பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றத்தின் வரையறைகள்

ஜி.எஸ்.டி - மாற்றத்தின் வரையறைகள் குறித்து சில கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி -1 ஜி.எஸ்.டி. சட்டம் வருவதற்கு முன்னால் கடைசி ரிடர்னில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட CENVAT கடன் (அல்லது வாட் கடன்). இப்போதுள்ள ஜி.எஸ்.டி - யின் கீழ் ITC - என்பதாக இருக்குமா?

பதில்: பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் வரி செலுத்துவதாக தெரிவு செய்தாலொழிய, அவர் தனது மின்னணு கடன் லெட்ஜரில், கடைசி ரிடர்னில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட CENVAT கடன் (அல்லது வாட் கடன்) தொகைக்கு ஈடாகக் கடன் பெற முடியும். புதிய சட்டத்தில் இருக்கும் இது குறித்தான நிபந்தனைகளுக்கு உட்பட்டது. (சி.ஜி.எஸ்.டி. / எஸ்.ஜி.எஸ்.டி. சட்டப் பிரிவு 140(1)).

கேள்வி 2: அந்த நிபந்தனைகள் யாவை?

பதில்: அந்த நிபந்தனைகள் வருமாறு

1) இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே இருக்கும் கடன் தொகை உள்ளீட்டு வரிக் கடனாக ஏற்க அனுமதிக்கப்படுவது

2) பதிவுசெய்த நபர் இப்போதிருக்கும் சட்டத்தின்படி (உ.ம். மத்திய சுங்கம் மற்றும் வாட்) அனைத்து ரிடர்ன்களயும் சமர்ப்பித்திருக்க வேண்டும். இது குறிப்பிட்ட தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முந்தியதாக இருக்க வேண்டும்.

3) இந்தக் கடன் தொகை குறிப்பாணை எண். இன் கீழ் விற்கப்பட்ட

சரக்குகள் தொடர்பானதாக இருக்கக் கூடாது. இது தவிர இதன் பிறாகு செலுத்தப்பட்ட வாட்டின் திரும்பப் பெறும் பணமாக இருக்கக் கூடாது.

4) ஜி.எஸ்.டி - சட்டத்தின் கீழ் இன்னுமொரு நிபந்தனையும் இருக்கிறது. அது வருமாறு:

மத்திய விற்பனை வரிச் சட்டம் 1956 ன் பிரிவு 3 பிரிவு 5 மற்றும் 6 ன் துணை பிரிவு (3) அல்லது பிரிவு 8ன் துணை பிரிவு (8) ஆகியவற்றின் கீழ் வரும் எந்தவொரு க்ளெய்முடனும் தொடர்புடைய கிரெடிட்கள், மத்திய விற்பனை வரி (பதிவு மற்றும் விற்பனை) விதிமுறைகள், 1957ன் விதி எண் 12ல் குறிப்பிட்டுள்ள கால வரம்பு மற்றும் செயல்முறைகளின்படி செயல்படுத்தப்படவில்லை என்றால் அவை எலக்ட்ரானிக் க்ரெடிட் லெட்ஜரில் பதிவு செய்யப்பட தகுதியற்றவையாகவே கருதப்படும்.

அதே சமயம், மேலே குறிப்பிட்டதற்கு இணையான தொகை, இப்போதைய சட்டத்தின் கீழ் திரும்ப அளிக்கப்பட வேண்டுமனால், அதற்கான கோரிக்கைகள் 1957 ஆண்டின் மத்திய விற்பனை வரி (பதிவு மற்றும் மொத்த வருவாய்) சட்டத்தின் 12 - ஆம் விதி முறையில் குறிப்பிட்டுள்ளபடி இருக்கிறது என்பது நிரூபணமானால் வழங்கப்படலாம்.

