பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / வரி சீர்திருத்தங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வரி சீர்திருத்தங்கள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்

கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வரி சீர்திருத்தங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வரி சீர்திருத்தம் - ஒரு பார்வை

எந்த ஒரு தேசமாயினும், அதன் வளர்ச்சிக்கான வழிமுறைகளில் ஒன்றிணைந்திருக்கும் ஒருபகுதி வரி சீர்திருத்தங்களாகும்.

வரி சீர்திருத்தங்களுக்கு இந்தியா விதிவிலக்கான தேசமன்று. பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 1990 தொடங்கி, வரி சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமான தேவைகளாக மாரிஇருக்கின்றன. வரிப்பணமே அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கு மையமான நிதி ஆதாரமாகும்.

வெளிப்படையான, சம நோக்குடைய, சிறப்பான வரிவிதிப்புமுறை செயல்படுத்துவதற்கு எளிமையானது. நேரடி வரி விகிதங்களையும், வரிகட்டமைப்பையும் வரி செலுத்தும் தனி நபர்கள் ஆதாயம் பெறும்படி மாற்றியமைக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மேற் கொண்டுவருகின்றன. வருமான வரிக்கான குறைந்தபட்ச வருவாயின் அளவு ஒவ்வொரு வருடமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தெளிவான மூன்றே மூன்று வருமானவரி உருவாக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 10% வரியும், 5 முதல் 10 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 20% வரியும், 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 30% வரியும் விதிக்கப்படுகிறது. 2 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் இருப்பவர்களுக்கு வருமானவரி கிடையாது.

மக்கள் தொகையில் 2% பேர்களே வரி செலுத்துகின்றனர் என்று கூறப்படுகிறது. மிக அதிகமான எண்ணிக்கையிலான மக்களை வரி செலுத்துபவர்களாக ஆக்கவும், வரிவருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் பல சீர்திருத்தங்களை அரசுகள் கொண்டு வந்துள்ள போதிலும், மிகச் சிறந்த ஒரு சீர்திருத்தமாக தனித்துத் தெரிவது சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (GST) ஆகும். அனைத்து விதமான வரிகளையும் ஒன்றிணைத்து ஒரே விதமான வரியாக மாற்றுவதன் மூலம் ஒரே தேசத்தில் பலவிதமான வரிகளை செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து உற்பத்தியாளர்களை விடுவிக்க முடியும். பொருள் போக்குவரத்தும் எளிதாகும்.

GST சட்டம்

மாற்றங்கள், திருப்பங்கள், நிச்சயமற்ற நிலைமைகள் போன்றவற்றை சந்தித்து வந்த GST சட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கப்போவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.

சரக்கு மற்றும் சேவை வரி (GST) நுகர்வோரை அரசர்களாக ஆக்க இருக்கிறது. GST மசோதா, தேசத்தின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதிலும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதிலும் உதவக் கூடியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தச் சட்டம் “ஒரு தேசம், ஒரே விதமான வரிவிதிப்பு” என்று நிலையைக் கொண்டுவரும். GST வரிவிகிதம் குறைந்தபட்ச செயல்பாட்டு விகிதத்தில் அமையும்.

சீராக வளரக்கூடிய ஒற்றைப் பொருளாதார மண்டலமாக இந்தியா GST மாற்றியமைக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாக புதர் போல மண்டிக்கிடக்கும் வரிவிதிப்பு முறைகளை GST நிக்கிவிடும். 1991இல் புதிய பொருளாதாரக் இந்தியா ஏற்றுக் கொண்டது முதலாக இதுவரையிலான கொள்கையை காலகட்டத்தில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இது என்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்திருக்கிறது. வேகமாக வளர்ந்து வரும் உலக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் எண்ணற்ற வரிவிதிப்புகள் இருப்பதால் மாநில எல்லைகளைக் கடந்து தொழில் செய்வதற்கு ஊக்கம் கிடைப்பதில்லை.

GST பற்றிய கருத்துக்கள்

இந்தப் பிரச்னையை எதிர்கொள்வதற்கு ஒரு அதிரடியான வழியாக GST மசோதா பார்க்கப்படுகிறது. தேசம் முழுவதும் ஒன்றிணைந்து அமையக்கூடிய பொருளாதார அமைப்பாக இருந்து தொழில்களை எளிதில் அபிவிருத்தி செய்யவும், பரவலாக்கவும் GST உதவும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. இந்தியா தனது பொருளாதாரத்தை 21ஆம் நூற்றாண்டை நோக்கி இழுத்துச் செல்கிறது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தக் கூடியதாக GST மசோதா இருக்கிறது என்று சர்வதேச அமைதிக்கான கார்னெஜி அறக்கொடை அமைப்பின் தெற்கு ஆசிய திட்ட முதுநிலை இணையர் மிலன் வைஷ்ணவ் கூறுகிறார்.

