பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / சுற்றுலா துறை / சுற்றுலா - விளம்பரத்திற்குத் திட்டமிடுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுலா - விளம்பரத்திற்குத் திட்டமிடுதல்

சுற்றுலா - விளம்பரத்திற்குத் திட்டமிடுதல்

அறிமுகம்

சுற்றுலா மையங்களைப் பற்றிய விளம்பரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முதலில் திட்டமிடவேண்டும். விளம்பரத்தில் காணப்படும் தலைப்பு, சொற்றொடர்கள், வாசகங்கள், வண்ணங்கள், அளவு, அமைப்பு, அச்சிடும் முறை போன்றவற்றை தனிக் கவனத்துடன் திட்டமிட வேண்டும். பயணிணின் மனதைக் கவரும்படியாகவும், ஆர்வத்தைத் தூண்டும் படியாகவும் விளம்பரத்தினை அமைக்கவேண்டும். மேலும் எந்த அளவில் எவ்வளவு காலம் விளம்பரம் செய்யவேண்டும் என்பதையும் தீர்மானிக்க வேண்டும். ஒருபக்க விளம்பரம் என்றால் மாதம் ஒருமுறையும் அரைப்பக்க விளம்பரம் என்றால் மாதத்திற்கு இரண்டு முறையும் வெளியிடலாம். மேலும் அடிக்கடி விளம்பரம் செய்யவேண்டியுள்ளதால் சுற்றுலா மையத்தைப் பற்றிய செய்திகளை முதலில் அடிக்கடியும் பின்னர் நீண்ட இடைவெளி கொடுத்தும் விளம்பரப்படுத்தலாம். இவ்வாறு விளம்பரம் திட்டமிட்டு செய்யப்பட வேண்டும்.

விளம்பர சாதனங்களைத் தேர்ந்தெடுத்தல்

விளம்பரம் செய்சின்றவர் விளம்பர சாதனங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த தேர்வானது விளம்பரம் எவ்வளவு இடங்களைச் சென்றடைகிறது. எந்த வகையான மக்களைச் சென்றடைகிறது, எப்படியான வேண்டுகோளை உபயோகிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். விளம்பர சாதனங்களைத் தேர்ந்தெடுப்பது கீழ்க்கண்ட காரணிகளால் அமைகிறது.

 • மக்களின் விளம்பர சாதன பழக்கங்கள்
 • பொருள்களின் தன்மைகள்
 • விளம்பர சாதனத்தின் செலவினம்

மேற்கண்ட மூன்று கருத்துக்களையும் மனதில் கொண்டு விளம்பர சாதனங்களைத் தேர்ந்தெடுத்தால் அது விளம்பரப்படுத்துதலை வெற்றிகரமாக்கும் என்பதில் ஐயமில்லை .

செய்தி தேர்வு

தேர்ந்தெடுக்கப்படும் செய்திகள் மக்கள் மனதில் நல்லெண்ணத்தை எழுப்பி அந்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுப்பதற்குத் தேவையான அளவு செய்திகள் இடம்பெற வேண்டும். விளம்பரச் செய்திகள் மக்கள் கவனத்தை ஈர்ப்பதாகவும், செய்திகள் மிகைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கவேண்டும். சொல்லப்படும் செய்தியானது கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

 1. தகவல்கள் தெளிவானதாகவும், அவை ஒரு முடிவை எடுப்பதற்குத் தேவையானதாகவும் இருக்கவேண்டும்.
 2. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கவேண்டும்.
 3. சொல்லப்படும் செய்தியானது நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்.
 4. சுற்றுலா செல்வதற்கான எண்ணத்தை அவர்களின் எண்ணங்களிலிருந்து வெளிவரச் செய்தலாக இருக்க வேண்டும்.
 5. விளம்பரப்படுத்தப்படும் செய்திகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவில் இருக்க வேண்டும்.

விளம்பர செலவுகள்

சுற்றுலா விளம்பரத்திற்கு செய்யப்படும் செலவுகள் பற்றி வரவு செலவுத் திட்டம் தயாரிக்க வேண்டும். விளம்பரம் செய்ய தேவையான அளவு பணவசதி உள்ளதா என்றும் அந்த பணவசதியை பொருள்களை விற்பனையின் மூலம் பெற முடியமா என்பதையும் கண்டறிதல் அவசியம். ஒரு விளம்பரத்திற்கு எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதையம் தீர்மானிப்பது அவசியம். இப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் கையாளப்படுகின்றன.

