பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / தொழில் கடனுதவி நிறுவனங்கள் / புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம்

நோக்கம்

  • படித்த இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்க தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
  • இத்திட்டத்தின்கீழ் இளங்கலை, முதநிலை பட்டயப்படிப்பு, பட்டயப்படிப்பு (டிப்ளமோ), ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி கல்வித்தகுதி பெற்றிருப்பவர் தேர்வு செய்து ஒரு மாதம் தொழில் முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படுகிறது.
  • பிறகு வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும்.
  • திட்டத்தின்கீழ் தொழில் தொடங்கும் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத (அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை) முதலீட்டு மானியமும் 3 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படும்.

தகுதிகள்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருப்பதுடன் ஐடிஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) இளங்கலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

  • 21-லிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45.
  • பயனாளி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை.

நிபந்தனைகள்

  • திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரையிலான அனைத்து உற்பத்தி சார்ந்த தொழில்கள் (எதிர்மறை பட்டியல் நீங்கலாக) மற்றும் சேவைத் தொழில் தொடங்கலாம். பொது பிரிவினர் தனது பங்காக  திட்ட மதிப்பீட்டில் 10 சதவீத செலுத்த வேண்டும்.
  • ஏனையோர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடனுதவி பெற பரிந்துரை செய்யப்படும்.
  • தகுதியுள்ள படித்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தேர்வுக் குழு மூலம் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புவோர் விளமலில் உள்ள மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தை அணுகலாம். அல்லது w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n‌ என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஆதாரம் : http://www.msmeonline.tn.gov.in/

2.91489361702
LAKSHMAN Aug 07, 2018 12:01 PM

இதைப்பற்றி விரிவான தகவல் வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top