DTC-இல் இருப்பது என்ன?

இந்திய வருமான வரிச்சட்டம் 1961இல் உள்ள வருமானவரி, ஆதாயப் பங்கு பிரிப்புக்கான வரி, பிற வகை ஆதாயங்களுக்கான சொத்துவரி போன்ற நேரடி வரிகளோடு தொடர்புடைய சட்டங்கள் இடம் பெற்றுள்ளன. தாமாக முன்வந்து வரிசெலுத்துவதையும், வரிவருவாய்க்கும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள விகிதத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பொருளாதார ரீதியாக் திறன்மிகுந்த, நேரிய, நேரடி வரிவிதிப்பு சட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. இதற்காக நேரடி வரிவிதிப்போடு தொடர்புடைய அனைத்து சட்டங்களும் திருத்தி அமைக்கப்படவேண்டும்.

DTC சட்டம் உருவாக்கப்படுவதற்கான இன்னொரு நோக்கம் பிரச்னைகள் உருவாவதைத் தடுப்பதும், சட்ட மோதல்களைக் குறைப்பதும் ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் வரி விதிப்புக்கொள்கைகள், மிகச்சிறப்பான பன்னாட்டு பயின்முறைகளை அடிப்படைக் கொண்டிருப்பதால் வரி சாம்ராஜ்யத்திற்கு நிலைத்த தன்மை கிடைக்கும். ஒன்றிணைக்கப்பட்ட ஒற்றை வரி செலுத்துமுறையினால் வரி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு ஒரே இடத்திலிருந்து கிடைத்துவிடும்.

நேரடி வரிகளுக்கு ஒற்றைக்குறியீடு

எல்லாவிதமான நேரடி வரிகளும் ஒன்றைக் குறியீட்டின்கீழ் கொண்டு வரப்படும். வரி செலுத்தியதற்கான விவரங்கள் ஒரே இடத்தில் இருந்து புறப்படும். வரிச் சட்டங்களில் தெளிவு இருக்கும்போது ஏராளமான மக்களை தாமாக முன்வந்து வரி செலுத்த வைக்க முடியும். வளர்ந்து வரும் பொருளாதார அமைப்பில் உருவாகும் மாற்றங்களை சட்டத்திருத்தங்கள் இல்லாமலேயே ஏற்கக் கூடிய வகையில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரிசெலுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிய, விளிம்புநிலை பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்தச்சட்டம் அவர்களுக்கு உகந்ததாக இருக்கும். DTC சட்டத்தின் 1 முதல் 4 வரையுள்ள அட்டவணைகளுக்குள்ளாகவே எல்லா வரிவிகிதங்களும் சேர்க்கப்பட்டிருப்பதால் ஆண்டு நிதி மசோதாவிற்கான தேவை அப்புறப்படுத்தப்படுகிறது. வரிவிகித மாற்றங்கள் ஏதேனும் இருப்பின், அந்தந்த அட்டவணைகளுக்குப் பொருத்தமான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம்.

GST மசோதா என்பது வரி சீர்திருத்தங்களில் ஒரு மிகப் பெரிய பாய்ச்சல். உற்பத்தியாளர்களையும், முதலீட்டாளர்களையும் ஊக்குவித்து, நம்பிக்கையூட்டி பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியது. வரிகளை எளிமையாக்குவது என்ற முக்கியமான நோக்கத்தைக் கருதி இது செயல்படுத்தப்படும். தனி நபர்களுக்கும், தொழில் உலகினருக்கும் எளிய நடைமுறைகளாக அமைந்து, வரிவலைக்குள் ஏராளமானவர்களைக் கொணர்ந்து, வரி செலுத்தும் சமூகக் கடமையில் ஒவ்வொரு இந்தியனையும் கவனம் கொள்ளச் செய்து, தேசத்தை வரி செலுத்துவதற்கு இணக்கமானதாக ஆக்குவதற்கு வரி சீர்திருத்தங்கள் துணை புரியும்.


GST

ஆதாரம் : திட்டம் மாத இதழ் நவம்பர் 2016

2.97222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top