பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / பெண்கள் வேலை : நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண்கள் வேலை : நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை

பணி ஆற்றலில் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

குறைவான பெண்கள் பணி ஆற்றல் பங்கேற்பு விகிதம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை விட குறைவாகவே இந்தியாவில் உள்ளது என்பதுடன் ஆண்கள் பணி ஆற்றல் பங்கேற்பு விகிதத்துடன் மிகக் குறைவாகவே உள்ளது என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ஈரான், பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் மட்டுமே பணி ஆற்றலில் பெண்களின் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ளது.  பெரும்பாலான பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் இந்த விகிதம் அதிகரித்து வந்தபோதிலும் தெற்காசியாவில் மட்டும் இந்த விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  இந்தியாவில் இந்த விகிதம் வெகுவாக குறைந்திருப்பதே இதற்கு காரணமாகும். உயர் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப பெண்களின் படிப்பறிவு விகிதம் மற்றும் கல்வி பயில பெண்கள் பள்ளிகளில் சேரும் விகிதம் சாதகமான நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றபோதிலும் பெண்களின் பணிபுரியும் விகிதம் தொடர்ந்து சவாலாகவே திகழ்ந்து வருகிறது.  பெரிய அளவிலான கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போதும் இந்த நிலை நீடிப்பது குழப்பம் அளிப்பதாகவே உள்ளது. பெண்கள் பணி ஆற்றல் விகிதம் 2004 -05 இல் இருந்த 28.2 சதவிகிதம் என்ற அளவில் இருந்து 2011 – 1 இல் 21.7 சதவிதமாக குறைந்தது.  இந்தப் பின்னடைவின் காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு பெண்கள் பங்கேற்பு விகிதம் 83 நாடுகளின் பட்டியலில் 68 வது இடத்தில் இருந்த இந்தியா 2012 ஆம் ஆண்டு 84 வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பெண்கள் வேலையின் போக்குகள் மற்றும் முறைகள்

பெண்களின் வேலை பற்றிய தகவல்கள் சரியானது அல்ல என்பதை உணர்த்தக் கூடிய புள்ளியியல் கணக்கீட்டு முறையில் சில பிரச்சனைகள் மற்றும் சிரமங்கள் உள்ளன. பரவலான போக்குகள் மற்றும் முறைகள் குறித்த ஒட்டுமொத்த நிலையை நடைமுறையில் உள்ள அமைப்பு அளிக்கிறது.  1999 – 2000 மற்றும் 2004 – 05க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் வேலை வளர்ச்சியில் ஒரு சிறிய முன்னேற்றம் காணப்பட்டது.  இந்தக் காலக கட்டத்தில் பெண்கள் பங்கேற்பு விகிதம் 3 சதவிகித அளவுக்கு உயர்வைக் கண்டது.  எனினும் 2004 – 05ம் ஆண்டு மட்டும் சிறிது பின்னடைவைச் சந்தித்தது. பெண்மையின் அறிகுறிக்கு நேர் எதிராக இந்தப் போக்கு மேலும் குறையத் தொடங்கியது. பெண்கள் பங்கேற்பு விகிதம் குறைவாக உள்ளது என்பது மட்டுமின்றி கிராமப்புறங்களில் பெண்கள் பங்கேற்வு வீழ்ச்சியைக் கண்டு வருகின்ற போதிலும் நகர்ப்புறங்களில் இந்த விகிதம் தேங்கிப் போய்தான் உள்ளது.

அட்டவனை 1 : பணி பங்களிப்பு விகிதம் போக்குகள் – ஆண்கள் மற்றும் பெண்கள்

சுற்று

மொத்தம்

கிராமப்புறம்

நகர்ப்புறம்

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

1993 – 94

54.4

28.3

55.3

32.8

52.1

15.5

1999 – 2000

52.7

25.4

53.1

29.9

51.8

13.9

2004-05

54.7

28.2

54.6

32.7

54.9

16.6

2007-08

55.0

24.6

54.8

28.9

55.4

13.8

2009-10

54.6

22.5

54.7

26.1

54.3

13.8

2011-12

54.4

21.7

54.3

24.8

54.6

14.7

ஆதாரம் : தேசிய மாதிரி ஆய்வுத் தகவல் பல்வேறு சுற்றுகள்

பொருளாதாரத்தில் அதிக ஊதிய வருவாய் நேர்மறைத் தாக்கம் மற்றும் கல்வித் திட்டங்களில் கிடைத்த நேர்மறையான பயன்கள் ஆகியவையே பெண்கள் பணியாற்றுவதில் ஏற்பட்ட பின்னடைவுக்குக் காரணங்களாக அமைந்தன.  எனினும் கல்வியில் பெண்களின் அதகரிக்கும் பங்களிப்பு அல்லது அதிகரித்து வரும் குடும்ப வருவாய் இந்தப் பெரும் பின்னடைவை விளக்கும். அதிக அளவிலான பெண்கள் தொழிலாளர்களாக இருக்க விருப்பமின்றி வீட்டு வேலைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனல் பெண்கள் மீதான பராமரிப்பு பொறுப்புகள் அதிகரிக்கிறது. பெண்கள் முழுநேர ஊழியர்களாக இருப்பதில்லை என்பதால் மேற்கூறப்பட்ட அளவீடுகளில் அவர்கள் கணக்கிகடப்படுவதில்லை.  போதிய வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பது தவிர பெண்கள் வீட்டு வேலைகளை செய்வதற்கே சமூகம் விரும்புகிறது என்பதாலும் பெண்கள் முழு நேரப் பணிகளில் அதிக ஈடுபட முடியவில்லை.  2011 -12 ல் கூட இத்தகைய பெண் பணியாளர்களின் விகிதம் மொத்த பெண் பணியாளர்களின் விகிதத்தில் 22 சதவிகிதமாக இருந்தது.  முழு நேரம் மற்றும் பகுதி நேரம் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்ற போதிலும் முழுநேரப் பணி புரியும் பெண்களின் எண்ணிக்கையில் மட்டும்தான் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பங்களிப்பு அதிகம் இருந்த நிலை மாறி தற்போது அதுவும் குறைந்துள்ளது என்று சில சமூக குழுக்களின் மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

அட்டவணை 2 : 1999 – 25000 முதல் 2011 – 2012 வரை பரந்த தொழில் பிரிவுகளில் பணியாளர்களின் பங்களிப்பு

துறை

1999 – 00

2004 -05

2011 – 12

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

வேளாண்மை

52.7

75.4

48.6

72.8

42.5

62.0

சுரங்கம் மற்றும் குவாரி

0.7

0.3

0.7

0.3

0.6

0.3

உற்பத்தி

11.5

9.5

12.4

11.3

12.6

13.4

மின்சாரம் எரிவாயு மற்றும் தண்ணீர் விநியோகம்

0.4

0.0

0.4

0.0

0.4

0.1

கட்டுமானம்

5.8

1.6

7.6

1.8

12.4

6.0

சேவைகள்

28.8

13.2

30.2

13.7

31.5

18.3

மொத்தம்

100

1000

100

100

100

100

ஆதாரம் : பல்வேறு சுற்றுக்கள் வேலை மற்றும் வேலையின்மை அறிக்கை NSSO.

பரந்த துறைசார்ந்த நிலை பற்றிப் பார்க்கும்போது 2011 – 12 ல் வேளாண்மைத் துறையில் 62.3 சதவிகித பெண்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.  தொழில் துறையில் 20 சதவிகிதப் பெண்களும் சேவைகள் துறையில் 18 சதவிகிதப் பெண்களும் மட்டுமே பணியாற்றிக் கொண்டு இருந்தனர். தொழில் துறையிலும் கட்டுமானத் துறையில் பெண்களின் விகிதம் அதிகம் இருந்தது.  எனினும் வேலையின் இயல்பு பிரச்சனையாகவே இருந்தது. விவசாயப் பணிகளில் ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுமானம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவதில் அதிக ஈடுபாடு காட்டினார்கள்.  தாராளமயமாக்க காலகட்டத்திற்குப் பின்னர் ரியல் எஸ்டேட் துறைக்கு கிட்டடிய ஊக்கமும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.  குடும்பங்கள் மன வேதனை காரணமாக இதர கிராமப்பகுதி மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயருதல் உரிய முறையில் குறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.  செங்கல் சூளைகள் போன்ற இடங்களில் வேலை போன்ற வழக்கமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலைகள் ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.  அவர்கள் அதிக கடன் தொல்லைகளில் சிக்கித் தவிப்பதால் அதிக அளவில் சுரண்டப்படும் நிலை உள்ளது. இந்தத் துறையில் இருக்கும் இன்னொரு அம்சம் என்னவெனில் இதில் பணிபுரிபவர்கள் தனிநபர்களாக இல்லாமல் கணவன் மனைவி என இணைந்து பணியாற்றுபவர்களாகவும் இருப்பார்கள்.

