பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்

சுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி தேடிக்கொண்டிருப்பவராக இல்லாமல், சுயதொழில் புரிபவராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் மாவட்ட தொழில் மையங்கள்.

இந்த மையங்களின் உதவியால் சுயதொழில் தொடங்கி முன்னேறியவர்கள் தமிழகத்தில் ஏராளம். சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் தமிழகத்தில் ஏராளமாக பெருகி இருப்பதற்கு மாவட்ட தொழில் மையங்களும் முக்கிய காரணம்.

படித்த இளைஞர்களுக்கு சுயதொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது. பொது மேலாளர் தலைமையின் கீழ், இயங்கி வரும் மாவட்ட தொழில் மையமானது, புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சியை வழங்குவதோடு தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறது.

தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருவது இம்மையத்தின் சிறப்பம்சம். எனவேதான் தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தின் தரத்தினை மேம்படுத்துவதற்குமான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துவதும் இம்மையத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று. இதன்மூலம், படித்த இளைஞர்கள் திசைமாறி செல்லாமல் வளர்ச்சியை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

படித்த இளைஞர் ஒருவர் மாவட்டத் தொழில் மையத்தை அணுகினால் தொழில் தொடங்க ஆலோசனை, திட்டஅ றிக்கை இவை வழங்கப்படுவதோடு உரிய பயிற்சிக்கும் வழிவகை செய்யப்படுகிறது.

சுய தொழில் செய்வதை ஊக்கப்படுத்தும் பணியை மாவட்டத்தொழில் மையங்கள் சிறப்பாக செய்து வருகின்றன.

அதேபோல கைவினைத் தொழில், குடிசைத்தொழில் இவற்றை ஊக்கப்படுத்துவதற்காக, இத்தொழிலை மேற்கொள்பவர்கள் தங்கள் தொழிலை நிறுவனமாக பதிவு செய்கொள்ளும் வசதியையும் மாவட்டத்தொழில் மையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS), பிரதமரின் வேலைவாப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) ஆகிய திட்டங்களன் கீழ்சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் பெறுவதற்கு,\ மாவட்டத் தொழில் மையம் ஏற்பாடு செய்கிறது.

தமிழக அரசின், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்சுயதொழில்தொடங்க வழங்கப்படும் வங்கிக் கடனில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத் தொழில் மையம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. அந்தந்தமாவட்ட தலை நகரத்தில் இம்மையம் அமைந்திருக்கும். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும்.

மாவட்டத் தொழில் மையத்தின் முக்கியபணிகள்

 1. பதிவு செய்தல்
 2. இணையதளம் மூலம் பதிவு செய்தல்
 3. தொழில் முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல்
 4. குடிசைத் தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்
 5. கைத்தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்.
 6. ஒற்றைச்சாளர முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்
 7. ஊக்கத் திட்டங்களை செயல்படுத்துதல்
 8. உற்பத்தித் திறன் சான்றிதழ் அளித்தல்
 9. வங்கிகளில் கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்
 10. ஏற்றுமதிக்கு வழிகாட்டுதல்
 11. சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல்
 12. தொழில் கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல்

இப்படி ஏராளமான பணிகளை மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாவட்டத் தொழில் மையத்தின் சேவைகளை படித்த வேலையில்லாத இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆதாரம் : தொழில்யுகம்

3.12605042017
சுரேஷ்கண்ணன் Aug 12, 2019 10:09 PM

ஐயா நான் சலவைதொழிலாளி சலவை கம்பெனி தொடங்க யாரிடம் உதவி கேக்க வேண்டும்

மா.மகேந்திரன் Jul 08, 2019 06:56 AM

ஐயா, நான் தருமபுரி மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த (SC) ஆதிதிராவிடர்
சுயமான மற்றும் என் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் தொழில் மற்றும் சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வேண்டும்

Rangaraj. S Jul 04, 2019 10:27 AM

நான் மோட்டார் கம்பெனி வைத்து உள்ளேன் வங்கியில் msme மூலமாக கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்.

gurunathan May 24, 2019 05:52 PM

இராமநாதபுரம் மாவட்ட தொழில் மையத்தில் பதிய என்ன ஆவணங்கள் வேண்டும்.
முறையாக ஆவணங்களை கொண்டு ஆன்லைன் மூலம் பதிந்தால் மட்டும் போதுமா?
வேறுஏதேனும் வங்கியில் ஒப்புதல் கடிதம் பெற்று சமர்ப்பிக்க வேண்டுமா?
வேறு என்ன அணுகுமுறை என்பதை தெரியபடுத்தவும்

Selva prakash kumar May 16, 2019 11:40 AM

எனது வயது 30, நான் திருப்பூரில் பனியன் கம்பெனியில் office குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கிறேன், நான் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறேன், கோவையில் இலவசமாக shirt and pant தையல் பயிற்சி கற்று தரும் இடம் தெரிவிக்கவும், நன்றி.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top