பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழில்முனைவோர்க்கான தகவல்கள் / தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் தொழில்கள்

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வகையான தொழில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

இந்தியா தனது தொழில்நுட்பத்தையும், தொழிற்சாலைகளையும் அதன் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் பயன்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது அதன் மாநிலங்களை அது முன்னேற்றுவதன் மூலம் தானும் வளர்ச்சியடைகிறது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதாகும். இதனையே தமிழகமும் பின்பற்றுகிறது. இம்மாநிலத்தில் வேளாண்மையை சார்ந்த புவியியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் தொழில்கள் பின்வருமாறு காணலாம். அவையாவன:

தோட்டப்பயிர்த் தொழில்களான காபி, டீ, சின்கோனா, ஏலக்காய் ஆகியன கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், மதுரை மற்றும் திருநெல்வெலி மாவட்டங்களில் உள்ளன. புள்ளியியல் அறிக்கைப் படி, தமிழ்நாடு 50 மில்லியன் கி.கி. தேயிலையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்கிறது. 12,000 ஹெக்டேர் காபி பயிரிடுதலுக்கும், 2,400 ஹெக்டேர் சின்கோனா வளர்ப்பிற்கும், 1,600 ஹெக்டேர் ஏலக்காய் பயிரிடுதலுக்கும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணம் புவியியல் கூறுகளை அறிந்து நமது முன்னோர்கள் தொழில்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டதேயாகும். இதனால் தமிழ்நாடு அதிக அள வில் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக முன்னேறியது.

தமிழ்நாடு கரும்பு விளைச்சலுக்கு ஏற்ற மண்வளத்தையும் கால சூழ்நிலைகளையும் பெற்றதன் விளைவாக சுமார் 42 சர்க்கரை ஆலைகள் இங்கு அமையப் பெற்றுள்ளன. மேலும் இந்தியாவில் அதிக கரும்பு (சர்க்கரை) உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாடானது நீண்ட கடற்கரைப் பகுதியையும் வறண்ட மற்றும் வெப்பமான தட்பவெப்பநிலையையும் பெற்றிருப்பதால் உப்பு (உப்பளங்கள்) உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. கடல் வேதியியல் பொருள்கள் காஸ்டிக் சோடா தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உப்புகள் ஜப்பான் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் தேவைப்படும் அளவிற்கு தாது வளங்கள் உள்ளன. குறிப்பாக மெக்னசைட் சுண்ணாம்புக்கல் ஆகியவை தமிழகத்தில் பெருமளவு காணப்படுகிறது. மின்னணு வேதியியல் ஆராய்ச்சிக் கழகம், காரைக்குடி மெக்னீசியம் சுத்திகரித்தல், உருவாக்கல் பணியைச் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிக சிமெண்ட் தொழிற்சாலைகள் உருவாகியுள்ளதற்குக் காரணம் இங்கு அதிகளவில் கிடைக்கும் சுண்ணாம்புக்கற்களேயாகும். இங்கு 18,68,935 மெட்ரிக் டன் சுண்ணாம்புக்கல் உற்பத்தி செய்யும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் டால்மியாபுரம், தாழையூத்து, மதுக்கரை, துலுக்கப்பட்டி ஆகிய நகரங்களில் உள்ளன. தமிழக அரசும் இந்த சிமெண்ட் தொழிலைப் பெரிதும் ஊக்குவிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் வளம் நிறைந்த இல்மனைட், மோனோசைட் போன்ற தாதுக்கள் அதிகமுள்ளன. இந்த தாதுக்களை மணலில் இருந்து பிரித்தெடுக்க இந்திய அரிய வகை மண் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறது.