மகளிர் வேலைகளின் இயல்புகள் மற்றும் தரம்

பெண்கள் பார்க்கும் வேலைகளின் இயல்பு என்ன? ஊதியம் அளிக்கப்படாத கிராமப்புற பெண் பணியாளர்கள் / உதவியாளர்கள் பெரிய அளவில் உள்ளனர். (41 சதவிகிதம்) மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் 35 சதவிகிதம் உள்ளனர்.    வேளாண்மை மற்றும் கைவினை பணிகள் சிக்கலில் இருப்பதனால் ஆண்கள் ஊதியம் கிடைக்கும் வேலைகளைத் தேடி சென்று விடுகின்றனர்.  இதனால் பணிச் சுமை முழுவதும் பெண்களின் மீது சுமத்தப்பட்டு பின்னர் அவர்கள் ஊதியம் பெறும் சுய தொழில் செய்பவராக அல்லது சொந்தக் கணக்கு தொழிலாளர்களாக ஆவணப்படுத்தப் படுகின்றனர். தற்காலிகப் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதுடன் இது 4 சதவிகிதமாக உள்ளது.  வழக்கமான பணியாளர்களின் விகிதம் அதிகரித்துள்ளபோதிலும் அதன் விகிதம் 6 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.

நகர்ப்புற பெண் தொழிலாளர்கள் பக்கம் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக சூழ்நிலை மேம்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.  வழக்கமான பணியாளர்களின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 10 சதவிகிதமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். எனினும் நகர்ப்புறத்தில் பெண் பணியாளர்கள் பங்கேற்பு விகிதம் 2011 – 12 ஆம் ஆண்டு வெறும் 15 சதவிகிதமாக மட்டுமே உள்ளது.  வழக்கமான வேலை எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதுடன் இணைத்துப் பார்க்கும் போது ஒட்டுமொத்த போக்கு குறைந்து வருவதையே காட்டுகிறது.  இது முறையானது அல்ல.  இது வேலையின் மோசமான வடிவமாக உள்ள போதிலும் தொடர்ந்து வேலைவாய்ப்புக்களில் எந்த வரையறையும் குறிப்பிடாமல் அளிப்பதாக உள்ளது.  ஊதியத்துடன் கூடிய வீட்டு வேலை விற்பனையக உதவியாளர்கள்,  வரவேற்பாளர்கள் உள்ளிட்டவை மற்றும் பல்வேறு விதமான ஒப்பந்த வேலைகள் அதில் அடங்கும். இப்படி வழக்கமான தொழிலாளர்களின் பெரும் பகுதியை வளர்ந்து வரும் முறைசாராத் துறையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும்.  ஊதியம் செலுத்தப்படும் சுய தொழிலில் சுமார் ஒரு சதவிகித வளர்ச்சி இருக்கும் மற்றொரு போக்கையும் கவனிக்க வேண்டும்.  இது எந்த வகையான வேலை? ஒருபுறம் பெண்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களின் சிறு வருவாயை சுதந்தரமாகப் பெற்றுக் கொண்டு அதனை அவர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செலவிடலாம்.  குறிப்பாக வழக்கமான நுகர்வுச் செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனினும் சுய தொழில் புரிபவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பலர் தொழில் முனைவோராக இன்றி வீட்டிலிருந்தபடியே பணிபுரிபவர்களின் ஒரு பகுதியாக பீடி சுற்றுதல், ஜவுளி, வளையல் மற்றும் ஸடிக்கர் பொட்டு தயாரிப்பவர்களாக உள்ளனர்.  இந்தப் பணிகளுக்கான ஊதியம் எண்ணிக்கை அடிப்படையில் அல்லது நேர அடிப்படையில் வெகு குறைவானதாகும்.  இவர்களுக்கு தொழிலாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கவும் இல்லை என்பதால் பெரும்பாலானவர்கள் முடிந்தால் இதை விட்டு விடவும் தயாராக உள்ளனர்.  வீட்டு வேலைகளைப் பொறுத்தவரையில் ஊதியம் மற்றும் பணிச்சூழல் அதிக அளவில் மாறுபாடுகள் கொண்டவையாக இருப்பதுடன், வேலை உறவுகள் தனி நபர்களால் கட்டுப்படுத்தப் படுகின்றன.  இந்தப் பணியாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் அரசு நிர்ணயிக்காமல் இருப்பதும் ஒரு பிரச்சனையாகும்.

