অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சாம்பியன்ஸ் இணையதளம்

சாம்பியன்ஸ் இணையதளம்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் www.champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப் படுகிறது.

நோக்கம்

இது தொழில்நுட்ப அடிப்படையிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் மேலாண்மை நடைமுறையாக இருக்கும். நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, தேசிய மற்றும் உலகளாவிய சாம்பியன்ஸ் என்ற நிலையை நோக்கிய நகர்வில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகத்துக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சேவைகள்

சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்.

இணையதள முகவரி

சாம்பியன்ஸ் இணையதளத்தைக் காண, இங்கே கிளிக் செய்யவும்.

ஆதாரம் : குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate