பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்

இந்தியாவில் திட்டமிடுதலின் தோற்றம், அதன் வகைகள், குறிக்கோள் மற்றும் நிதி ஆயோக் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

திட்டமிடுதலின் குறிக்கோளானது, இருக்கின்ற வளங்களை திறமையாக மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட நோக்கங்களை குறித்த நேரத்தில் அடைவதேயாகும். சந்தைமுறையும், விலைவாசி முறையும் மட்டும் ஒரு நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதிபடுத்தி விடாது என்பதை பொருளாதார திட்டமிடுதலின் தத்துவம் அங்கீகரிக்கின்றது.

இந்தியாவில் திட்டமிடுதலின் தோற்றம்

1934-ஆம் ஆண்டு பொறியியளாலரும் மைசூரின் மதிப்புமிக்க மனிதருமான திரு.ஆ.விஸ்வேஸ்வரய்யா என்பவர் “இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது அடுத்த 10 வருடங்களுக்கான இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கான வரைவு அறிக்கையாக பார்க்கப்பட்டது. இதனடிப்படையில் தேசிய திட்டமிடல் என்ற கருத்து தோன்ற இவர் காரணமானார்.

1938-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு தலைமையில் தேசிய திட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு 10 ஆண்டுகளுக்கு மேல் பல முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை செய்தது.

பரவலாக பாம்பே திட்டம் என்று அறியப்பட்ட “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் (1944)” அடிப்படை தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தது. அதே நேரத்தில் அடுத்த 15 வருடங்களுக்குள் வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி தலா வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டிருந்தது.

1945-ல் ஆ.N.ராய் என்பவரால் மக்களின் திட்டம் என உறுவாக்கினார். 1950-ல் ஜெய்பிரகா~; நாராயணன் என்பவரால் சர்வோதயா திட்டம் உருவாக்கப்பட்டது.

ஸ்ரீமான் நாராயண் என்பவரால் ‘காந்திய திட்டம்’ உருவாக்கப்பட்டது. இத்திட்டம் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை வலியுறுத்தியது. குடிசைத்தொழில் மூலமாக ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தது.

இந்திய சுதந்திரத்திற்கு பின், இந்திய அரசால் ‘திட்டக்குழு’ 1950-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்குழு மனிதவளம், மூலதனம் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்வது மற்றும் தேசிய வளங்களை சிறந்த முறையிலும் சமமான அளவிலும் பயன்படுத்த திட்டம் வகுத்தது.

திட்டமிடலின் வகைகள்

திட்டமிடுதலில் பல வகைகள் உள்ளன. சில முக்கிய திட்ட மிடுதலின் வகைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

ஆணை திட்டமிடல்

இந்த வகை திட்டமிடலானது சீனா, முன்னாள் சோவியத்ர~;யா, கியூபா மறறும் வடகொரியா போன்ற சமத்துவ நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி ஒரே ஒரு மைய அதிகாரம் மட்டும் இருக்கும். இந்த மைய அதிகாரமானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட இலக்கு மற்றும் முன்னுரிமையை எட்ட திட்டம் தீட்டுதல், வழிகாட்டுதல் அதை நடைமுறைபடுத்த ஆணையிடல் போன்ற வேலைகளை செய்யும். மேலும் இத்திட்டம் எண்ணிக்கை அளவிலான தயாரிப்பு, அட்டவணைப்படுத்தப்பட்ட விநியோகம் மற்றும் பொருள்களின் உற்பத்தி, விலை கட்டுப்பாடு, வெளிநாட்டு பரிவர்த்தனையை பயன்படுத்துதல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகியவற்றை தீர்மானிக்கிறது.

மையப்படுத்தப்பட்ட திட்டமிடல்

இம்மையப்படுத்தப்பட்ட திட்டமிடலில் அனைத்து பொருளாதார முடிவுகளும் மத்திய அல்லது மைய அரசால் எடுக்கப்படும். இந்த அரசு பொருளாதார திட்டங்களை வகுத்தல், குறிக்கோள்களை தீர்மானித்தல் மற்றும் இலக்கு மற்றும் முக்கியத்துவங்களை நிர்ணயித்தல் போன்றவைகளை செய்கிறது. இந்த அரசானது நுகர்வு, உற்பத்தி, ஊதியம் மற்றும் விலை ஆகியவற்றின் முடிவுகளை எடுக்கின்றது. எவ்வளவு முதலீடுகள் செய்யப்பட வேண்டும்? விலை எவ்வளவு இருக்க வேண்டும்? வெளியீடு எவ்வளவு இருக்க வேண்டும்? பொருட்களை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும்? என்பன. மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் பெரும்பாலும் சமத்துவ அல்லது கம்யூனிச நாடுகளிலேயே செயல்படுத்தப்படுகிறது.