 1. விளம்பர நிறுவத்தின் கொடுக்கும் சக்தியின் அடிப்படையில் விளம்பர வரவு செலவு திட்டமிடப்பட வேண்டும்.
 2. பொருள்களின் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்ற முறையிலும் விளம்பரத்திற்கு செலவு செய்யலாம்.
 3. தனக்கு எதிராகப் போட்டியிடும் கம்பெனிகளுக்கு இணையாக செலவிடலாம்.
 4. கடைசியாக கம்பெனியின் விளம்பர நோக்கத்தின் அடிப்படையிலும் வளம்பரத்திற்கு செலவு செய்யப்படலாம்.

விளம்பரம் செய்யப்படும் சாதனங்களும் வழிகளும்

செய்திகளை விளம்பரம் செய்வதற்காக கீழ்க்கண்ட சாதனங்களைப் பயன்படுத்தலாம்.

 1. பொதுவான விளம்பர சாதனங்கள் இதில் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது.
 2. வெளி விளம்பரங்கள், இதில் சுவரொட்டிகள் இடம் பெறுகிறது.
 3. நேரடியாக 'கேட்டலாக்' அனுப்புவதும் அஞ்சல்வழி விளம்பரம் ஆகும்.
 4. திரைப்படம்
 5. சிறப்புப் பரிசுகள், நினைவுப் பொருள்கள் வழங்குதல்
 6. வணிகத்துடன் இணைந்து மேம்படுத்துதல்

விற்பனையாகும் இடத்தில் விளம்பரம் செய்தல் 8) சுற்றுலா பொருட்காட்சி, கண்காட்சி போன்றவற்றில் பங்கெடுத்தல் ஆகியவை விளம்பர சாதனங்களாக கருதப்படுகிறது.

விளம்பரத்தின் விளைவுகளைத் தீர்மானம் செய்யும் முறை

தற்காலத்தில் பல விளம்பர சாதங்கள் மூலம் விளம்பரம் செய்வதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுகிறது. எனவே அதிக செலவு செய்யப்பட்ட விளம்பரத்தின் மூலம் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நிறுவத்தின் முக்கிய காரியமாக உள்ளது. இதனை விளம்பரத்தின் வினைவுகளை பரிசோதித்துப் பார்ப்பதன் மூலம் செய்ய முடிகிறது. இப்படி விளம்பரத்தின் பயன்களை அதிகரித்துக்கொள்ள முடிகிறது. கீழ்க்கண்ட பரிசோதனைகளைச் செய்து விளம்பரத்தின் விளைவுகளைத் தீர்மானிக்கலாம்.

 1. விசாரித்து அறிதல் என்ற முறையின் மூலம் விளம்பரத்தின் விளைவுகளை அறியலாம்.
 2. நினைவுபடுத்தும் பரிசோதனை இந்த முறையில் ஏதேனும் ஒரு விளம்பரப்படத்தில் மட்டும் பிரசுரம் செய்து அது எந்த கட்டுரையில் வந்துள்ளது என்று ஞாபகத்தைப் பரிசோதிப்பதாகும்.
 3. சில விளம்பரங்களை காட்டி அதனை படித்துள்ளார்களா என்பதை கேட்டுஅறிந்து கொள்ளுதல் ஆகும்.
 4. விற்பனை பரிசோதனை மூலமும் அறியலாம். அதாவது இம்முறையின் கீழ் விளம்பரம் செய்த பிறகு நடைபெறும். விற்பனையையும், அதற்கு முன்பு நடைபெற்ற விற்பனையையும் கணக்கிட்டு விளம்பரத்தில் விளைவுகளை அறிதல் ஆகும்.

விளம்பரத்தை திட்டமிடுதலின் பல்வேறு நிலைகள்

ஒரு விளம்பரமானது திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். அப்படி திட்டமிடுதலில் கீழ்க்கண்ட பல்வேறு நிலைகள் உள்ளன.

விளம்பரப் பொருளைப் பற்றிய விளக்கம்

முதலாவதாக விளம்பரம் செய்யப்படும் பொருள் அதனை நுகர்வோருக்கு என்ன பயனைக் கொடுக்கிறது என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமான காரியமாகும். உதாரணமாக ஒரு சோப்பை பற்றி விளம்பரம் செய்யும்போது அது எத்தகைய மூலப்பொருள்களினால் செய்யப்பட்டது என்று சொல்ல வேண்டியதில்லை. அந்த சோப் எவ்வாறு 'சருமத்தின் அழகைப் பாதுகாத்து இளமையைக் கொடுக்கிறது' என்று விளம்பரம் செய்யவேண்டும். அதுபோலவே கார்டயர் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது என்றும், அழகு சாதனப்பொருள்கள் எழிலைக் கொடுக்கிறது என்றும் சிகரெட்டுகள் சமுதாய அந்தஸ்து மற்றும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது என்றும் சுற்றுலா பயணம் மனதிற்கு நிம்மதியைக் கொடுக்கிறது என்றும் விளம்பரம் செய்தால் அது மக்கள் மத்தியில் பிரபலமாகி அந்த பொருள்களின் உபயோகத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்கின்றனர்.

சந்தைப் பிரிவுகளை வரையறை செய்து கொள்ளுதல்

இப்போது விளம்பரம் செய்யப்படுவதற்கு பொருள் இருக்கிறது. அந்த பொருளிலிருந்து மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எதை விரும்புகிறார்கள் என்றும் தெரிகிறது. ஆனால் முக்கியமானது என்னவென்றால் அந்த பொருளை எவ்வளவு பேர் உபயோகிக்கிறார்கள். அவர்கள் எங்கெல்லாம் வசிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

வாடிக்கையாளர்களில் ஆண் பெண் எவ்வளவு பேர், அவர்களின் சமுதாய பொருளாதார அந்தஸ்து, நகரங்களில் அல்லது கிராமங்களில் வசிக்கிறார்களா என்ற செய்தி அவர்கள் வசிக்கும் இடங்களின் தன்மை, ஒரு வாடிக்கையாளர் சராசரியாக எவ்வளவு பொருள்களை வாங்குகிறார், அவர்கள் வாங்கும் திறன் சராசரியானதோ திடீர் என்று உயர்ந்திருக்கிறதா போன்றவை பற்றிய உண்மைகளை தெரிந்துகொண்டு விளம்பரத்தை அதற்கேற்ப திட்டமிடல் வேண்டும்.

சந்தைக் குறிக்கோளின் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளுதல்

விளம்பரங்கள் எந்த சூழ்நிலைகளில் செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்ட பிறகு உற்பத்தியாளர்களின் சந்தைபடுத்தும் திட்டங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் சந்தைத் திட்டத்தில் ஒரு உற்பத்தியாளர் தனது பொருளைப்பற்றிய ஒரு வருடத்திற்கோ அல்லது ஒரு சில வருடங்களுக்கோ திட்டங்களை தீட்டி வைத்திருப்பார். அதை வைத்துக் கொண்டு நீண்டகால அல்லது குறுகிய கால விளம்பரம் செய்யலாம்.

விளம்பரச் செயல்பாடுகளை திட்டமிடல்

இப்போது, என்ன பொருளை விற்பது, யாருக்கு விற்பது, நுகர்வோர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள், அவர்களுக்கு அந்த பொருளை எப்படி கொண்டு சேர்ப்பது என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு, வாடிக்கையாளர்கள் பொருளை கேட்டு வாங்குவதற்காக அவர்களுக்கு செயலூக்கம் அளிக்கும் விதமாக விளம்பரச் செயல்பாடுகளைத் திட்டமிடல் வேண்டும்.

விளம்பரத் திட்டத்தில் இரண்டு முறைகள்

உள்ளன. முதலாவது முறை என்பது நல்ல கருத்துக்களை சுயமான சிந்தனை அடிப்படையில் மக்களுக்கு பறைசாற்றுவதாகும். இவ்வாறு பறைசாற்றும்போது மக்களைச் சென்றடைவதற்காக பத்திரிக்கை சாதனம் மற்றும் வான்வெளி சாதனம், தொலைக்காட்சி, பிரசுரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவைகளில் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன.

