பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / பொருளாதாரம் / இந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு

இந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு

வரையறை

இந்திய தேசிய வருமான கணக்கீட்டு குழு (1951)வின் வரையறையின்படி “தேசிய வருமானம் என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் மற்றும் சேவைகளில் இரட்டிப்பு இல்லாத கணக்கீடு ஆகும்”.

தேசிய வருமானம் என்பது நாட்டில் ஒரு வருடத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சேவைகள் தேய்மானத்திற்கு பிறகு இரட்டை எண்ணிக்கை இல்லாமல் இருப்பவைகள் மற்றும் நுகர்வு, மூலதனங்கள் இதனுள் அடங்கும்.

சர்வதேச பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட நிகர லாபம்

ஐக்கிய நாடுகளின் பொருளாதார விவகாரத் துறையின் வரையறையின்படி சந்தை விலையில் மொத்த தேசிய உற்பத்தி என்பது உற்பத்தி பொருட்களின் சந்தை மதிப்பில் நாட்டின் குடிமகன்கள் அறிந்த உற்பத்திக் காரணிகள் மற்றும் மூலதன பயன்பாட்டிற்கான நுகர்வு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்.

மேற்கண்ட வரையறைகளில் இருந்து நமக்கு தெளிவாக தெரிவது, தேசிய வருமானம் என்பது பணம் சார்ந்த கணக்கீடுகளைக் கொண்டது. அதாவது, அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளின் நிகர மதிப்பு இரட்டிப்பு இல்லாமல் கணக்கிடுவது, நாட்டின் வருடத்திற்கான பொருளாதாரம் தேய்மானத்திற்கு பிறகு கிடைக்கும் கணக்கீடு, பொது மற்றும் தனியார் துறைகளின் உற்பத்தி மற்றும் சேவை நுகர்வு மற்றும் மூலதனப் பொருள்கள் பகுதிகள், உலகளாவிய பரிமாற்றத்திலிருந்து பெறப்படும் நிகர இலாபம்.

தேசிய வருமான கணக்கீட்டின் வரலாறு

தேசிய வருமானக் கணக்கீடு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. இந்தியாவில் பலமுறை முயற்சிகள் செய்து பல பொருளாதார நிபுணர்களின் தனி முயற்சியால் இது கணக்கிடப்பட்டது. முதன் முதலில் ‘இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷின் தன்மையற்ற ஆட்சியும்’ என்ற புத்தகத்தை 1868ஆம் ஆண்டு தாதாபாய் நௌரோஜி வெளியிட்டார். இதில் இந்தியர்களின் தலா வருமானம் 20 ரூபாய் என கணக்கிட்டார்.

இருப்பினும் 1948-49 ஆண்டு முதல் அதிகார பூர்வமான தேசிய வருமானம் கணக்கிடப்பட்டு தொடர்ந்து வெளியிடப்பட்டது. (1956ல் முதன் முதலில் வெளியிடப்பட்டது) தேசிய வருமானம் அல்லது நாட்டின் பகுதிகளுடைய வருமானம் 44 பொருட்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இது 19ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் இருந்து 1948-49 வரையிலான கணக்கீடு ஆகும்.

இந்த முயற்சிகள் எல்லாம் பேரியல் பொருளாதார தகவல்களை சார்ந்தது. மேலும், இது தேவையான தகவல்களையும், வளங்களையும் தோராயமாக கணித்தது. இந்த கணக்கீடு எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க இயலாமல் இருந்தது. எவ்வாராயினும், இந்த கணக்கீடு சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட அறிவியல் சார்ந்த மற்றும் தொடர்ச்சியாக கணக்கீடு எடுக்க அடிப்படையாக இருந்தது.

தேசிய வருமானம் மற்றும் தொடர்பான அதிகாரப்பூர்வமான கணக்கீட்டிற்கு சுதந்திரத்திற்கு பிறகு கவனம் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேசிய வருமானத்தின் அளவீடுகளை அளிப்பதன் தேவைகளை அங்கிகாத்து ‘தேசிய வருவாய் குழு’ என்கிற உயர்மட்ட அதிகாரம் கொண்ட நிபுணர் குழுவை 1949ல் இந்திய அரசு அமைத்தது.

