பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / பேக்கிங் கிளிப் தயாரிப்பு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேக்கிங் கிளிப் தயாரிப்பு

பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில் பற்றிய தகவல்

பொருட்களை பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று கிளிப்பு ஆகும். இதை தயாரித்து விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டலாம். மாதம் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும்.

இந்த கிளிப்புகளை தயாரிப்பதற்கு பிரத்யேக இயந்திரங்கள் உள்ளன. தரமான நிறுவனத்தின் இயந்திரத்தை தொழில் ஆலோசர்களிடம் கேட்டு வாங்க வேண்டும்.

தரமான இயந்திரத்தை வாங்கி, கிளிப்புகள் தயாரிக்கும் தொழிலை புதிய தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளலாம்.

கிளிப் தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டால் மேலேயே சொன்னதுபோல மாதம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் பார்க்கலாம்.

எந்த அளவிற்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோமோ அந்த அளவிற்கு வருமானம் கூடும். இன்றைய நிலையில் ஒரு கிலோ கிளிப் ரூ.50 வரை விற்பனையாகிறது.

கிளிப் இயந்திரத்தை இயக்குவது மிகவும் எளிதானது. இயக்குவதற்கு ஒருவரே போதும். இடமும் அதிகம் தேவையில்லை. குறைந்த பட்சம் 10க்கு10 அடி போதுமானது.

தொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் ஒரு சிறு இடத்தை வாடகைக்கு பிடித்து இந்த இயந்திரத்தை கொண்டு தொழில் நடத்த முடியும்.

கிளிப் இயந்திரம் செமி ஆட்டோமெட்டிக்  முறையில் இயங்குகிறது. 0.5 குதிரை திறன் உள்ள மோட்டாரில் இயங்குகிறது. i.s.o 9000  தரச்சான்றிதழ் பெற்ற மோட்டார் பொருத்தப்பட்ட கிளிப் இயந்திரத்தையே வாங்க வேண்டும்.

கிளிப் இயந்திரத்தில்  பேக்கிங், கட்டிங் என இரண்டு பகுதிகள் உள்ளன. கட்டிங் பகுதியில் நாம் போடும் இரும்பு துகள்கள் ஒரு கிளிப் அளவிற்கு துண்டிக்கப்படும்.  பேக்கிங் மிஷின் பகுதி, துண்டிக்கப்பட்ட அந்த இரும்புத் துகளை கிளிப்பாக மாற்றிவிடும்.

இதை 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 மில்லி மீட்டர் அளவிலும் 1 இஞ்ச்,  1.5 இஞ்ச் அளவுகளிலும் தயாரிக்கலாம். இந்த மோட்டாரை சிங்கிள் ஃபேஸ் அல்லது 2 ஃபேஸ் கரண்டில் இயக்கலாம்.

இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சியை அதன் விற்பனையாளரிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

பெண் தொழில் முனைவோர்களுக்கு இந்த தொழில் மிகச்சிறந்த தொழில் ஆகும். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுவினர் இந்த தொழிலை மிகச் சிறப்பாக செய்ய முடியும்.

கிளிப் தயாரிப்பதற்கு மூலப்பொருளான  மெட்டல் ஸ்கிராப் ஒரு கிலோ ரூ.30 லிருந்து ரூ.35 க்கு கிடைக்கிறது.

இதை கொண்டு தயாரிக்கப்படும் கிளிப்களை 1 கிலோ ரூ.50 க்கு விற்கலாம்.  லாபம் 1 கிலோவிற்கு ரூ. 10 கிடைக்கும்.  வாடகை, மின்சாரம், ஊழியர் சம்பளம் என்று சிலவற்றை கழித்தால் கூட குறைந்த பட்சம் ரூ. 5 லாபமாக கிடைக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 கிலோ உற்பத்தி செய்தால் ரூ.750 லாபம் கிடைக்கும்.  மூலப்பொருட்கள் உள்ளுரிலேயே எளிதாக கிடைக்கும். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்  கிளிப்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வருடம் முழுவதும் தங்கு தடையின்றி பணி செய்யலாம்.

3.11627906977
சரவணன் Jun 09, 2017 07:51 AM

ஐயா வணக்கம் நான் பேக்கிங் கிளிப் தொழில் செய்ய விரும்புகிறேன். அதனால் இயந்திரம் கிடைக்கும் இடம் மற்றும் கிளிப் விற்பனை செய்வதும் பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சக்திவேல் Jun 05, 2017 12:36 PM

ஐயா வணக்கம் நான் பேக்கிங் கிளிப் தொழில் செய்ய விரும்புகிறேன். அதனால் இயந்திரம் கிடைக்கும் இடம் மற்றும் கிளிப் விற்பனை செய்வதும் பற்றி விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

வெங்கடேஸ் May 01, 2017 09:12 PM

Packing Machine எங்கு கிடைக்கும், அதன் விலை முழு விவரம் தெரியபடுத்தவும்பேக்கிங் கிளிப் தயாரித்த பின்பு மொத்தமாக வாங்கிகொள்பவர்களை பற்றிய தகவல் தேவை ,, தொடர்புக்கு 95*****47

R.solairajan Apr 01, 2017 08:23 AM

எப்படிவாங்குவதது எங்குகிடைக்கும்

K.Ramu Mar 29, 2017 03:22 PM

இயந்திரம் எங்கு கிடைக்கும்,அதன் விலை தெரியபடுத்தவும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top