விளம்பர சாதனங்கள் மூலம் மக்கள் பார்த்து கேட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ளுதல் முதல் பிரிவு ஆகும். செய்தித்தாள்கள், பிரசுரம், வானொலி அறிக்கைகள், டெலிவிஷன் செய்திகள் ஆகியவைகள் இவற்றில் அடங்கும். இரண்டாவதாக, துண்டு பிரசுரங்கள் சுவரொட்டிகள் வாகனங்கள் மீது ஒட்டப்படும் அறிக்கைகள் போன்றவை மக்களுக்கு செய்திகளின் தன்மைகளை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இவ்வாறு செய்திகளை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்த பிறகு விளம்பர நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் அவசியமாகும்.

மேற்கண்ட முறைகளில் விளம்பரம் செய்யப்பட்டவைகள் என்ன பலனை அளித்துள்ளது என்பது குறித்து பரிசீலனை செய்வது அவசியமாகும். முதலாவதாக நுகர்வோர் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு பொருளை பற்றி முழுமையாக அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பொருளைப்பற்றி அறிந்துகொண்டபின் அதன்மீது நாட்டம் கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்களா என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி நாட்டம் கொண்ட பொருளை எத்தனைபேர் வாங்கினார்கள் என்பதையும், ஒருமுறை வாங்கிய நபர் அப்பொருளின் பயன்பாட்டில் திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் அப்பொருளை வாங்குகின்றார்கள் என்பதையும் பரிசோதித்தல் அவசியமாகிறது.

சுற்றுலா விடுதிகள்

சுற்றுலாவின் அடிப்படைத் தேவைகளில் தங்குமிடமும் ஒன்றாகும். தங்கும் இடத்தின் அமைப்பு, தன்மைகள் செய்யப்பட்டுள்ள வசதிகள் போன்றவை சுற்றுலாவை வளர்க்கும் காரணிகளாகும். வசதியுள்ள விடுதிகளைப் பெற்றுள்ள காரணத்தால், சில சுற்றுலா மையங்களுக்கு பயணிகள் செல்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் வசதியும், நல்ல உணவும், துப்புரவும் சுகாதாரத்துடன் கூடிய விடுதிகள் உள்ள இடங்களில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாறர்போல் தங்குமிட வசதியையும் பெற்றிருக்க வேண்டும். மிகுதியான அறைகள் வீண் செலவை உண்டாக்கும். தங்குமிடம் பலவகைக் உள்ளன. முதலாவது முறை என்பது நல்ல கருத்துக்களை சுயமான சிந்தனை அடிப்படையில் மக்களுக்கு பறைசாற்றுவதாகும். இவ்வாறு பறைசாற்றும்போது மக்களைச் சென்றடைவதற்காக பத்திரிக்கை சாதனம் மற்றும் வான்வெளி சாதனம், தொலைக்காட்சி, பிரசுரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். இவைகளில் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன.

விளம்பர சாதனங்கள் மூலம் மக்கள் பார்த்து கேட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ளுதல் முதல் பிரிவு ஆகும். செய்தித்தாள்கள், பிரசுரம், வானொலி அறிக்கைகள், டெலிவிஷன் செய்திகள் ஆகியவைகள் இவற்றில் அடங்கும். இரண்டாவதாக, துண்டு பிரசுரங்கள் சுவரொட்டிகள் வாகனங்கள் மீது ஒட்டப்படும் அறிக்கைகள் போன்றவை மக்களுக்கு செய்திகளின் தன்மைகளை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இவ்வாறு செய்திகளை மக்கள் மத்தியில் விளம்பரம் செய்த பிறகு விளம்பர நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருதல் அவசியமாகும்.