இதன் தலைவராக பேராசிரியர் P.ஊ.மஹாலோநோபிஸ் நியமிக்கப்பட்டார். மேலும் பேராசிரியர் சு.னு.கட்கி ல் மற்றும் பேராசிரியர் ஏ.மு.சு.ஏ.ராவ் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களை தேசிய வருமானக் கணக்கீட்டை ஒருங்கிணைக்கவும், கணக்கீட்டை புள்ளியியல் சார்ந்த தகவல் முறையில் அதிகரிக்கவும், மற்றும் தேசிய வருமான துறையில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும் பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த உயர்நிலைக் குழுவிற்கு உதவுவதற்காக நிதி அமைச்சகத்தால் தேசிய வருமான (Nஐரு) அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த உயர்நிலைக்குழு முதன்முறையாக மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் சேர்த்து தேசிய வருமானத்தை கணக்கிட்டது. இந்தக்குழு அளித்த முதல் மற்றும் கடைசி அறிக்கை நிதி அமைச்சகத்தால் 1951 மற்றும் 1954ல் வெளியிடப்பட்டது. மேலும் இக்குழு தேசிய வருமானம் கணக்கிடுதலை தொடர்ந்து (வருடாந்திரம்) செய்யுமாறு பரிந்துரைத்தது.

இந்த வேலையை மத்திய புள்ளியியல் நிறுவனம் செய்யத் தொடங்கியது. மேலும் முழுநேர தேசிய வருமானப் பிரிவு உருவாக்கப்பட்டது. தற்பொழுது இது தேசிய வருமான கணக்கியல் பிரிவு என்ற பெயரில் விரிவாக்காத்திற்கு உகந்த வகையில் செயல்படுகிறது.

தேசிய வருமானத்தின் மதிப்பீடு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?

பின் வரும் காரணங்களுக்காக தேசிய வருமானத்தை மதிப்பிட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இது அளவு சார்ந்ததாக இருந்தால்தான் நாட்டின் தேவைக்கு போதுமானதாக உள்ளதா அல்லது இல்லையா என்று புரிந்துக் கொள்ள முடியும். நாட்டின் இலக்குகளை நிர்ணயிக்க முடியும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். வேலைவாய்ப்பினை உருவாக்க முடியும் மற்றும் வறுமை ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும். வளர்ச்சி விகிதத்தை சரி செய்ய நீடித்ததாக ஆக்க முடியும். வரி வருவாயை கணிக்க முடியும். தனியார் நிறுவனங்கள் தனது முதலீடுகளை திட்டமிட உதவ முடியும்.

பொருளாதார வளர்ச்சி:

பொருளாதார வளர்ச்சியானது, ஓர் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பில் ஏற்படும் மாற்றம். இது அதிகரிக்கும் அல்லது குறையும். இது நேர்மறையாக இருந்தால் உற்பத்தி மற்றும் வருமானம் அந்த நாட்டில் உயர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீத வளர்ச்சியாக பொதுவாக காண்பிக்கப்படுகிறது.

மொத்த தேசிய உற்பத்தி

மொத்த தேசிய உற்பத்தி என்பது ஒரு நாட்டின் ஒரு ஆண்டின் வெளியீட்டின் அளவீடுகளின் மொத்த பண மதிப்பு. இது சந்தை விலையில் கணக்கிடப்படுகிறது. இதில் பொருளாதாரம் சார்ந்த உற்பத்திகள் அனைத்தும் அடங்கும்.

நிகர தேசிய உற்பத்தி (NNP)

நிகர தேசிய உற்பத்தி என்பது நாட்டின் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பாகும். இது மொத்த நாட்டு உற்பத்தில் இருந்து தேய்மானத்தை நீக்கிவிட்டு கிடைக்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் சேவைகளின் பணமதிப்பு ஆகும்.

சந்தை விலையிலான தேசிய உற்பத்தி என்றும் கூறப்படுகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியின் நிகர வளர்ச்சியை கணக்கில் எடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவைப்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதை தேசிய வருமானம் (சந்தை விலையில்) என்றும் கூறலாம். இதை வைத்து பொருளாதார வளர்ச்சியை கணக்கிடலாம்.

சந்தைவிலை மற்றும் காரணிவிலை (உற்பத்தி செலவு)

சந்தைவிலை: உண்மையாக பரிவர்த்தனை செய்யப்பட்ட விலை. இது மறைமுக வரிகளான கலால்வரி, சுங்கவரி, விற்பனைவரி, சேவை வரி போன்றவைகளை உள்ளடக்கியது.

காரணி விலை: பல்வேறு உற்பத்தி காரணிகளின் உண்மையான விலை. இதில் உதவி மற்றும் மானியங்கள் சேர்ந்துள்ளன. ஆனால், இதில் மறைமுக வரி சேராமல் உள்ளது.

தேசிய வருமானம் காரணிகள் விலை

உற்பத்தி காரணிகளின் பங்களிப்பாக உற்பத்தி காரணிகளின் உடைமையாளர் பெறப்படும் மொத்த வருமானமாகும். எனவே, இதனை சரியாக கணக்கிடுவதற்கு உற்பத்திக்கு தொடர்பில்லாத எந்த செலவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டாக தனிநபர் பெறும் பரிசுகள், வணிக பண பரிவரித்தனை போன்றவை வருமானமாக இருந்த போதிலும் அதற்காக பணியை செய்வதில்லை. தேசிய வருமானத்தை உற்பத்திக் காரணிகளில் கணக்கிட, நிகர தேசிய உற்பத்தியிலிருந்து மறைமுகவரியை கழித்தும், மானியத் தொகையை கூட்டவும், கிடைப்பது ஆகும்.

தேசிய வருமானம் காரணி விலை என்பது உற்பத்தி காரணிகளால் பெறப்பட்ட வருமானங்களாகும். இதனுள் மூலதனச் செலவு படிகள் அரசு வியாபாரங்கள் தனிநபர் செலுத்தும் தொகைகள் மறைமுக வரிகள் அடங்காது. அதேபோல் நிறுவன வளர்ச்சிக்காக அரசு கொடுக்கும் மானியங்கள் உற்பத்தி பொருளின் விலையை அதிகரிப்பதால் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.

தனிநபர் வருமானம்

ஒரு தனிநபர் பெறும் செலவிடத்தக்க வருமானமே தனிநபர் வருமானம் எனப்படும். ஊதியம், வட்டி, இலாபம் மற்றும் வாடகை இவையனைத்தையும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது. இது நடப்பு விலையில் செலவு செய்யக்கூடிய வருமானம் ஆகும். தனியார் நிறுவனங்களின் வரியானது சமூக பாதுகாப்பிற்க்கு செலவிடப்படுகிறது. அதனால் தனிநபர் வருமானத்தில் இருந்து இது கழித்துக் கொள்ளப்படுகிறது. சமூக பாதுகாப்பு திட்டம் என்பது முதியோர் ஓய்வூதியம், கணவனை இழந்தோர்க்கு ஓய்வூதியத் திட்டம் போன்றவை.

செலவிடத்தக்க தனிநபர் வருமானம்

தனிநபர் பெறக்கூடிய மொத்த வருமானமும் செலவிடப்படுவதில்லை. ஏனெனில், நேர்முக வரிகளை தனிநபர் அரசுக்கு செலுத்த வேண்டும். நேர்முக வரிகள் கட்டிய பிறகு மீதம் இருக்கும் தொகையானது செலவிடப்படும் தனிநபர் வருமானம் எனப்படும்.

தனிப்பட்ட வரிகள், சொத்துவரி மற்றும் காப்பீடு

வரிகள் போன்ற செலவுகள் செய்யப்பட்ட பிறகு மீதம் இருக்கும் பணம் முழுவதும் செலவிடப்படுவதில்லை. இதில் ஒரு பகுதி சேமிக்கப்படலாம்.

தேசிய வருமானம் கணக்கிடும் முறை

தேசிய வருமானத்தை கணக்கிட மூன்று முறைகள் உண்டு.

உற்பத்தி முறை

  • இதை வெளியீடுமுறை எனவும் கணக்கெடுப்பு முறை எனவும் அழைக்கலாம். இதில் ஒரு வருடத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகள் சந்தை விலையில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • இந்த உற்பத்தி முறையின் அடிப்படையில் பொருளாதாரமானது பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.

1. நேரடித்துறை: இந்தத் துறையில் சேவைத்துறையின் அதாவது மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், அரசியல்வாதி போன்ற பணிகளின் செயலுக்கு சமமாக மதிப்பிடப்படுகிறது.

2. உலகளாவிய பரிமாற்றத்துறை:

இந்தத் துறையில் பொருள்களின் மதிப்பு அதாவது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்த ஒவ்வொரு துறையிலும் மதிப்பு கூட்டப்பட்ட முறை பின்பற்றப்படுகிறது. அதாவது ஒவ்வொரு இடத்திலும் பொருளின் மதிப்பைக் கணக்கிடாமல், மொத்த மதிப்பாக பொருளின் மதிப்பை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் இரு கணக்கிடும் முறை தவிர்க்கப்படுகிறது.

இந்த முறையில் உள்ள நிறையானது, வெளிநாடுகளுக்கு செலுத்தப்பட்ட தொகை வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட தொகையும் கணக்கில் எடுக்கப்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட சரக்கிருப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட இறுதி பொருள் கண்டுபிடிக்கப்படுகிறது. வாங்கிய கச்சாப் பொருட்களின் மதிப்பு இறுதி மதிப்பிலிருந்து கழிக்கப்படுகிறது. அதாவது விவசாயம், உற்பத்தி, வர்த்தகம் போன்ற பொருளாதார செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கலாம். நன்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் இம்முறை பெரிதும் வெற்றி பெற்றுள்ளது. காரணம், அரசு தகவல்களை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வளர்ச்சியடையாத நாடுகளில் இந்தமுறை பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக பணமதிப்பீடு இல்லாத துறைகளில் பணமதிப்பை கொண்டு வருவது போன்ற நிலைகளை ஏற்படுத்துகிறது.

வருமான முறை

இந்த வருமான முறையில் மொத்த தேசிய வருமானமானது ஊதியம், சம்பளம், வட்டி, இலாபம் மற்றும் தனி ஒருவரின் வாடகை அரசு மற்றும் தனிநபர் சொத்து போன்றவற்றில் இருந்து வரும் வாடகை போன்றவைகளை வைத்து கணக்கிடப்படுகிறது.

வருமான முறையை கடைபிடிக்க பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும்.

  • நிகர வாடகை, வீட்டு சொந்தக்காரர் இருக்கும் வீட்டின் வாடகை மதிப்பும் சேர்த்து
  • நபர்களின் வேலை செய்யும் திறனால் கிடைக்கும் ஊதியம், சம்பளம் போன்றவை ஓய்வூதியம் தவிர
  • வட்டியின் மூலம் வரும் வருமானம்
  • கூட்டுப் பங்கு நிறுவனத்தின் வருமானம்
  • வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளின் வருமானம்

இந்த வருமான முறையானது தேசிய வருமானத்தை காரணிமுறையில் தருகிறது.

செலவின முறை (அ) செலவிடும் முறை

இந்த முறையானது தயாரிப்பு அணுகுமுறைகளைக் கொண்டது (என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் சாமூவேல்சன் கூறினார்) அல்லது செலவிடும் முறை என்று அழைக்கப்படும். செய்து முடிக்கப்பட்ட பொருள்களின் செலவினங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  • நுகர்வோரால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செய்யப்படும் செலவுகள்
  • உற்பத்தியாளரால் பொருட்கள் மீது முதலீடு செய்யப்படுவது
  • அரசாங்கத்தால் நுகர்வோர் மற்றும் முதலீட்டுப் பொருட்களுக்கு செய்யப்படும் செலவு

மேலும் இதனுடன் வர்த்தகம் மற்றும் மற்ற கட்டணங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையின் நிறையானது இதில் தேசிய செலவீனம், வருமானம் மற்றும் மொத்த உற்பத்திகளையும் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

எந்த முறையை பின்பற்றினாலும் முடிவானது ஏறக்குறைய சமமாக இருக்கும். இதன் மூலமாக ஒப்பிட்டு நிச்சயத்தன்மையை உறுதி செய்து கொள்ளலாம். வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பணத்தையும், வர்த்தகம் மற்றும் இதர வருவாயையும் சேர்க்க வேண்டும். கிடைக்கும் தொகையானது மொத்த நாட்டு உற்பத்தி ஆகும்.

தேசிய வருமானத்தை தீர்மானிக்கும் காரணிகள்

உற்பத்தியின் அளவு மற்றும் தரம் சார்ந்த காரணிகள்:

நிலம், காலநிலை, மழையளவு போன்றவைகளின் தரம் மற்றும் அளவானது வேளாண் பொருட்களின் உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தினை தீர்மானிக்கிறது. இதுவே தேசிய வருமானத்தின் அளவை தீர்மானிக்கிறது. தொழிலாளர்களின் அளவு இரட்டை தாக்கம்கொண்டது. உற்பத்தி காரணியாக இருப்பதுடன் தயாரித்தவற்றை நுகர்பவராகவும் இருக்கிறார். தொழிலாளர்களின் தரமானது அறிவு, திறமை, பயிற்சி இவற்றை வைத்து உற்பத்தி முறையின் அளவை தீர்மானிக்கலாம். இதுவே வெளியீடுகளுக்கு தலையாய காரணமாகிறது.

தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறமை:

உற்பத்தியில் உள்ள தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்நுட்பமானது நாட்டில் முதலீடுகளை உருவாக்குவதை தீர்மானிக்கின்றது. ஒரு நாட்டில் அதிகமான வளங்கள் இருந்தும் சரியான அறிவியல் தொழில்நுட்பப்படி அதை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அது யாருக்கும் பயனற்று வீணாய் போகும். இயற்கை வளங்களும் அதீத தொழில்நுட்பமும் இணைந்து தேசிய வருமானத்தின் அளவை பெறுக்கலாம்.

அரசியல் நிலைப்புத்தன்மை

மற்ற காரணங்களைப் போல் அதாவது மூலதன உருவாக்கம், இயற்கை வளம், தொழில்நுட்ப அறிவு போன்றவற்றை போல் அரசியல் நிலைப்புத்தன்மை ஒருமுக்கிய காரணியாகும்.

தேசிய வருமானம் கணக்கிடும் போது எழும் முக்கிய சிக்கல்கள்

தேசிய வருமானம் கணக்கிடும் போது கூடவே சிக்கல்களும் எழுகிறது. வளர்ச்சியடையாத நாடுகளில் இதன் சிக்கல் மிக அதிகமானதாக உள்ளது. தேசிய வருமானத்தை கணக்கிடுவதிலுள்ள சிக்கலை பின்வருமாறு அலசலாம்.

சிக்கல்கள்:

கருத்து வேறுபாடுகள்

தேசிய வருமானத்தில் ‘தேசிய’ என்ற சொல்லுக்கு வெவ்வேறு விதமான கருத்துக்கள் உண்டு. இது ஒரு நாட்டின் புவியியல் அமைப்பா அல்லது வெளிநாடுகளில் இருப்பவர்களையும் சேர்த்து நாட்டு மக்களா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. தேசிய வருமானம் கணக்கிடப்பட்டு வந்த நாள் முதல் இது பொருளாதார செயல்பாடுகளின் அளவு சார்ந்ததாகவே கணிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் பண மதிப்பாக பார்க்கப்படும் போது மனிதாபிமானம், பாசம் மற்றும் தத்துவம் போன்றவை தேசிய வருமானம் கணக்கிடும் போது கருத்தில் கொள்ளமுடிவதில்லை.

ஒன்றின் மேல் மற்றொன்று படியும் பணிகள்

பின்தங்கிய பகுதிகளில் பணிகளின் இணைப்புதன்மை இருக்கும். இது துவக்க நிலையை அறிவதில் சிரமத்தை தரும். விவசாய பணிகள் உச்ச நிலையிலிருக்கும் போது வண்டி ஓட்டும் செயலை விவசாயி செய்வார். விவசாய காலநிலை இல்லாத போது திறன்சாரா பணிகளை செய்வார். அதேபோல் கிராமத்தில் கடன் தருபவர் விவசாய பணியையும் சேர்த்து செய்வார்.

மதிப்பு கணக்கிடும் போது சிக்கல்

பின்தங்கிய பகுதிகளில், கலைஞர்கள், குடிசைத் தொழிலாளர்கள் மற்றும் சிறுகுறு விவசாயிகளுக்கு சரியான புரிதல் இல்லாததனால் அவர்களுடைய செலவும், அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களின் மதிப்பும் கணக்கீடு செய்ய முடிவதில்லை.

பணம் சாராத்துறை

பண்டமாற்று முறையும் பணம் சாராத்துறையும் அவர்கள் உற்பத்தி செய்த பொருள் மற்றும் சேவையை தோராயமான முறையில் கணக்கிடுவதால் சிக்கல் எழுகிறது.

முடிவுறாத அரசு பதிவுகள் : பின்தங்கியப் பகுதிகளில் அறியாமையாலும், கல்வியறிவின்மையாலும் பெரும்பாலும் தகவல்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நம்பகமாகவும் இல்லை. இதனால் கணக்கிடுதலில் சிக்கல் எழுகிறது.

வேளாண்மைத்துறையில் உள்ள பிரச்சினைகள்

பயிர்வகையிலும் விலங்கு மற்றும் காட்டு பொருட்களிலும் விவசாய நடவடிக்கைகளில் பெருமளவு தோராயமான தகவல்களாகவே உள்ளன.