கேள்வி 3: பதிவு செய்த ஒரு நபர் மூலதன பொருட்களை இப்போதிருக்கும் சுங்க வரிச் சட்டத்தின்படி ஜூன் காலாண்டுக் கால கட்டத்தில் 2017 - 2018 வாங்குகிறார். அதற்கான விற்பனை விலைச் சீட்டு பெறப்பட்டது ஜின் 30 ஆம் தேதிதான் என்றாலும் முதலீட்டு சரக்கு பெறப்பட்ட்டது, 5 ஜீலை, 2017 (அதாவது ஜி.எஸ்.டி - யின் சட்ட ஆளுமையில்). இந்த நபருக்கு ஜி.எஸ்.டி. ஆளுமையில் CANVATஇன் முழுக் கடன் பெற முடியுமா?

பதில்: ஆம் முடியும். அவருக்கு 2017 - 2018 காலகட்டத்தில் கடன் பெறத் தகுதி உண்டு. அதே சமயம், போன்ற கடன் CANVAT கடனாகப் பெறலாம் என்பது இப்போது இருக்கும் சட்ட்டத்தில் இருந்தால். மேலும், சி.ஜி.எஸ்.டி. சட்டத்தில் சி.ஜி.எஸ்.டி - பிரிவு 140 (2)இன்படி கடனாக அளிக்கப்படலாம் என்றும் இருக்க வேண்டும்.

கேள்வி 4: இப்போது இருக்கும் சட்டத்தின்படி, (சுங்கத் தீர்வை) VAT கடன் என்பது x&y எனபவற்றிற்கு முதலீட்டு சரக்குகள் என்பதாகக் கிடைக்காது. ஆனால் அவை ஜி.எஸ்.டி.யில் சேர்க்கப்பட்டுள்ளன. அப்படியானால், பதிவு செய்த வரிசெலுத்துபவர் என்றிருப்பதால் இந்தக் கடனைப் பெற முடியுமா?

பதில்: அது போன்ற பொருட்கள் ITC யில் இப்போதய சட்டத்தின்படி அனுமதிக்கப் பட்டிருந்தால், அதனுடன் கூடவே ஜி.எஸ்.டி. யிலும் அனுமதிக்கத் தக்கது என்றிருந்தால் அவருக்கு அந்தக் கடனைப் பெற உரிமை உண்டு. ஒருவேளை, இது போன்ற கடனை தற்போதைய சட்டங்களின்படி பெற முடியாது என்றால் அவர் ஜி.எஸ்.டி.யில் பெற முடியாது. எஸ்.ஜி.எஸ்.டி.யின் சட்டப் பிரிவு 140(2).

கேள்வி 5: பதிவு செய்யப்பட்ட ஒரு நபர், தற்போதைய சட்டத்தின் படிதவறாக கடனைப் பெற்றுவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். இதைத் திரும்ப வதலிப்பது, ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி நடக்குமா? அல்லது தற்போதைய சட்டத்தின்படி நடக்குமா?

பதில்: ITC தவறாக அனுபவித்ததை மீட்பது தற்போதைய சட்டப்படி முடியாது என்றால், அந்தத் தொகை நிலுவைத் தொகையாக, ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி வசூலிக்கப்படும்.

கேள்வி 6: பதிவு செய்த வரி செலுத்த வேண்டிய ஒரு நபர் இப்போது இருக்கும் சுங்கத் தீர்வை சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கும், அதே சமயம், ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பற்கான இரண்டு உதாரணங்களைத் தருக.

பதில்: ஒரு உற்பத்தியாளரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ. 60 லட்சம். அவர் தற்போதைய சட்டத்தின்படி, ss - ந் விலக்குப் பெறவராகிறார். ஆனால் ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி பிரிவு (22) ன்படி அவரது ஆண்டின் மொத்த வருமானம் சட்ட வரம்பான ரூ. 20 லட்சத்திற்கு மேல் இருக்கிறது.

ஒரு வணிகருக்கு ஆண்டின் மொத்த வருவாய் VATன் வரம்பைவிடக் குறைவுதான். ஆனால் அவர் கணிணி மூலமாக விற்பனை செய்யும் வணிகர் மூலமாக தனது பொருளை விற்பதால், அவர் ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்யப் பட வேண்டியவராகிறார். இது போன்ற நபர்களுக்கு, சட்டப் பிரிவு 24இன்படி இச்சலுகைகள் கிடையாது.