பன்முகப்படுத்தப்பட்ட திட்டமிடல்:

பன்முகப்படுத்தப்பட்ட திட்டமிடலின் செயல்பாடானது கீழிருந்து மேலாக அமையும். பல நிர்வாக குழுக்களை கலந்தாலோசித்தபின் பொருளாதார திட்டத்தினை ‘திட்ட மிடலுக்கான குழு’ தீர்மானிக்கும். வௌ;வேறு தொழில்கள் சார்ந்த திட்டங்களை அந்ததந்த தொழில்களை சேர்ந்த பிரதிநிதிகளை வடிவமைத்துக்கொள்கின்றனர். இந்த வகை திட்டமிடலில், திட்டமிடலுக்கான குழுவானது தனியார் துறைக்கு ஊக்க தொகை வழங்குமாறு மத்திய மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்துகிறது.

ஜனநாயக முறையில் திட்டமிடல்:

இந்த ஜனநாயக முறையில் திட்டமிடுதல் முறையில் விலை நிர்ணயக் கொள்கையின் அடிப்படையில் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது. தனியார் துறையை நிதி மற்றும் பணக்கொள்கையின் மூலம் அரசு கட்டுப்படுத்துகிறது. நுகர்வோரின் இறையாண்மையை பாதுகாக்க அரசு ஏகபோக உரிமைக்கு எதிரான சட்டங்களை இயற்றுகின்றது.

சுழல் திட்டமிடல்

இச்சுழல் திட்டத்தினை இடைக்கால திட்டம் என்றும் கூறலாம். பொதுவாக இது ஒரு வருட அல்லது குறிப்பிட்ட சில வருடங்களுக்கோ நடைமுறையில் இருக்கும்.

குறுகிய கால திட்டமிடல்:

இந்த திட்டத்தினை ‘கட்டுப்பாட்டுத்திட்டம்’ என்று அறியப்படும். இது ஒரு வருட திட்டங்களை மட்டும் உள்ளடக்கியது. இதை ‘வருடாந்திர திட்டம்’ என்றும் கூறலாம். இவ்வருடாந்திர திட்டம் அல்லது பட்ஜெட்டில் நிதி சார்ந்த திட்டங்கள் உள்ளது. அதாவது நிதி மூலதனம் மற்றும் செயல்முறை ஆகியவற்றை காணலாம்.

நடுப்பருவத் திட்டமிடல் (அ) இடைக்காலத் திட்டமிடல்:

இத்திட்டமிடல் 3 முதல் 7 வருடங்களுக்கான திட்டம். பொதுவாக, நடுப்பருவத் திட்டமிடல் என்பது ஐந்து வருடங்களுக்கான திட்டமாக இருக்கும். தல வருமானத்தை உயர்த்துதல் வேலைவாய்ப்பை அதிகரித்தல், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைதல், வெளிநாட்டு உதவிகளை சார்ந்திருப்பதை குறைத்தல், உள்நாட்டு வளங்கள் மூலம் வருவாயை அதிகரித்தல் மற்றும் பிராந்தியங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல் போன்றவை இந்த திட்டமிடலின் முக்கிய குறிக்கோள்களாக இருக்கும்.

நீண்டகாலத் திட்டமிடல்

இவ்வகை திட்டமிடல் 10 முதல் 30 வருடங்களுக்கானதாகும். இதை “தொலை நோக்குத் திட்டம்” என்று அறியப்படும். இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் கிராம புறங்களை ஒளிரச் செய்வது. இந்த நீண்டகால திட்டத்திற்கு பின்னால் இருக்கும் அடிப்படை கருத்தானது பொருளாதாரத்தில் அமைப்பு ரீதியான மாற்றத்தை கொண்டுவருதலாகும். நீண்டகால திட்டத்தின் கீழ் தேர்வு செய்வதற்கான சுதந்திரமும் திட்டமிடலில் பரந்த நோக்கமும் உண்டு.