தொழில்துறையில் உள்ள பிரச்சினைகள்

வெளியீடு, செலவு, மதிப்பு போன்றவைகளின் தகவல்கள் பெறுநிறுவனங்களில் உள்ளன. ஆனால் சிறுநிறுவனங்களில் இத்தகவல்கள் சரியான முறையில் பராமரிப்பதில்லை.

ஒரே வகையான சூத்திரம் அனைவருக்கும் பொருந்துவதில்லை

பெரும் நாடுகளில் பிராந்திய வேற்றுமைகளாலும், வெவ்வேறு விதமான வேறுபாடுகளாலும் ஒரே வகையான சூத்திரம் பொருந்துவதில்லை. ஒரு பகுதியில் பொருந்திய தகவல் மற்றொரு பகுதியில் பொருந்துவதில்லை.

இரட்டை கணக்கீடு

இரட்டை கணக்கீடு ஒரு முக்கிய சிக்கலாகும்.

தகவல் திரட்டுவதில் திறமையின்மை

புலனாய்வு செய்பவர்கள் உட்பட புள்ளி விவரங்களை திரட்டும் அமைப்புகள் உடனடியான தகவல்களையும், மாதிரி ஆய்வுகளையும் திறமையாக செய்வதில்லை.

தேசிய வருமானத்தை பற்றிய புள்ளி விவரங்களுக்கு பயன்பாடு

திட்டமிடுதல், கொள்கை வகுத்தல், நிதி அறிக்கை தயாரித்தல் மற்றும் பொருளாதார செயல்பாடுகளை கண்காணித்தல் ஆகியவற்றிற்கு தேசிய வருமானத்தின் புள்ளி விவரங்கள் உதவுகின்றது.

பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குதல்:

தேசிய வருமானத்தின் புள்ளியில் பொருளாதார ஆய்வுகளுக்கும் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் முக்கிய கருவிகளாக உள்ளன. மேலும் இது திட்டமிடல் மற்றும் உண்மையான திட்டம் ஆகியவைகளுக்கு பயனுள்ளதாய் இருக்கிறது.

பொருளாதார அமைப்புகளை ஆராய்தல்

பொருளாதாரத்தின் அமைப்பிற்கு இது கருதுகோலாய் இருக்கிறது. துறை ரீதியான ஒப்பீட்டிற்கும் பொருளாதார வளர்ச்சியை ஆராய உதவுகின்றது. பொருளாதார வருவாயின் வளர்ச்சியின் தரக் குறியீடாக தேசிய வருமான வளர்ச்சி இருக்கின்றது.

துறை ரீதியான ஒப்பீடு

இப்புள்ளியியல் விவரங்கள் துறைகளுக்குள்ளும், துறைகளுக்கிடையேயும் ஒப்பீடு செய்து வளர்ச்சிக்கு திட்டமிட உதவியாய் இருக்கிறது. மேலும் இது வெவ்வேறு துறைகளில் உள்ள அமைப்புரீதியான குறைகளையும் பலவீனத்தையும் கண்டறிய பேருதவியாக விளங்குகிறது.

பொருளாதார நலம் சார்ந்த குறியீடு

இவ்விவரங்கள் தலவருமானம் மற்றும் தனிநபர் நுகர்வு ஆகிய பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளை ஆய்வு செய்ய உதவி செய்கிறது. ஆனால் சமுதாய வருமான பகிர்வு பற்றிய கருத்தை பரப்புவதில்லை.

உலகளாவிய ஒப்பீடு

உலக அளவில் தேசிய வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கவும் மக்களின் வாழ்க்கை தரத்தினை ஒப்பீடு செய்யவும் இது பயன்படுகிறது.

உலகளாவிய நிறுவனங்களின் பங்களிப்பு

ஐக்கிய நாடு போன்ற உலக நிறுவனங்களில் ஏற்படும் பொதுவான சுமைகளை களைய ஒரு நாட்டின் புள்ளி விவரங்களை வைத்து தரம் பார்க்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கூறுகள்

சந்தை விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொதுவாக நான்கு வகையான செலவின முறைகளை வைத்து கணக்கிடலாம். நான்கு கூறுகள்:

  • நுகர்வு
  • முதலீடு
  • அரசு
  • நிகர ஏற்றுமதி

நுகர்வு செலவுகள்

தனிநபர் மற்றும் குடும்பங்களால் ஓர் ஆண்டிற்கு பொருட்கள் மற்றும் சேவைகளில் செய்யப்படும் செலவுகள் நுகர்வுச் செலவுகள் எனப்படும். பொருட்களானது கார், டிவி போன்ற அழியாப் பொருட்களிலும் துணிவகைகள், பழங்கள் போன்ற அழியும் பொருட்களும் அடங்கும். சேவை என்பது ஆசிரியர், மருத்துவர், சட்ட ஆலோசகர், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு போன்றவைகள் ஆகும்.

