பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கிடங்குகள் பயன்பாடும் நிர்வாகமும்

ஊரக கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் (RIDF Scheme) கிடங்குகள் கட்டுவதின் பயன்கள் மற்றும் நிர்வாகம் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

கிடங்குகள் பயன்பாடுகளும் அவற்றை நிர்வகிக்கும் முறைகளும்

  1. பொதுவாக அறுவடை காலங்களில் வேளாண் விளை பொருட்களின் சந்தை விலை குறைவாகவே இருக்கும். கிராமப்புறங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களை விஞ்ஞான முறைப்படி சேமித்து நல்ல விலை வரும் போது விற்பனை செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் இல்லை. அதே நேரத்தில் அரசின் மானியத்துடன் கட்டப்படும் இத்தகைய ஊரக கிடங்குகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேமித்து வைத்து சந்தையில் நல்ல விலை வரும்போது விற்பனை செய்து அதிக இலாபம் பெற ஏதுவாகும்.
  2. இக்கிடங்குகளில் விஞ்ஞான முறைப்படி வேளாண் விளைபொருட்கள் சேமிக்கப்படுவதால் விளைபொருட்களின் தரம் பாதுகாக்கப்படுவதோடு, விளைபொருட்களை சாதாரணமாக சேமிக்கும்போது ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேதாரம் இல்லாமலும், தரம் குறையாமலும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
  3. எனவே தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தில் தங்கள் சங்கத்தில் இத்தகைய கிடங்குகள் கட்டப்படும் போது அதன் கட்டுமான பணி தரம் குறையாமல் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்.
  4. ஏற்கனவே கிடங்குகள் கட்டப்பட்டிருப்பின் அல்லது தங்கள் பதவிக் காலத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற பின், அக்கிடங்குகள் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் பயன்படுத்தப்படுவதை ஊக்கமுடன் நிர்வாகக் குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
  5. இக்கிடங்குகளில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை கொதுவை கடனுக்காக வைக்கும்போது, அல்லது வாடகைக்கு வைக்கும்போது அவற்றை உரிய முறையில் பாதுகாப்பது நிர்வாக குழுவின் கடமையாகும்.
  6. கடன்கள் உரிய காலத்தில் வசூலிக்கப்பட்டு சங்கத்தின் நிதிக்கு நட்டமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top