தமிழ்நாடானது நீர் மின் ஆற்றலின் தேவையை முன்னமே அறிந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் துவங்கியது. குறைந்த செலவிலான நீர் மின் உற்பத்தியும் குறைந்த கூலிக்கு கிடைக்கும் தொழிலாளர்களுமே தமிழ்நாட்டின் நீர் மின்சார ஆலைகளின் முன்னேற்றத்திற்குக் காரணம் ஆகும். நீர்மின் திட்டங்கள், தமிழ்நாட்டில், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த நீர்மின் ஆற்றலானது விவசாயம் சார்ந்த தொழிலகங்களுக்கும், பம்பு செட்டுகள், மின்மோட்டார்கள் ஆகியவற்றை இயக்கவும் பயன்படுகிறது.

இரும்பு தொழில்களின் வளர்ச்சி மற்றும் பருத்தி உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றால் நவீன தொழிற்சாலைகள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன. திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு மாவட்டங்கள் பருத்தி ஆடைகள் செயற்கை இழைகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கின்றன.

தமிழ்நாட்டில் அதிக நிலக்கரி வளம் இல்லாவிட்டாலும் 2000 மில்லியன் டன்கள் அளவிலான லிக்னைட் படிகங்கள் நெய்வேலியில் உள்ளன. 2000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அமைப்பு உள்ளது. மேலும் இயற்கை உரங்கள் தயாரிக்கவும் சேலம் இரும்பு ஆலைக்கு நிலக்கரி அளிப்பதிலும் இத்தொழிற்சாலை பெருமளவு உதவுகிறது.

தமிழ்நாட்டில் வாகனங்கள் தயாரித்தல் தொழிலானது முழுக்க தொழில்முனைவோரின் பங்கீட்டாலும், முயற்சியாலும் பெருமளவு வளர்ச்சியடைந்தது. இங்கு டிராக்டர்கள், கார் எஞ்சின்கள் இரு சக்கரவாகனங்கள் தயாரிக்கும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. உலகின் முன்னணி நிறுவனங்களும் வாகனத் தயாரிப்பு தொழிலை மேற்கொள்வதால் தென்னகத்தின் டெட்ராய்ட் எனப்படுகிறது.

தமிழ்நாட்டின் சென்னை துறைமுகம் ஏற்றுமதிக்கு முக்கியத் தளமாகவும், பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை அதனருகில் நிறுவப்படவும் காரணமாக அமைந்துள்ளது. மேலும் தூத்துக்குடியில் உரங்கள் தொழிற்சாலை உருவாக அதன் துறைமுகம் காரணமாக உள்ளது.

தமிழ்நாடு தொழில் வளமிக்கதாகவும் அதிக தொழிற்சாலைகள் கொண்டதாகவும் இருப்பினும், அதன் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், பங்கேற்பும் அவசியமாகும். இந்த கூட்டு முயற்சியினால் மட்டுமே தமிழகம் தொழில்துறையிலும் முன்னேற்றத்திலும் சிறந்து விளங்கும்.

தற்போதைய நிலைமை

பொருளாதார வளர்ச்சிக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் வேலை வாய்ப்பிற்கும் தொழிற்சாலைகளே அடிப்படையாகும். மேலும் அத்தொழிற்சாலைகள் முதனிலை தொழில் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்களை இணைக்கும் விதமாகவும் இருத்தல் இன்றியமையாதது ஆகும். உலகமயமாதலுக்கு ஏற்ப இப்பொழுது தொழில்துறை சார்ந்த திட்டங்களும் இயற்றப்பட்டு, இருக்கும் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும், இதற்கான மேலாண்மை திறமைகளையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அளித்து முழுவளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குவதே இந்த 12 ஆம் ஐந்தாண்டு திட்டத்தின் குறிக்கோளாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரையில் சென்னை தமிழ்நாட்டின் மையமாவும், தலைமையிடமாகவும் விளங்குகிறது. இது மட்டுமின்றி வாகன தயாரிப்பைப் பொறுத்தவரையில் ஃபோர்டு, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும், சென்னையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையானது இந்திய அளவில் வாகனங்கள், மென்பொருள் தயாரிப்பிலும் முன்னிலை வகித்து வருகிறது. இது போன்ற வெற்றிகளுக்கு காரணம் 1992 மற்றும் 2003 இல் மாநில அரசால் வெளியிடப்பட்ட தொழில் கொள்கைகளே ஆகும்.