முதலீடு

மூலதனத்திற்கு முதலீடு தேவைப்படுகிறது. வணிகத்திற்கு பொருட்கள் வாங்குவதில் செய்யப்படும் செலவுகள் அடங்கும்.

அரசின் செலவுகள்

மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செய்யப்படும் செலவுகள். இதில் ஊழியர்களுக்கு அளிக்கும் சம்பளம் மற்றும் ஊதியம் போன்றவை அடங்கும்.

தலா வருமானம்

இந்த வருமானம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து மொத்த மக்கள் தொகையை வகுத்தால் கிடைக்கும் மீதமாகும். இவ்வருமானம் நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை குறிக்கும்.

மக்களின் வாழ்க்கைத்தரம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி (தனி நபர்க்கு)-யானது தனிநபரின் நலத்தினை அளவிட பயன்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக இருக்கும் நாடுகளில் மக்களின் நலம் அதிகமாக உள்ளது.

அளவீடு, ஊதியமில்லா பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் கணக்கிடப்படுகிறது. முக்கியமாக வீட்டு வேலைகள் (எ.-கா. குழந்தை வளர்ப்பு) குழந்தைகள் வளர்க்கும் தாய் (ஆயா)களுக்கு கொடுக்கும் சம்பளம் இதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் பெற்றோர்கள் குழந்தை வளர்க்கும் போது செலவிடும் நேரம் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இருப்பினும் இருவரும் ஒரே வேலையை செய்கிறார்கள்.

உற்பத்தியின் உள்ளீடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. எ-கா. யாரேனும் வேலை செய்யும் நேரங்களின் அளவு இரட்டிப்பாக இருந்தால் அளவீடு இரண்டு மடங்காக இருக்கும். அதற்காக அவர்களுக்கு குறைவான ஓய்வு நேரம் உள்ளது என்று பொருள் கிடையாது. அதேபோல் பொருளாதார செயல்பாடுகளின் சுற்றுச்சூழலின் விளைவுகள் அளவீட்டில் கணக்கிடப்படுவதில்லை.

ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே உள்ள அளவீடு வேறுபாடானது. அந்நிய செலவானி மதிப்பின் மாற்றங்களால் மாறுபடுகின்றன. தேசிய வருமானத்தை வாங்கும் திறனைக் கொண்டு அளவிட்டால் இந்த பிரச்சினையை சரிசெய்யலாம்.

மதிப்பீட்டில் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் காரணிகளான சுற்றுச்சூழலின் தரம் மற்றும் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கீடு செய்வதில்லை.

இது குழப்பத்திற்கு எடுத்துச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, எண்ணெய் கசிவை தூய்மைப்படுத்துவதை அளவீட்டில் சேர்க்கிறோம். ஆனால் எண்ணெய் கசிவால் ஏற்படும் இழப்பை (தூய்மையான வளைகுடா இழப்பு) கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

இதன் காரணங்களால், ஏனைய கணக்கீடுகளான மனித மேம்பாட்டு குறியீடு நீடித்த மக்கள் நல பொருளாதார குறியீடு (கணக்கு சேர்ப்பதில் வளர்ச்சி குறியீடு), மொத்த நாட்டின் மகிழ்ச்சி மற்றும் நீடித்த தேசிய வருமானம் போன்றவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பசுமை மொத்த உள்நாட்டு உற்பத்தி

பசுமை மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது பொருளாதார வளர்ச்சியும் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்வது. நாட்டின் பாரம்பரியமாக கண்கெடுப்பில் பசுமை மொத்த உள்நாட்டு உற்பத்தி காரணியாகியுள்ளது. பசுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பல்லுயிர் இழப்பு, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் கணக்கிடப்படுகிறது. சுற்றுச்சூழல் அறிஞர்கள் ஒரு குறியீட்டை முன்மொழிகின்றனர். அது “நீடித்த வளர்ச்சியின் குறியீடு” எனப்படும்.