சுட்டிக்காட்டும் திட்டமிடல்

இந்த வகை திட்டமிடலில், அரசானது தொழில் மற்றும் வணிக பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் முன் கூட்டி யே கலந்தாலோசித்து, திட்டத்தின் நோக்கம் என்ன அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது. முன்னுரிமை மற்றும் இலக்கையும் சுட்டிக் காட்டும். 1991 ம் ஆண்டில் இந்தியா தனியார்மயமாதல் மற்றும் தாராளமயமாதல் கொள்கையை தழுவியதற்கு பின்னால் இந்த சுட்டிக்காட்டும் திட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்திட்டம் 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் தனியார்துறை முக்கிய பங்கினை செலுத்தி திட்டமிடுதல் மற்றும் நிதி ஆயோக யு. ஏஐஐ.13 வருகிறது. அரசு ஒருங்கிணைப்பாளராகவும், கட்டுப்பாட்டாளராகவும், மற்றும் ஒழுங்குமுறையாளராகவும் இருக்கின்றது.

திட்டமிடலின் குறிக்கோள்

பொதுவாக இரு வகையான குறிக்கோள்கள் உண்டு. அது குறுகிய கால குறிக்கோள் மற்றும் நீண்ட கால குறிக்கோள். பொருளாதாரம் உடனடியாக சந்திக்கின்ற பிரச்சினைகளின் அடிப்படையில் குறுகிய கால குறிக்கோளானது திட்டத்திற்கு திட்டம் மாறுபடக்கூடியது. ஆனால் நீண்டகால குறிக்கோள் தொடர்ச்சியான நிகழ்வாகிறது. நமது ஐந்தாண்டு திட்டங்கள் ஒரு நீண்டகால குறிக்கோள்கள்களை கொண்டவை. அவை,

  1. பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல்
  2. பொருளாதார ஸ்திரத்தன்மை
  3. பொருளாதார தற்சார்பு
  4. சமூக நீதி
  5. பொருளாதார நவீனமயமாதல்

முன்னாள் திட்டக்குழு

திட்டக் குழுவின் தலையாய கடமையானது. ஐந்தாண்டு திட்டங்களை வகுத்தலாகும். மனித வளம், மூலதனம் மற்றும் மூலப்பொருள் போன்றவற்றை சிறந்த முறையிலும் சமமான முறையிலும் பயன்படுத்த சரியான திட்டமிடல் முறை இக்குழுவால் கையாளப்படுகிறது. மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களை திட்டக்குழு உயர்மட்ட நிலையில் ஒருங்கிணைக்கிறது.

திட்டக்குழுவின் கீழ் திட்டம் வகுத்தல் (12-வது ஐந்தாண்டு திட்டம் வரை)

தொலைநோக்கு திட்டத்தின் அடிப்படையில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து திட்டங்களை தீட்டுதல், சில முன்னுரிமைகளை தீர்மானித்தல், இருக்கின்ற வளங்களை கணக்கிடுதல் மற்றும் அந்த வளங்களை வௌ;வேறு வகையான நிறுவனங்களுக்கு பங்கிடுதல் ஆகியவை இக் குழுவின் திட்டமிடுதலின் முதல் செயலாகும்.

அணுகுமுறையின் வடிவம் “தேசிய வளர்ச்சிக்குழு” முன் வைக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். Nனுஊ-ன் சம்மதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்ற சம்மமத்திற்கு பின்பு இந்த வரைவானது ஐந்தாண்டு இலக்குகள் நிர்ணயிக்க வழிகாட்டுதல்கள் செயல்படும் குழுக்களுக்கு வழங்கப்படும். திட்ட குழுவின் பல்வேறு பிரிவுகளின் துணையுடன் செயல்பட இக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் திட்டக்குழு – மத்திய அமைச்சரவை – தேசிய வளர்ச்சிக் குழு – நாடாளுமன்றமே கடைசியாகும்.

பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (2012-17)

12-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் (2012-17)

  • சராசரி வளர்ச்சி விகிதத்தின் இலக்கு 8.2 சதவிகிதம் ஆகும்.
  • இது முன்னதாக 9 சதவிகிதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் உள்நாட்டு மற்றும் உலக சூழ்நிலையால் 8.2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
  • உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
  • இந்த 5-ஆண்டு காலத்தில் விவசாயத்துறை வளர்ச்சி 4 சதவிகித்தை அடைய வேண்டும்.
  • வறுமை ஒழிப்பில், திட்டக்குழு வறுமை விகிதத்தை 10 சதவிகிதமாக குறைக்க வேண்டும். தற்பொழுது
  • 30 சதவிகித மக்கள் வறுமையில் வாழ்கின்றனர்.

திட்டமிடலின் சாதனைகள்

தேசிய வருமானம் அதிகரிப்பு

திட்டக் காலங்களில் தேசிய வருமானம் அதிகரித்துள்ளது. தேசிய வருமானத்தின் உயர்வு சராசரியாக ஆண்டொன்றிதிட் டமிடுதல் மற்றும் நிதி ஆயோக யு. ஏஐஐ.17 ற்கு 1.2 சதவிகிதம் (1901 முதல் 1947 வரை) 2012-13ல் புனுP-யின் வளர்ச்சி 5 சதவிகிதம் இது 2011-12ல் வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருந்தது.

தல வருமானம் அதிகரிப்பு

சுதந்திரத்திற்கு பிறகு, தல வருமானத்தின் உயர்வு என்பது பூஜ்ஜியம். ஆனால் சுதந்திர இந்தியாவில் பொருளாதார திட்டமிடலை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு தல வருமானமானது தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. வாழ்க்கை தரத்தை அளவிடக்கூடிய பாதையான இந்தியா வின் தல வருமானம் 11.7 சதவிகிதம் உயர்ந்து மாதம் ஒன்றிற்கு ரூ.5729-ஆக 2012-13ல் ஆண்டு இருந்தது. இதுவே முந்தைய நிதியாண்டில் ரூ.5130 ஆக இருந்தது.

விவசாய வளர்ச்சி

வேளாண் உற்பத்தி பொருட்கள் திட்டகாலங்களில் உயர்ந்து காணப்பட்டது. அவை சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகள், பால், முக்கிய நறுமணப்பொருள்கள், சில குறிப்பிட்ட நார் பயிர்கள், திணை மற்றும் ஆமணக்கு இழைபொருளான சணல் போன்றவற்றை இந்தியா உற்பத்தி செய்து உலகில் மிகப்பெரிய உற்பத்தியாளராக திகழ்கிறது. உலகில் பலர் உட்கொள்ளக்கூடிய உணவான கோதுமை, அரிசி போன்றவை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மேலும் இந்தியா பலவகையான உலர் பழ தயாரிப்பிலும், ஜவுளிக்கு தேவையான மூலதனப் பொருட்கள், தண்டு மற்றும் கிழங்கு பயிர்கள், பருப்பு வகைகள், வளர்க்கப்பட்ட மீன், முட்டை, தேங்காய், கரும்பு மற்றும் எண்ணிலடங்காத காய்கறி வகைகள் உற்பத்தியிலும் உலகில் முன்னனியில் இருக்கின்றது. மேலும் கால்நடை மற்றும் பறவையினங்கள் வளர்ப்பிலும் அதை சந்தைப்படுத்துவதாலும் உலகில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது.

தொழில் வளர்ச்சி

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26 சதவிகிதம் தொழில்களுக்கானது மற்றும் 22 சதவிகிதம் பணியாளர்களையும் கொண்டது. பெயரளவிலான தொழிற்சாலை வெளியீடுகளில் இந்தியா உலகில் 11வது இடத்தில் உள்ளது. இந்திய தொழில் துறையானது. 1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு தாராளமயக் கொள்கையால் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இது இறக்குமதி தடைகளை நீக்கி, வெளிநாட்டு போட்டியாளர்களை கொண்டுவந்து, சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி, உள்கட்டமைப்பை உயர்த்தியதால், தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது.