மகாராஷ்டிராவை அடுத்து தமிழகமானது இரண்டாவது அதிக பொருளாதார மதிப்பைக் கொண்ட மாநிலமாக விளங்குகிறது. மத்திய திட்டக்குழு 2012-13 அறிக்கையின்படி தமிழகமானது மொத்த மாநில உள்நாட்டு (2004இல்) உற்பத்தியளவாக ரூ.4,51,313 கோடி அளவை எட்டி இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாநிலத்தில் அதிகளவிலான தொழிற்சாலைகள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் (அதாவது ஆடைகள், தோல்பொருள்கள், வாகனங்களின் பாகங்கள்) வகையில் அமைந்துள்ளது. 2011-12 மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கையின்படி தமிழ்நாடானது,

  • அதிக தொழிற்சாலைகளை கொண்டுள்ள மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது
  • அதிக அளவில் தொழிற்சாலைகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியதில் முதலிடம் வகிக்கிறது
  • தொழிற்சாலை தயாரிப்புகளின் மதிப்பில் மூன்றா மிடம் பிடித்துள்ளது
  • தொழிற்துறைகளின் மொத்த மதிப்பு கூட்டுதலில் மூன்றாமிடம் பிடித்துள்ளது

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கையின்படி மார்ச் 2012ல் மாநில அரசானது தமிழ்நாட்டின் தொலை நோக்கம் 2023 என்ற திட்டத்தை துவங்கியது. அதன்படி 2023ம் ஆண்டிற்குள் முழு வறுமை ஒழிப்பு அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறச் செய்தல், நல்ல சுகாதாரம், சுற்றுச்சூழ்நிலையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை இது நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி இலக்காக 11 விழுக்காடு அதற்கும் மேல் என ஒரு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபரின் வருமானமும் ரூ.4,50,000 என்ற அளவிற்கு 2023 அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அனைத்துப் பிரிவினரையும் குறிப்பாக கடை நிலை மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற கொள்கையை அரசு இந்த திட்டத்தில் வெளியிட்டுள்ளது. முழு வறுமை ஒழிப்பு என்பதே இதன் முக்கிய இலக்காக உள்ளது.

தகவல் தொழில்நுட்பம்

தேசிய மென்பொருள் மற்றும் சேவைப் பணிகள் குழுமத்தின் அறிக்கையின்படி நாட்டின் தென் மாநிலங்களே மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் பாதிக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக கர்நாடகம், த மிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் ஆகியவை இணைந்து 59.6 சதவிகிதம் (2004-05) அளவிற்கு, அதாவது ரூ.78,230 கோடிக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்துள்ளன. அது மட்டுமின்றி கர்நாடகத்திற்கு அடுத்து தமிழகமானது இரண்டாமிடத்தில் உள்ளது.

உற்பத்தி மற்றும் பொறியியல் தொழில்கள்

துடிப்பான துறையாகவும், இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமான துறையாகவும் இருப்பது உற்பத்தித் தொழில்களே ஆகும். தமிழ்நாட்டில் இயந்திரங்கள், கருவிகள், போக்குவரத்து சாதனங்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டின் உற்பத்தி தொழிலில் 11 முதல் 12 விழுக்காடு வரையிலும், வெளிநாட்டு ஏற்றுமதியில் 15 சதவிகிதம் வரையிலும் (மென்பொருள் தவிர்த்து) 17 சதவிகிதம் மென்பொருள் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு பங்கு வகிக்கிறது.