பசுமை கணக்கீடு எடுப்பதற்கு முன் நிகர இயற்கை மூலதனங்களின் நுகர்வுகளான வளங்களை பயன்படுத்துதல், வளங்களின் தேய்வு, சுற்றுச்சூழல் இழப்பு மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கழிக்க வேண்டும். முன்பு செய்த சில பசுமை மொத்த உள்நாட்டு உற்பத்தி-கணக்கீடுகளில் ஒரிரு சுற்றுச்சூழல்கள் மட்டுமே சரிகட்டல் செய்யப்படும். அனைத்து சுற்றுசூழலை கணக்கில் எடுப்பதில்லை. இந்த கணக்கீட்டை நிகர உள்நாட்டு உற்பத்தி கண்ககீட்டிலும் பயன்படுத்த வேண்டும். உற்பத்தி முதலின் தேய்மானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து கழிக்க வேண்டும். ஆனால் அனைத்து வளங்களையும் பண மதிப்பிற்கு மாற்ற வேண்டும். இந்த முறையில்தான் தேசிய கணக்கின் அறிகுறிகள் வெளிப்படுத்தப்படுகிறது.

இந்தியா மற்றும் பசுமை கணக்கு

பசுமை கணக்கீடு என்பது நிதி சார்ந்த நடைமுறைகளில் காரணியாக சுற்றுச்சூழல் செலவுகளையும் நிதி முடிவு செயல்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் -சுற்றுச்சூழல் விலக்கிவைக்கப்படுகறிது. எனவே, நீண்ட விவாதம் எழுகிறது. ஆதலால் முடிவு எடுப்பவர்கள் தற்பொழுது கடைபிடிக்கப்படும் நடைமுறையை மறுஆய்வு செய்ய பசுமை கணக்கீடும் தேவைப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியில் பசுமை கணக்கீடு அரசு கொள்கையின் ஒரு அங்கமாக உள்ளது.

பசுமையானது இயற்கை வளங்களின் நுகர்வையும் கணக்கீடு செய்கிறது. இக்கணக்கீடு பொருளாதார வளர்ச்சியில் இயற்கை வளங்கள் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் எவ்வளவு வளங்கள் குறைகிறது மற்றும் எந்த அளவு மீண்டும் கொண்டுவரப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

தனி நபர் வருவாய்

குறிப்பிட்ட பகுதியில் ஒருவர் சம்பாதித்த பணத்தின் அளவாகும். நகரம், பகுதி அல்லது நாட்டின் வாழும் ஒருவரின் சராசரி வருமானத்தை குறிப்பதாகும். இது வாழ்வின் கட்டுப்பாடுகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளின் வாழ்வின் தரத்தையும் கணக்கிட பயன்படுகிறது.

நாட்டின் மொத்த மகிழ்ச்சி

மொத்த நாட்டின் மகிழ்ச்சி என்ற வார்த்தையை உருவாக்கியவர் 1970-ல் பூட்டான் நாட்டின் நான்காவது அரசர் ஜிக்மி மின்கே வாங்சூ ஆவார். இந்த அடிப்படை நீடித்த வளர்ச்சியில் ஒருமித்த முன்னேற்றம் மற்றும் பொருளாதாரம் சாதாரண நடவடிக்கைகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்தல் என்பதாகும். நாட்டின் மகிழ்ச்சி என்பது நான்கு தூண்களால் விளக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி, நீடித்த சமூக பொருளாதார வளர்ச்சி, கலாச்சார பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவையாகும். இந்த நான்கு தூண்களும் ஒன்பது பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாட்டின் மொத்த மகிழ்ச்சிக்கு விரிவான புரிதல் கொடுக்கப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு

ஒரு குறிப்பிட்ட காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை அளவிடுவதே ஆகும். இது அனைத்துப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள பொழுது நிகழும்.

இந்த விகிதம் மூலதனத்திற்கும் அதனால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவரக்கூடிய பொருட்களுக்கும் இடையே உள்ள விகிதமாகும். மேலும் நமக்கு தேவையான பொருட்களை செய்ய தேவைப்படும் நிதியைக் கணக்ககிடுவதாகும்.

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் குறியீடு :

இக்குறியீடு தொழிற்சாலைகளின் உற்பத்தி அளவை குறிக்கும். சுரங்கம், உற்பத்தி மற்றும் மின்சாரத்துறை எவ்வளவு உற்பத்தி செய்கின்றது என்பதை கண்கிடப்படுகிறது. இப்பணியை ஒவ்வொரு மாதமும் மத்திய புள்ளியியல் ஆணையம் செய்கிறது.

ஆதாரம் : அறம் அறக்கட்டளை

3.33333333333
லட்சுமணன் Dec 02, 2018 10:13 AM

நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top