தற்சார்பு

கணிசமான முன்னேற்றத்தால் தர்சார்பு நிலையை அடைந்துள்ளது. நாம் உணவு தானியங்களுக்காக மற்ற நாடுகளை நீண்ட காலத்திற்கு நம்பியிருக்க முடியாது. அதே சமயம், அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு நாம் போதுமான அளவிற்கு முதலீடு செய்ய வேண்டும். நுகர் வோருக்குத் தேவையான அனைத்து வகையான அடிப்படை பொருள்களை தயாரிக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

வேலைவாய்ப்பு

1983 முதல் 2011 வரை இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது சராசரியாக 7.4 சதவீதமாக இருந்தது. இதில் அதிகபட்சமாக 2010 டிசம்பரில் 9.4 சதவீதமாகவும் குறைந்தபட்சமாக 2011 டிசம்பரில் 3.8 சதவீதமாகவும் இருந்தது. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது தீவிரமாக வேலை தேடும் மக்களின் எண்ணிக்கையையும், மொத்த தொழிலாளர்களையும் வைத்து கணக்கிடப்படுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி

இந்த திட்டமிடல் காலத்தில், இந்தியா அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அதிக முன்னேற்றம் கண்டது. உண்மை யில் வளர்ச்சியின் வேகம் அதிகம். அதனால் தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியா உல கில் மூன்றாம் இடத்தை பெற்றது. இந்தியா மற்றும் ஐரோப் பிய ஒன்றியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

மூலதன ஆக்கம் ஃ உருவாக்கம்

  • மொத்த மூலதன உருவாக்கம் என்பது நிலை சொத்துக்களின் கூடுதல் முதலீடு மற்றும் சரக்கிருப்பு அளவின் நிகர மாற்றத்தைக் குறிக்கிறது.
  • இந்திய திட்டங்களின் முக்கிய தோல்விகளும் பின் னடைவுகளும்:
  • இந்திய திட்டமிடலின் தோல்வி மற்றும் பின்னடைவுக்கான காரணங்களாவன

பொருளாதார தேக்கம்

1950க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் தேசிய வருமானத்தின் வளர்ச்சி 1.15 சதவிகிதம் யு.ஏஐஐ.18 வுNPளுஊ தேர்வுக்களுக்கான பொது அறிவு கiயெட அதே சமயம் தல வருமானத்தின் வளர்ச்சி 0.5 சதவிகிதத்திற்கும் குறைவு. இதை “ஹிந்து வளர்ச்சி விகிதம்” என்பார் கள். திட்ட நடைமுறையிலும் இதே நிலை தொடர்ந்தது. 70 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் விவசாய துறையை சார்ந்துள்ளனர்.

வறுமை:

இந்த ஐந்தாண்டு திட்டங்கள் வறுமையை நீக்க தவறிவிட்டன. வறுமையில் இன்னும் 40 சதவிகித மக்கள் வறுமையின் கோர பிடியில் சிக்கியுள்ளனர். சத்தற்ற உணவு, குறைவான ஆரோக்கியம், மோசமான வாழ்க்கை, தரம் போன்றவற்றிற்கு வறுமை காரணமாக உள்ளது.

வருமானம் மற்றும் செல்வங்களில் சமமில்லாத பங்கீடுகள்:

கிராமம் மற்றும் நகர் புறங்களுக்கிடையே வருமானம் மற்றும் சொத்தானது சரியான பங்கீடு செய்வதில் திட்டமிட தோல்வியை அடைந்துள்ளது. மேலும் வருமானமானது உயர் குடியினரிடமே சென்று சேர்ந்து சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையை கவலைக்குள்ளாக்கியது.

உயர்ந்துவரும் வேலைவாய்ப்பின்மை:

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையானது மக்கள் தொகை பெருக்கம், கல்வி முறைகளில் குறைபாடு மற்றும் நிலையில்லாத வேளாண்மைக்கு காரணமாகிறது.

அசாதாரணமாக மக்கள் தொகை வளர்ச்சி:

மக்கள் தொகை பெருக்கத்தையும் அடர்த்தியையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று எல்லா திட்டங்களிலும் சொல்லப்பட்டது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியே மிஞ்சியது. இந்த மக்கள் தொகை பெருக்கம் இரண்டு விதமான பிரச்சினைகளுக்கு வழிகோலியது. அதாவது, வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை.

பணவீக்க அழுத்தம்:

வௌ;வேறு ஐந்தாண்டு திட்டங்களில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவாக பணவீக்கம் தோன்றியது. நிரந்தர வருமானம் பெறக்கூடிய மக்களின் வாழ்க்கைத் தரம் கேள்விக்குறியாகியது. கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு லஞ்சம், கள்ள சந்தை அல்லது கருப்பு சந்தை, நேர்மையின்மை போன்ற வேறு விதமான பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டது.