மேற்கண்ட முறைகளில் விளம்பரம் செய்யப்பட்டவைகள் என்ன பலனை அளித்துள்ளது என்பது குறித்து பரிசீலனை செய்வது அவசியமாகும். முதலாவதாக நுகர்வோர் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு பொருளை பற்றி முழுமையாக அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு பொருளைப்பற்றி அறிந்துகொண்டபின் அதன்மீது நாட்டம் கொள்ளும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்களா என்றும் தெரிந்து கொள்ளவேண்டும். இப்படி நாட்டம் கொண்ட பொருளை எத்தனைபேர் வாங்கினார்கள் என்பதையும், ஒருமுறை வாங்கிய நபர் அப்பொருளின் பயன்பாட்டில் திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் அப்பொருளை வாங்குகின்றார்கள் என்பதையும் பரிசோதித்தல் அவசியமாகிறது.

சுற்றுலா விடுதிகள்

சுற்றுலாவின் அடிப்படைத் தேவைகளில் தங்குமிடமும் ஒன்றாகும். தங்கும் இடத்தின் அமைப்பு, தன்மைகள் செய்யப்பட்டுள்ள வசதிகள் போன்றவை சுற்றுலாவை வளர்க்கும் காரணிகளாகும். வசதியுள்ள விடுதிகளைப் பெற்றுள்ள காரணத்தால், சில சுற்றுலா மையங்களுக்கு பயணிகள் செல்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் வசதியும், நல்ல உணவும், துப்புரவும் சுகாதாரத்துடன் கூடிய விடுதிகள் உள்ள இடங்களில் வருகின்ற பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாறர்போல் தங்குமிட வசதியையும் பெற்றிருக்க வேண்டும். மிகுதியான அறைகள் வீண் செலவை உண்டாக்கும். தங்குமிடம் பலவகைக் கட்டணங்களில் கிடைக்க வேண்டும். சுற்றுலா மையம் மேம்பாடு அடையும்பொழுது தங்குமிட வசதியும் பெருக வேண்டும்.

தங்கும் இடம் ஒரு நாட்டின் மதிப்ப்ைபெருக்கும். ஒரு நாட்டின் பெருமையை அயல்நாட்டுப் பயணிகளிடம் காட்டுவது தங்குமிடமாகும். தங்குமிடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். சுற்றுலா செல்பவர்கள் வெளியிடங்களில் தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்று தங்கியிருக்க விரும்புபவர், அவர்கள் வீட்டில் இருக்கும் அனைத்து வசதிகளையும் எதிர்பார்ப்பர். நல்ல வசதிகள் செய்யப்பட்ட அறைகளால் பொருளாதார வளம் பெருகும். சமூகக் குழுச் சேர்க்கைகள் அதிகமாகும். விடுதி வணிகமும் பெருகும். தங்குமிடம் சுற்றுலாவின் உள்ளமைப்பை வளர்க்கும். தங்குமிடத்திலிருந்து சுற்றுலா உருவாகிறது எனலாம். வளரும் சுற்றுலாத் துறையை மேலும் வளர்ப்பது தங்கும் விடுதிகளாகும்.

விடுதி விளக்கம்

விடுதி என்பதற்கு உணவு, உறையுள், சேவை போன்றவற்றை வழங்கும் ஒரு கட்டிடம் அல்லது நிறுவனம் என்று வெப்ஸ்டர் அகராதி விளக்கம் கொடுத்துள்ளது. விடுதி என்பதற்கு உணவு, இருப்பிடம் வழங்கும் இடம் என்றும், பயணிகள் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கும் இடம் என்றும், பொது இடம் என்று அகராதிகள் விளக்கம் அளித்துள்ளன. விடுதி என்பது பல அறைகளைக் கொண்ட ஒரு கட்டிடமாகும். அது குறிப்பிட்ட விலையில் உணவும் தங்குவதற்கு இடமும் நல்கும். அங்கு உள்நாட்டுப் பயணிகளும், வெளிநாட்டுப் பயணிகளும் தற்காலிகமாகத் தங்குவர். அது அரசாலும் தனியாராலும் நடத்தப்படும் அரங்குகள், கடைகள் போன்ற பிற வசதிகளும் இருக்கும். விடுதி என்பது ஒரு விருந்தினரை வரவேற்பது போலவும், பயணியின் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வினையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்யும் வசதியாக இருக்க வேண்டும்.