பெண்களுக்கு சுதந்திரமான பணியாளர்கள் என்ற அந்தஸ்த்தை அளிப்பதில் கல்வித் துறை முக்கயமான பகுதியாக உள்ளது.  துரதிருஷ்டவசமாக கல்வித் துறை அதிக அளவில் தனியார்மயமாக இருப்பதால் இந்தத் துறையில் பணிபுரியும் பெண்களின் பணி நிச்சயமற்றதாகவும் பல்வேறு வழிகளில் சுரண்டப்படுவதாகவும் உரிய வகையில் ஊதியம் வழங்கப்படாமலும் உள்ளது.

அட்டவணை 3 : சேவைத் துறையில் தொழிற் பிரிவுகளில் பெண் பணியாளர்களின் பங்கு

சேவை

1999 – 00

2004 -05

2011 – 12

ஆண்

பெண்

ஆண்

பெண்

ஆண்

பெண்

வணிகம்

40.8

27.8 (12.0)

41.3

24.4(11.2)

39.7

22.7 (11.0)

ஒட்டல் – உணவகம்

4.8

5.1 (17.7)

5.2

5.8 (19.5)

6.2

5.2 (15.4)

போக்குவரத்து ஸ்டோரேஜ் – தொடர்பு

18.3

2.7 (2.9)

19.4

2.6 (2.8)

19.2

1.8 (2.0)

பொது நிர்வாகம் – பாதுகாப்பு

12.1

7.5(11.0)

8.6

5.4(11.8)

6.8

4.4(12.2)

கல்வி

6.8

21.1(38.4)

7.2

24.3(41.9)

7.6

27.0 (43.5)

இதர சமூக சமுதாய – தனிப்பட்ட சேவைகள்

8.4

19.1 (31.2)

7.0

9.3(22.3)

6.2

11.5 (28.6)

நியமிக்கப்பட்ட பணியாளர்கள் கொண்ட தனியார் வீடுகள்

0.7

6.7(64.0)

1.5

16.6(70.9)

1.2

11.7(67.2)

இதர சேவைகள்

8.0

10.1(20.1)

9.9

11.5(19.9)

13.0

15.7(20.7)

மொத்தம்

100.0

100.0 (16.7)

100.0

100.0 (17.6)

100.0

100.0(17.8)

ஆதாரம் : என்.எஸ்.எஸ்.ஓ பல சுற்று தகவல்கள்

அங்கன்வா மற்றும் ஆஷா  போன்ற மத்திய மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் திட்டப்பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். பல்வேறு பணிப் பொறுப்புகள் கொண்ட இவர்கள் பணியாளர்களாக கருதப்படாமல் தன்னார்வலர்களாக கருதப்படுவதுடன் அவர்கள் கவுரவ ஊதியம் பெற மட்டுமே தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