வெளிநாட்டு வாணிப செலுத்து சமநிலை

வெளிநாட்டு வாணிப செலுத்து சமநிலையானது தொடர்ந்து சாதகமில்லாமல் இருக்கிறது. இந்த நிலையானது ஆறாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து மோசமானது. இது ஏழாவது திட்டத்திலும் முன்னேற்றமடையவில்லை. மேலும் 90களிலும் இந்நிலை தொடர்ந்தது. பின்பு வெளிநாட்டுக்கடன் ஊக்ககுவிக்கப்படுவதில்லை. 2014-15 முதல் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 7.8 பில்லியன் அமெரிக்க டாலர். இது 2013-14ன் முதல் காலாண்டில் 21.8 பில்லியன் அமெரிக்க டாலர் (4.8 சதவிகிதம் புனுPல்). நடப்புக் கணக்கு பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்றால் ஏற்றுமதியை உயர்த்தி, இறக்குமதியை குறைக்க வேண்டும்.

தேவையற்ற செலவினங்கள்:

தேவையற்ற செலவுகள் உயர்ந்து வருவதால் இந்தியா முதலீடு குறைபாடு உடையதாக இருக்கிறது. மேலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கட்டுவதில் தேவையில்லாமல் அதிக முதலீடு செய்யப்படுகிறது.

நிதி ஆயோக்

திட்டக் குழுவை நீக்கி நிதி ஆயோக்-ஐ உருவாக்கும் அறிவிப்பை இந்திய பிரதமர் அறிவித்தார். வளர்ச்சியின் கட்டங்களில் முக்கிய வழிகாட்டுதலையும் வியூக உள்ளீடுகளையும் நிதி ஆயோக் வழங்கும்.

நோக்கங்கள்

  1. கூட்டாண்மை அரசில் மாநிலங்களை விரைவாக செயல்படவைத்தல்.
  2. கிராம அளவில் திட்டங்களை தீட்டி அதிகபட்ச வளர்ச்சியை எட்டுதல்.
  3. பொருளாதார வளர்ச்சியில் உள்ள இடர்பாடுகளை களைவதில் அதிக கவனம் செலுத்துதல்.
  4. பொருளாதார வளர்ச்சித் திட்டங்களில் நாட்டின் பாதுகாப்பு திட்டங்களையும் இணைத்துக் கொள்ளுதல்.
  5. கூடுதல் அறிவு, புதிய கண்டுபிடிப்பகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவியளித்தல்.
  6. பொருளாதாரத்துறைகள் துணைத் துறைகளுக்கு இடையே எழக்கூடிய பிரச்சனைகளை கலைவதற்கு அமைப்பை ஏற்படுத்துதல்.
  7. நல்லரசு கொண்டு நாட்டில் உள்ள கலை வளங்களை ஆராய்ச்சி செய்தல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துதல்.

பணிகள்

  1. வளர்சிக்கு தேவையான அடிப்படையான நிலையான கருத்து மற்றும் வழிகளை வழங்குதல்.
  2. மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முழுமையான ஒத்துழைப்பை உருவாக்குதல்.
  3. மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் முக்கியமான கொள்கைகளில் தொழில்நுட்ப அறிவை வழங்குதல்.
  4. நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை மற்றும் கூட்டாண்மையை மாநிலங்களிடையே மேம்படுத்தி நாட்டை வலிமையானதாக்குதல்.
  5. அமைச்சர்கள் மத்திய மாநில அரசுகளில் ஒத்துழைப்புடன் அரசின் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  6. கிராம வளர்ச்சிக்கு திட்டமிட்டு அரசின் மூலம் வளர்ச்சியடைய செய்தல்.
  7. சமூக வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியினால் ஏற்படக்கூடிய இடர்களை குறைத்தல்.
  8. சர்வதேச தேசிய அனுபவசாலிகள், பயிற்சியாளர்கள், பங்குதாரர்களை கொண்டு அறிவு, புதிய கண்டுபிடிப்பு, தொழில் அதிபர்களுக்கு உதவி போன்றவைகளை ஏற்படுத்துதல்.

