பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு பற்றிய குறிப்புகள்

குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம். கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!

சந்தை வாய்ப்பு

தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.

முதலீடு

இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.

கட்டடம்

சுமார் 1,500 - 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும். உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்! ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மூலப் பொருள்

குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில் , அல்பியா என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.

இயந்திரம்

இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.

தயாரிப்பு முறை

மிக்ஸர்

குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.

எக்ஸ்ட்ரூடர்

இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.

கம்ப்ரஸ்ஸர்

கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.

கிரைண்டர்

கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

பிளஸ்

மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ளலாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.

மைனஸ்

இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப்பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.

வேலையாட்கள்

  • திறமையான வேலையாட்கள் - 3
  • சாதாரண வேலையாட்கள் - 3
  • மேலாளர் - 1
  • விற்பனையாளர் - 1
  • அக்கவுன்டன்ட் - 1
  • வாட்ச்மேன் - 2

கூடுதல் வாய்ப்பு

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண்ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது

ஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை

3.41071428571
கிளமெண்ட் ராஜ் Sep 25, 2018 02:28 PM

நான் ஏதேனும் தொழில் செய்து முன்னேர வேண்டும்...
நான் வசதி படைத்தவனும் அல்ல, எனக்கேற்ற என்னால் செய்ய முடியும் என இந்த தொழில் நான் நம்புகிறேன்...
இத்தொழில் பற்றி இன்னும் விவரம் மற்றும் இத்தொழில் செய்யும் நபர்கள் தொடர்பும், அறிவுரையும், பயிற்சியும் வேண்டும். உதவுங்கள்...

சேவியர் Jan 26, 2018 11:49 PM

இந்த மிஷின் சென்னையில் எங்கே கிடைக்கின்றது மூலப் பொருள்கள் எங்கே கிடைக்கின்றன

Anonymous Aug 29, 2017 10:16 PM

இந்த கருவின் பெயா் புலேமேல்டிங்
இங்கச்சன் மிசின் இது வெலி நாடுகளில்
வாங்கினால் விலை குறைவு தரமும் குறைவு உள்ளாட்டு தயரிப்பு வாங்கிநால் விலைவும் தரம் அதிகம்

பா.ரஞ்சித்குமார் Aug 27, 2017 10:51 PM

இந்த தொழிலை தொடங்க பயிற்சி வகுப்பு உள்ளதா?எங்கே?மானியத்துடன் கடன் வசதி உள்ளதா?தயவு செய்து விவரம் தேவை. நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்.உதவுங்கள் எனக்கு.

பிளாஸ்ட்க் விற்பனை செய்ய விருப்பம் தாயாரிப்பவர்கள் தொடர்பு கொள்ளவும் 8122226608 Jun 24, 2017 11:14 PM

மொத்தமா பிளாஸ்ட்க் குடம் தேவை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும் 81*****08

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top