வாகனத் தொழில்கள்

வாகனங்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு முக் கியமானது ஆகும். மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம் பங்களிப்பை அளிப்பதுடன் 2,20,000 மக்களுக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்குவதிலும் இதன் பங்கு இன்றியமையாதது. இங்கு தேசிய அளவில் 21 சதவிகிதம் கார்களும், 33 சதவிகிதம் இரு சக்கரவாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தோல் தொழில்

கடந்த இரு நூற்றாண்டுகளில் பெரிய அளவில் தோல் பதனிடும் நிறுவனங்கள் நிர்மாணிக்கப்பட்டதால் தமிழ்நாடு காலணி உற்பத்தியில் முன்னணி மாநிலமாக விளங்குகிறது. இந்தியாவின் 70 சதவிகித தோல் பதனிடுதல் தொழிலும் 38 சதவிகிதம் காலணி உற்பத்தியும் இங்கு நடைபெறுகிறது. அது மட்டுமின்றி இத்தொழில் மூலம் 762 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

காகிதத் தொழில்

நாட்டின் காகிதத் தயாரிப்பில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு செய்தித்தாள் அச்சு நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது ஆறு சர்க்கரை ஆலைகளுடன் இணைந்து காகிதம் தயாரிக்க அடிப்படையாக பயன்படும் காகிதக்கூழ் தயாரிப்பில் ஈடுபடுகிறது. மீத இருப்பு இல்லாமல் வெற்றிகரமாக அதிக இலாபம் தரும் பொதுத்துறை நிறுவனமாக இது உள்ளது.

வேதியியல் மற்றும் பிளாஸ்டிக் தொழில்கள்

ரூ.48,000 கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு, வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத் துறைகளில் இது முக்கிய ஒன்றாகும். 13 சதவிகிதம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியிலும், 8 சதவிகிதம் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியிலும் இது பங்களிக்கிறது.

ஆடைகள் தொழில்

இத்தொழில்கள் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், அந்நியச் செலவாணியை ஈட்டவும் பெரிதும் துணை புரிகின்றன. ஆனால் தற்பொழுது அந்நிய சந்தைகளில் எற்படும் திருப்பங்களாலும், தகுதியான மூலப்பொருள் கிடைக்காததாலும் இந்தத் தொழில்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. எனினும் வேளாண்மையை அடுத்து இரண்டாவது பெரிய வேலை வாய்ப்பு வழங்கும் தொழிலாக இது உள்ளது.

கைத்தறித்தொழில்

இந்தக் குடிசைத் தொழில்கள் கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் அடிப்படையாக உள்ளது. இந்தக் கைத்தறி ஆடைகளால் 4.29 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் இத்தொழில் இலவச சீருடை வழங்கும் திட்டத்திற்கும், வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கும் பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை ஆலைகள்

வேளாண்மை சார்ந்த தொழில்களில் சர்க்கரை ஆலைத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புற வளர்ச்சிக்கும் மாநில பொருளாதார முன்னேற்றத்திற்கும் இத்தொழில் முக்கியமானது ஆகும். ஏனெனில் நேரடி வேலை வாய்ப்பையும், கரும்பு பயிரிட்டு அறுவடை செய்வதன் மூலம் வேளாண்மையையும் ஊக்குவிக்கிறது. 42 சர்க்கரை ஆலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் 18 தனியார் தொழிற்சாலைகளாகும்.

சிமெண்ட் ஆலைகள்

தமிழக அரசு சிமெண்ட் உற்பத்தியை நன்கு ஊக்குவிக்கிறது. ராம்கோ, சங்கர், டால்மியா, செட்டிநாடு போன்ற நிறுவனத் தயாரிப்புகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