ஏழைகள் வேலையின்றி இருக்க முடியாது என்பதனால் அவர்கள் தகுதிக்குக் குறைவான பணிகளை செய்து குறைந்த ஊதியம் பெறுகிறார்கள். பெண்கள் சந்தை சார்ந்த செயல்பாடுகள் தவிர விறகு மற்றும் தீவனம் சேகரித்தல், தண்ணீர் மற்றும் வனப் பொருட்களை சேகரித்தல், நெசவு மற்றும் நூற்பு போன்ற இதர பொருளாதார செயல்பாடுகளில் வீட்டுத் தேவைகளுக்காக ஈடுபடுகின்றார்கள்.  புதிய தாராள பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்தத் துறைகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரே ஊதிய சட்டம், 1974 சட்டம் நிறைவேற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான ஊதிய இடைவெளி அனைத்து வயது, வகுப்பு, சமூகம் மற்றும் பிராந்தியங்களிலும் நீடிக்கிறது.  இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படாமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.  இந்தியாவில் ஒரே வேலை செய்யும் பெண்களை விட ஆண்கள் கூடுதலாக சம்பாதிக்கும் நிலை இருப்பதாகவும் இந்த வேறுபாடு 50 சதவிகிதத்துக்கும் கூடுதலாக உள்ளது என்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது..  குறைந்த ஊதியம் பெறுவோரில் பெண்களின் விகிதம் 60 சதவிகிதமாக இருக்கிறது என்றால் உயர் ஊதியம் பெறுவோரில் பெண்களின் விகிதம் 15 சதவிதமாக மட்டுமே உள்ளது.

அரசு குறுக்கீடுகள்

பெண்களின் வேலை மற்றும் பணிச் சூழலை மேம்படுத்துவதற்கு பல்வேறு அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளை உருவாக்கியுள்ளன.  பெண்களை சுய தொழில் செய்வோராக ஆக்குவதில் இந்த வகையில் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கியமான முயற்சியாகும்.  நுண் கடன்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைப்பது ஆகியவை பெண்களை ஏழ்மையின் பிடியில் இருந்து உயர்த்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை அதிகாரம் பெற்றவர்களாகவும் ஆக்கும் முயற்சிகளாகும்.  தாராளமயமாக்கலுக்குப் பின்னர் பெண்களுக்கு சுய வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.  எனினும் வேளாண்மையில் பெண்களின் வேலையில் ஏற்பட்ட சரிவுடன் பொருந்தும் வகையில் இதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிக் திட்டம் இந்த விவகாரத்தில் துவக்க சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்திய போதிலும் நீண்ட கால அடிப்படையில் வேலை நாட்கள் எண்ணிக்கை வரையறை மற்றும் உடலுழைப்பில் கண்ணோட்டம் ஆகியவை பெண்களின் வேலை சிக்கல்களுக்கு விடை காணவில்லை.  ஊதியம் தரும் வேலைகளில் பெண்களின் பங்களிப்பு அவர்களின் பாலினப் பொருப்புகள் மற்றும் திறன்கள் காரணமாக பாதிக்கப்பட்டன.  மகப்பேறு மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள அடிக்கடி விடுப்பு எடுப்பார்கள் என்பதற்காக இளம் பெண்களுக்கு பணி மறுக்கப்படுவதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.  மகப்பேறு பயன்கள் திருத்த சட்டம் 2017 இல் விடுப்புக்கான நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அது அமைப்பு சார்ந்த துறைகளுக்கு மட்டுமே தற்போது பொருந்துகிறது. இந்த திருத்தத்தின்படி 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு 25 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுகள்ளது.  50 பெண்களுக்கும் அதிகமாகப் பணியாற்றும் அமைப்புகளில் குழந்தைகள் காப்பகம் அமைக்கவும், வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தொழிலாளர்களுக்கே இந்த திருத்தம் அளிக்கிறது.  அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு நாள் கூட விடுப்புகடன் கூடிய மகப்பேறு விடுமுறை எடுக்க முடியாத நிலையே நீடிக்கிறது.  நகர்ப்புறங்களிலும் அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காக வேலையை விடும் நிலை உள்ளது.  மகப்பேறு பயன்கள் அனைத்து பெண் பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதும் அது கடுமையாக அமல்படுத்தப்படுவதும் முக்கயித் தேவையாகும். மேலும் அனைத்து அலுவலகங்களிலும் குழந்தைக் காப்பகங்கள் அமைப்பதும் பெண்கள் வேலை தொடர்பான சவால்களை எதிர்கொள்ள உதவும்.