விடுதிகளின் வரலாறு

சுற்றுலாப் பயணம் செய்பவர்களுக்கு இரவில் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இடவசதி வேண்டும். கன்னியாகுமரியில் உள்ள ஒருவர் கொல்கத்தாவிற்குச் சுற்றுப் பயணம் செல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ஒரே நாளில் கொல்கத்தாவிற்குச் சென்று அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வரமுடியாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் இரவிலும் பகலிலும் தங்குவதற்கு இடம் வேண்டும். எந்தப் பயணிக்கும் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு நாளைக்கு மேல்

தங்குவதற்கும் ஒய்வெடுப்பதற்கும் வசதியான இடம் வேண்டும். குடும்பத்துடன் சுற்றுலாச் செல்பவர்களுக்கு இரவில் தங்குவதற்கு அறைகள் வேண்டும்.

சத்திரங்கள்

ஆரம்பத்தில் சத்திரங்கள் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்தன. உரோமர்களின் ஆட்சிக் காலத்தில் சத்திரங்களும், அருந்தகங்களும் இருந்தன. அவை உணவு, பானங்கள், கேளிக்கைகள் போன்றவற்றைப் பயணிகளுக்கு அளித்தன. உரோமப் பேரரசு வீழ்ந்தபின் சத்திரங்கள் தங்கள் மதிப்பை இழந்தன. பல ஆண்டுகள் வரை சத்திரத் தொழில் வளராமல் இருந்தது. உரோமப் பேரரசு வீழ்ந்தபின் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. அடிக்கடி பயணம் செல்லும் பயணிகள் இல்லாமல் போயினர். எனவே சத்திரத்தின் தேவையும் இல்லாமல் போய்விட்டது. சத்திரங்கள் நடத்துவது பழமையான தொழிலாகும்.

கிறித்தவக் கோயில்கள்

அதன்பின் கிறித்துவக் கோயில்கள் சுற்றுலாப் பயணிகளுக்குப் புகலிடம் அளித்தன. அதனால் சமயத் தொடர்பான சுற்றுலாக்கள் பெருக ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான மக்கள் சமயத் தொடர்புள்ள இடங்களுக்குச் சுற்றுலாச் சென்று வந்தனர். துறவியர் மடங்களும், மாவட்டத் தலைமைக் கிறித்துவக் கோயில்களும் பயணிகளை வரவேற்று, அவர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து தந்தன. பயணிகள் இலவசமாகத் தங்கித் சென்றனர். பணக்காரர்கள் மடத்துத் தலைவர் அறையில் தங்கினர். ஏழைகள் சாதாரண இடங்களில் தங்கினர். இந்தியாவிலும் கொடையாளிகள், அரசர்கள் போன்றோரால் கட்டப்பட்ட கோயில்கள், மண்டபங்கள், தருமசத்திரங்கள், வணிகர் கூட்டம் தங்கும் வழிமனைகள் போன்றவற்றில் பயணிகள் தங்கியிருந்தனர்.

அமெரிக்க அருந்தகம்

கி.பி.1634-ல் சாடுவேல் கோல்ஸ் என்பவர் அமெரிக்காவில் முதன்முதலில் ஒரு அருந்தகத்தை ஏற்படுத்தினார். அவர் கி.பி.1630-ல் அமெரிக்காவிற்கு வந்தார். கி.பி.1780ல் அவை பொதுமக்கள் கூடும் புகழ்பெற்ற இடங்களாக மாறின. உணவு உண்ணவும், மது அருந்தவும், கேளிக்கைகளைக் கண்டு களிக்கவும் மக்கள் அங்குக் கூடலாயினர். அங்குச் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றன. கி.பி.1783-ல் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன் அவர்கள் நியூயார்க்கில் உள்ள பிருன்கிஸ் என்ற விடுதியில் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு விருந்தளித்தார். கிரீன்டிராகன் என்னும் சத்திரத்தில் புகழ்பெற்ற பாஸ்டன் தேநீர் விருந்து நடைபெற்றது. அவ்விடங்களில் கூடிய மக்களே அமெரிக்கப் புரட்சியை உருவாக்கினர்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

3.0
Anonymous Oct 10, 2019 09:38 AM

சுற்றுலா விளம்பரம்ங்களி பங்கு

VICKY Oct 02, 2019 09:35 PM

சுற்றுலாவின் விளம்பரத்தின் பங்கு

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top