தொழில்துறை சார்ந்த செயல்பாடுகள்

தமிழ்நாட்டின் கடற்கரையானது குறுகிய அகலத்தை கொண்டது ஆகும். இங்கு, மீன் பிடித்தல், உப்பு தயாரித்தல், தென்னை மற்றும் பனை மரங்கள் வளர்த்தல், எரிபொருளாக சவுக்கு வளர்த்தல், சிறுசிறு தாவரங்கள் வளர்த்தல், மேய்ச்சல் நிலப்புற்கள் வளர்த்தல், கட்டுமரங்களைத் தயார் செய்தல் போன்ற தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்கிங்காம் கால்வாயானது, சவுக்கு மரம் வளர்ப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் இது உப்பு, மீன் இவற்றின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாண்டிச்சேரியானது பரப்பளவு கொண்டதாகும். 1858 சதுர மைல்கள் அதனை 16 பகுதிகளாகப் பிரித்து அவர்கள் ஆட்சி செய்தனர். எனினும் அதன் ஒரு பகுதி மட்டும் ஆங்கிலேயர் மற்றும் பிரெஞ்சுக் காரர்களால் கூட்டாக ஆளப்பட்டு, கள்ளக்கடத்தல் வாணிபத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

இங்கு முக்கிய பணப்பயிராக நிலக்கடலை இருந்தது. யான் தயாரித்தலே முக்கிய தொழிலாக இருந்தது. பிரான்சு, சீனா, நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது. ஈரோட்டில் ஆடைகள் உற்பத்தி பெருமளவு நடைபெறுகிறது. அதற்கு உறுதுணையாக காவேரி ஆறும் இரயில் போக்குவரத்தும் உள்ளது. கோயம்புத்தூரைப் பொறுத்த வரையில் மூலப்பொருள்கள், சந்தை, வேலையாட்கள் மலிவான விலையில் கிடைக்கிறது. திண்டுக்கல் அமராவதி மற்றும் வைகை ஆறுகளின் வடிகால் பகுதிகளில் அமைந்திருக்கிறது. எனவே நீர் தட்டுப்பாடு இல்லை திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் உலகப் பிரசித்தி பெற்றவை. ‘சுருட்டு’கள் பீடி தயாரித்தல் போனறு குடிசைத் தொழிலாக அல்லாமல் இது ஒரு தொழிற்சாலையாகவே செயல்படுகிறது. மதுரையானது நாயக்கர் ஆட்சியின்பொது நன்கு செழித்து வளர்ந்தது. மதுரையின் கைவினைப் பொருள்கள் தொழில்கள் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணி கிடைப்பது மட்டுமன்றி வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. தூத்துக்குடி துறைமுகமானது பல தடைகளையும் தாண்டி நன்கு முன்னேற்றமடைய காரணம் பருத்தி ஆடைத் தொழில்களாகும். இங்கிருந்து ஆடைகள், டைல்ஸ், நைலான் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன் பிடித்தலுக்கு உதவும் தகவமைப்புடன் மன்னார் வளைகுடா பகுதி காணப்படுகிறது.

திருநெல்வேலி பகுதிகளின் தொழில் முன்னேற்றத்திற்கு பனைமரம் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

பனைத்தொழில் முழுநேர மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்பை அளிக்கிறது. பனை ஓலை விசிறிகள், குடிசைவீடுகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தலிலும் வெல்லம் தயாரிக்கவும் பனை மரங்கள் பயன்படுகின்றன. வேளாண்மை மட்டுமன்றி திருநெல்வேலி பகுதிகளில் நெசவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆறானது இப்பகுதியை மேம்பாடு அடையச் செய்கிறது. இதன் நீரானது பருத்தி ஆலைகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன் வேளாண்மை நீர்ப்பாசன வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. திருச்சிராப்பள்ளி பகுதிகள் காவேரி ஆற்றால் வளம் பெறுவதுடன் கோவில் கட்டிடக் கலையில் புகழ்மிக்க ஸ்ரீரங்கத்தையும் கொண்டுள்ளது. இங்கு ஆடை தொழிலகங்கள், கல்லக்குடியின் டால்மியா சிமெண்ட தொழிற்சாலை, இரயில் தொழிற்சாலைகள் என ஒவ்வொரு பகுதிகளிலும் அங்குள்ள வளங்களைப் பயன்படுத்தி தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டங்கள்

தமிழ்நாட்டின் எல்லைக்குள் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கித் தொழில் முனைவோர், வெளிநாட்டவருக்கு சிறப்புச் சலுகைகள் அளித்து தொழில் வளத்தைப் பெருக்கி மாநிலத்தைப் பொருளாதாரத்தில் மேம்படுத்துதலே அரசின் நோக்கமாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக ஓசூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருநெல்வேலி மற்றும் வண்டலூர் ஆகிய பகுதிகளில் இம்மண்டலங்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் முன்னேற்றமடைய வாய்ப்பளித்து வருகிறது.

இதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறவனங்களை ஒன் றிணைத்து பெரிய பயன்தரும் வகையில் இம்மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம், துணிகள், வாகனங்கள், மருந்தியல், பொறியியல், தோல்பொருள்கள் தயாரித்தல் என பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டதாக ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்படுவதுடன், அரசும் இதனை ஊக்குவிப்பதற்காக, நேரடியாக சந்தித்து அனுமதி வழங்கல் (ளுiபெடந றுiனெழற ளுலளவநஅ) வரிகள் கட்டுவதிலிருந்து விலக்கு மானிய விலையில் மின்சாரம், நீர் வழங்குதல் என பல வகைகளில் ஆதரவு அளித்து வருகிறது. மேலும் தமிழக அரசானது பணியாளர்கள் கட்டுப்பாடுகளில் விதிவிலக்கு, தபால்நிலையம், தீயணைப்பு நிலையங்களையும் அமைத்து தருகிறது. இவை மட்டுமின்றி தடையில்லா மின்சாரம், நீர் அளிப்பு அப்பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு என அனைத்தையும் மாநில அரசே வழங்குகிறது. இவ்வாறு பல வகைகளில் தொழிலகங்களை ஊக்குவித்து, ஆதரவு அளித்து பாதுகாப்பதன் விளைவாக நமது மாநிலப் பொருளாதாரமும் நல்லமுறையில் வளர்ந்து வருகிறது.

தமிழக சிறப்பு பொருளாதார மண்டலங்களால் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகச்சிறந்த பொருளாதார வசதிகள் இம்மண்டலங்களில் செய்து தரப்படுகிறது. இதனால் தொழில் முனைவோர் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து தொழில் துவங்குகின்றனர். இதனால் மாநில அரசிற்கு அதிக வருவாயும் மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. மாநில அரசானது இங்குள்ள தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டும் பட்ஜெட்டில் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தும் இம்மண்டலங்களின் மேம்பாட்டிற்கு வழிவகை செய்கிறது. மேலும் வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் முழு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்வதிலும் முழு வரிவிலக்கானது முதல் 5 ஆண்டிற்கும் பின் 50 சதவிகிதம் வரி விலக்கானது அடுத்த 5 ஆண்டிற்கும் அளிக்கப்படுகிறது.

மேலும் இம்மண்டலத்தினுள் அனைத்து வகையான (விற்பனை வரி, ஏற்றுமதி, இறக்குமதி வரிகள், மின்சார வரிக்குறைப்பு) வரிவிலக்கு மற்றும் குறைப்புச் சலுகைகள் செய்து தரப்பட்டுள்ளன. இம்மண்டலத்தின் கீழ் பதிவு செய்தலுக்கான கட்டணமும் கிடையாது. அவை மட்டுமின்றி இம்மண்டலங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவிகிதம் வரையிலும் முழுமையாகப் பெறலாம். இங்குள்ள நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருள்களை உள் நாட்டில் விற்பனை செய்யும் பட்சத்தில் அதற்குச் செலுத்த வேண்டிய மதிப்பு கூட்டுவரியை செலுத்துவது அவற்றின் கடமையாகும். இவ்வாறு தமிழக அரசானது மேன்மேலும் பல சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்மண்டலத்திற்காக சிறப்பு சட்டம் 2005 உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : அறம் ஐ.ஏ.எஸ் அகடாமி, சென்னை

2.9
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top