பெண்கள் பணி பங்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு அவர்களுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இருப்பது ஒரு காரணமாகும்.  அதாவது அவர்களால் என்ன முடியும் மற்றும் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதில் உள்ள ஏற்றதாழ்வாகும்.  குறைந்த ஊதியம் மற்றும் மோசமான பணிச்சுழல்கள் காரணமாகவே பெண்கள் பெரும்பாலும் தங்கள் பணியை விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பெண்களின் பணிப் பங்களிப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு சமூக மற்றும் கலாச்சாரத் தடைகள் இப்போதும் காரணமாக உள்ளது.  நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங்கள் பெண்களை படிக்க வைக்க விரும்புகின்றபோதிலும் அதற்கான செலவை அவர்களுக்கு  கிடைக்கபோகும் வேலைக்கான முதலீடாக நினைப்பதில்லை.  குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்லக் கட்டாயப்படுத்தப்படும் சில பெண்கள் மட்டுமே இந்தத் தடைகளை எதிர்ககாண்டு வெற்றி பெறுகினறனர். பெண்கள் முறைசாரா வீட்டு வேலை போன்ற திறன் அற்ற அல்லது பகுதித்திறன் பெற்ற பணிகளில் பணிப் பாதுகாப்பு அற்ற மற்றும் குறைந்த ஊதியம் கிடைக்கும் வேலைகள் செய்கின்றனர் என்ற தகவல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளும் பெண்கள் வேலை செய்வதற்கு தடையாக உள்ளதும் தெளிவாகத் தெரிகிறது.  தொழிற்சாலைகள் சட்டம் 1948 ல் திருத்தம் செய்து இரவு நேரப் பணிகளில் பெண்களுக்கு உள்ள தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.  இருப்பினும் பல மாநில அரசுகள் இந்த தடையை ஏற்கனவே நீக்கியுள்ளன.  பணியிடப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவை குறித்து பிரிசீலிக்கப்படுகின்ற போதிலும் அவற்கைக் கண்காணிப்பதற்கான நுணுக்கங்கள் இல்லை.  பணியிடங்கள், போக்குவரத்தின் போது மற்றும் பொது இடங்களில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள் பெண்கள் வேலைக்கு செல்வதில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் அதிகரிக்கின்றன.

இந்த நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குறிகள் தென்படும் வகையில் பெண் பணியாளர்கள் இந்தப் பிரச்சனைகளை போராட்டங்கள் மூலம் கையில் எடுத்துள்ளனர்.  பெண்களின் பணி பங்களிப்பை விட அவர்களின் தொழிற்சங்கப் பங்களிப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  திட்டப் பணியாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் ஆகியோரிடையே தொழிற்சங்கப் பங்கேற்பு அதிகம் காணப்படுகிறது. அங்கன்வாடிப் பணியாளர்களிடையே ஒற்றுமை கடந்த பல ஆண்டுகளாக உள்ளபோதிலும் வீட்டு வேலை பெண்கள் தற்போதுதான் அந்த முயற்சியில் ஈடுபட்டு தங்களது பணிகள் குறைத்து மதிப்பிடப்படுவது குறித்த கேள்விகளை எழுப்புகின்றனர்.

முடிவுரை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றுபட்டு பெண்களின் வேலை குறித்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒரு முழுமையான தீர்வை ஏற்படுத்துவதற்கு இதுவே ஏற்ற தருணமாகும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் செய்வது குறித்து பரிசீலிக்கும்போது இந்தத் திருத்தங்கள் ஏற்படுத்தப் போகும் பாலினத் தாக்கங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர் : நீத்தா. என்

ஆதாரம் : திட்டம் மாத இதழ், ஏப்ரல் 2017

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top