே அலசப்படுகிறது.

அ. ஒழுங்குபடுத்தப்பட்ட பிரிவிடம் இருந்தும் நடுத்தர, பெரிய நிறுவனங்களிடம் இருந்தும் தீர்வைகளை வசுலிப்பது

உற்பத்திப்பொருள்கள் உருவாக்கத்தில் முறைசாராப் பிரிவின் பங்கு 22 % ஆனால் வேலைவாய்ப்பு அளிப்பதில் இந்த பிரிவின் பங்கு 85 %  எனவே, இந்தியாவில் தீர்வை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்தே முதலில் தொடங்கப்படவேண்டும். அதிலும் நடுத்தர பெரிய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே தீர்வை பெறப்படவேண்டும். சிறிய நிறுவனங்களிடமிருந்து வரி வசூலிப்பது மிகவும் கடினம். அவர்களிடமிருந்து அதிகமான எதிர்ப்பும் கிளம்பும்.

ஆ. பயன்பெறுவோர் இரு பிரிவுகளிலும் இருக்க வேண்டும்

முறை சாரா விதத்திலான தொழில்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்கள் திறன்களை வேலை பார்க்கும் இடத்தில் அனுபவத்தின் மூலமாக மட்டுமே வளர்த்துக் கொள்கின்றனர். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு நிதியாவது இவர்களின் பயிற்சிக்கென ஒதுக்கி வைக்கப்படவேண்டும். பெரிய நிறுவனங்களும், நடுத்தர நிறுவனங்களும் பயிற்சிகென அதிக பணம் தருவதால் குறிப்பிடத்தகுந்த அளவில் அவைகளும் பயன் பெற்றாகவேண்டும். தற்போதுள்ள தொழில் பழகுநர் பருவத்திட்டம்  (1961 ஆம் ஆண்டு சட்டம்) இந்த செயல்பாட்டுடன் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். முறைசார்ந்த, முறைசாராத தொழில் பிரிவுகள் இரண்டுக்கும் உள்ள பங்கு பற்றி சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டப்பட வேண்டும். இதன் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில் பிரிவினருக்கு இந்த அமைப்பு முறையில் பங்கு கிடைக்கும் பொது வருவாயில் இருந்து பெறப்படும் நிதி முறைசார பிரிவுக்கான திறன் மேம்பாட்டுக்குப் பயன்படும்.

இ. பயிற்சி ஊதியம்

வரலாற்று ரீதியாக காணும் போது இந்தியாவில் பயிற்சிக்கான முன்னேற்பாடு அதற்கான நிதி வழங்கப்படுவதைப்பொறுத்தே நடைபெற்று வந்திருக்கிறது. பயிற்சித்தீர்வைப்பணத்தின் மூலம் இவர்களுக்கு உதவி செய்வது மிக வலுவான தேவையாக இருக்கிறது. ஏழை மாணவர்கள் தங்களின் பிழைப்பிற்காக முதலில் சம்பாதித்தாக வேண்டும். பயிற்சி பெற்ற பிறகு வேலைக்கு செல்வதற்கான வசதி அவர்களிடம் இருக்காது. பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகால ஊதியம் வழங்கப்பட்டால் அவர்கள் வேலைக்குப்போகும் முன்பே பயிற்சிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. பிரதமரின் கௌஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தின் மூலம் ஒரு முறை மட்டுமே தரப்படும் உபகாரச் சம்பளம் மிகவும் குறைவானது. இதனைப் பயன் தரக்கூடியதாகப் பார்க்க இயலாது.

சீனா தொழிற்கல்விக்கு ஊக்குத்தொகை அளித்து மாணவர்களுக்கு அதனைத் திறம்பட வழங்குகிறது. 9 வருட கட்டாயப்பள்ளிபடிப்பை முடிக்கும் குழந்தைகளில் பாதி போர் மேல்நிலைக் கல்வியில் தொழிற்கல்லி வகுப்புகளில் சேர்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் 2005 ஆம் ஆண்டு முதல் தொழில் கல்வி இலவசமாகத் தரப்படுவதும், நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் அனைவருக்கும் அது கிடைத்து வருவதுமே. இதோடு கூட, தொழிற்கல்லி பயில்வதற்கு நகர்ப்புற மேல்நிலைப்பள்ளிகளுக்கு வரக்கூடிய கிராமப்புற ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் அவர்கள் அங்கு தங்கிப் படிப்பதற்கு உதவக்கூடிய வகையில் கூடுதல் நிதி உதவியாக ஏறக்குறைய 500 யுவான் சீனாவில் கூடுதலாக வழங்கப்படுகிறது.

தேசியப்பயிற்சி நிதியத்திற்கென புது  வரி விதிப்பதற்கு எதிரான வாதங்கள்

1. பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலீடு வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் ஒரு வரியை கூடுதலாக விதிப்பதனால் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படக்கூடிய உபரிப்பணம் குறைந்துவிடும். ஆகவே நிறுவனங்கள் இதனை எதிர்க்கும். தொடக்கக்கல்விக்கான கூடுதல் வரிவிதிப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. உயர்கல்விக்கான கூடுதல்வரியும் தற்போது விதிக்கப்படுகிறது.  மேலும் ஒரு கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டால் அதனை தொழிற்சாலைகள் எதிர்க்கும்.

ஆயினும் இந்த வாசதங்கள் சில யதார்த்தங்களை மறுதலிக்கின்றன. திறன் மிக உடையவர்கள் அதிகமாக இல்லாததால் கம்பெனிகள் தங்களிடம் உள்ள தொழில்திறம் உடைய பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கிவருகின்றன. உற்பத்திப் பெருக்கத்திற்கு இயைந்த விதத்தில் இது இல்லாமல் போவதால் பொருள்கள் சேலைகளின் விலை அதிகரித்து பணவீக்கத்திற்கு வழிவகுத்துவிடுகிறது. எனினும் 12 ஆண்டுகளுக்குப்பிறகு தொடக்க கல்விக்கான கூடுதல் வரி இப்போது நீக்கிக்கொள்ளப்பட வேண்டிய நிலை இருக்கிறது.  இதற்கென தனி வரி வதித்து நிதி ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் தொடக்கல்விக்கான பொது வரிவருவாயிலிருந்து நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

2. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிதி சிறப்பாக நிர்வகிக்கப்படுவதில்லை. திறன் மேம்பாட்டிற்கு இந்த நிதியை நாடுவதற்கு செலவிடப்படும் நேரமும் முயற்சியும் பயனற்றது என்று தனியார் துறை கருதுகிறது.

இது ஒரு மிக முக்கியமான கவலையாகும். தேசியப் பயிற்சி நிதியத்திலுள்ள பணத்தை நிர்வகிக்கும் முழுக்கட்டுப்பாட்டையும் தனியாருக்கு அளிப்பதன் மூலம் இந்தக் கவலையை சரிசெய்யமுடியும். பிரிவுவாரியாகத் தரப்படும் தேசியப் பயிற்சி நிதி (பிரேசிலில் உள்ளதைப் போல) தொழிலகங்கள் இந்த நிதியை முழுமையாக நிர்வகிப்பதற்கு வழி செய்து  தரும். இத்தகைய நிதி நிர்வாகக் குழுக்களில் அரசின் பிரதிநிதித்துவம் இடம் பெறுவதன் மூலம் அரசு சில கட்டுப்பாடுகளை செயல்படுத்த முடியும்.

ஆசிரியர் : சந்தோஷ் மெஹ்ரோத்ரா

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top