நோக்கங்களும் வாய்ப்புகளும்

  1. நோக்கங்களையும் வாய்ப்புகளையும் நிதி ஆயோக் கொண்டுள்ளது. முதல் மற்றும் இறுதி புகலிடம் தருபவராக இன்றி உறுதுணை புரிபவராக அரசு இயங்கும் என்கிற மேலாண்மை கோட்பாடு கடை பிடிக்கப்படும்
  2. உணவு பாதுகாப்பிலிருந்து கலவை வேளாண்மை உற்பத்திக்கு வளர்ந்து செல்லுதல் மேலும் விவசாயிகள் விளைவித்த பொருட்களுக்கு உண்மையான வருமானத்தை அடையச் செய்தல்
  3. இந்தியா உலக விவகாரங்களின் விவாதங்களில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.
  4. நடுத்தர வர்கத்தினை வேகமான பொருளாதாரத்தில் இணைத்தல் மற்றும் ஆற்றல் வளங்களை முழுமையாக பயன்படுத்துதல்
  5. இந்தியாவின் தனித்துவமிக்க மனித மூலதனத்தின் அறிவுசார், விஞ்ஞானம் சார்ந்து மற்றும் தொழில் முனைவோர் திறன்களை தூண்டுதல் திட்டமிடுதல் மற்றும் நிதி ஆயோக் யு. ஏஐஐ.19
  6. வெளிநாடுவாழ் இந்தியர்களின் புவி அரசியல் மற்றும் புவிப்பொருளாதார வலிமைகளை இணைத்துக் கொள்ளுதல்
  7. ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழிடங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கி நகரமயமாதலை அடைதல்
  8. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆட்சிமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்

சிக்கலான சவால்களை போக்கி இந்தியாவை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே நிதி ஆயோக்கின் குறிக்கோளாகும். அவை,

  1. இந்தியாவினுடைய மக்கள்தொகை, இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் ஆற்றலை கல்வியின்
  2. மூலம் உணர்தல், திறன் வளர்ப்பு, பாலின பாகுபாடுகளை கலைதல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல்
  3. வறுமையை ஒழித்து ஒவ்வொரு இந்தியனும் கண்ணியத்துடனும் மற்றும் சுயமரியாதையாகவும் வாழ வாய்ப்பளித்தல்
  4. பாலினபாகுபாடு, சாதி மற்றும் பொருளாதார வேறுபாடுகளில் சமமின்மையை தீர்த்து வைத்தல்
  5. கிராமங்களை ஒருங்கிணைத்து அவற்றை வளர்ச்சி பாதைக்குள் கொண்டுவருதல்
  6. 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுதொழில்களுக்கு உதவி புரிந்து வேலைவாய்ப்பினை உருவாக்குதல்
  7. நமது சுற்றுச்சுழல் மற்றும் சூழியியலை பாதுகாத்தல் சமீபத்தில் திரு. அர்விந்த பானாகாரியா (பொருளாதார நிபுணர்) நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார். நிதி ஆயோக்கின் குறிக்கோள்கள்
  8. கூட்டுறவு கூட்டாட்சியை வார்த்தல், மாநிலங்களையும் பங்குபெற வைத்தல்.
  9. கிராம அளவில் திட்டங்களைத் தீட்டுதல், உயர் நிலையில் அவற்றை ஒருங்கிணைத்தல்.
  10. பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்தின் பயனை பெறாதவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துதல்.
  11. பொருளாதார கொள்கை தேசிய பாதுகாப்பின் நலனில் அக்கறை கொண்டதாக இருக்கும்.
  12. புதிய செல்முறைக்கான பின்னூட்டம் தொடர்ந்து பெறப்படும்.
  13. தேசிய மற்றும் உலக அளவிலான சிந்தனையாளர்களுடன் பங்கு கொள்ளுதல்.
  14. அறிவு, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் உதவி அமைப்பை உருவாக்குதல்.
  15. துறைகளுக்குள்ளும் வெளியேயும் உள்ள சிக்கல்கலுக்கு தீர்வு காணும் நடைமுறைகளை உருவாக்குதல்.
  16. நல்ல நிர்வாகத்திற்கான சிறந்த வளங்களைக் கொண்ட மையம் அமைத்தல்.
  17. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் கொள்ளல் மற்றும் தகுதியை வளர்த்தல்.

ஆதாரம் : அறம் ஐ.ஏ.எஸ் அகடாமி, அண்ணாநகர், சென்னை

2.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top