கேள்வி 7: குறிப்பிட்ட தினத்தில், VAT வரி செலுத்தப்பட்ட இன்புட்களை ஸ்டாக்குகளாகக் கொண்டிருக்கும் சேவை வழங்குநருக்கு ITC அனுமதிக்கப்படுமா?

பதில்: ஆம். சட்டப் பிரிவின்படி அவரது இத்தகைய ஸ்டாக்குகளுக்கு இன்புட் வரிக் கடன் பெற உரிமை உண்டு.

கேள்வி 8: பதிவு செய்த ஒரு நபர், கடைசி வாட் திருப்புத் தொகையில் கூடுதலாக ITC ரூ.10,000 பெற்றார். ஜி.எஸ்.டியின் கீழ் அவர் காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் இருக்கத் தெரிவு செய்கிறார். அவரால் கூடுதல் ITCயை முன்னெடுத்துச் செல்ல முடியுமா?

பதில்: பதிவு செய்த நபரால், ITCயின் வாட் உபரித் தொகையை காம்பொஸிஷன் திட்டத்தின் கீழ் இருக்கத் தெரிவு செய்வதால் - சட்டப் பிரிவு 140 (1)ஐ முன்னெடுத்துச் செல்ல முடியாது.

கேள்வி 9: மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் விற்பனை ஆன பொருட்கள் திரும்புதல் என்பது ஒட்டுமொத்த வருவாயிலிருந்து, ஆறு மாதங்களுக்குள் கழித்துக் கொள்ளக் கூடியதா? உதாரணமாக பொருளை வாங்கும் ஒரு நபர் ஜி.எஸ்.டி. ஆளுமையில் இருக்கும்போது பொருளைத் திருப்புகிறார். இது குறிப்பிட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாக நடக்கிறது. இது ஜி.எஸ்.டி - யின் கீழ் வரிவிதிப்பிற்கு உரியதா?

பதில்: அமலில் இருக்கும் ஒரு சட்டத்தின்படி வாங்கியது எந்தப் பொருளாக இருந்தாலும் அதற்கு வரியும் (இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, CST) ஏற்கெனவே ஒப்ப்புக் கொண்ட நாளுக்கு ஆறு மாதங்களுக்குள் செலுத்தியாகி விட்டது. வாங்கியவர் அந்த சரக்கினை ஏற்கெனவே ஒப்புக் கொண்ட நாளுக்குப் பின்னர் திருப்பி அனுப்பி விடுகிறார். அவ்வாறு அனுப்பப்பட்ட சரக்கை வழங்கல் என்றுதான் ஜி.எஸ்.டி கூறுகிறது. அதற்கான வரி செலுத்தப் படவேண்டும். இதற்க்கான இரண்டு நிபந்தனைகள்.

1) அந்தச் சரக்குகள் ஜி.எஸ்.டி. சட்டப்படி வரி விதிப்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

2) பொருளை வாங்கியவர் ஜி.எஸ்.டி வரியின் கீழ்பதிவு செய்திருக்க வேண்டும். அதே சமயம் பொருளை விற்றவர், ஒரு வேளை வாங்கியவர் தற்போதைய சட்டப்படி பதிவு செய்திராவிட்டால், அத்தகைய வரியை ( CST) உரிமை பெற்றிருக்கிறார். இது தவிர, அந்தச் சரக்குகள் ஆறு மாதங்களுக்குள் (அல்லது நீட்ட்டிக்கப்பட்ட கால வரையாக, அதிக பட்சம் மேலும் இரண்டு மாதங்கள்) திரும்ப அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அந்த சரக்குகள் அடையாளம் காணும் வகையில் இருக்க வேண்டும். சட்டப் பிரிவு 140 (1)

கேள்வி 10: ஒரு உற்பத்தியாளர் அல்லது பணித் தொழிலாளி ஆகியோர் பாதி முடிக்கப்பட்ட பொருட்களை, முழுவதுமாக முடித்துக் குறிப்பட்ட தினத்திற்குப் பிறகு அனுப்புகிறார்கள். தற்போதைய சட்டத்தின்படி இவர்கள் வரி செலுத்தக் கடமைப்பட்டவர்களா?

பதில்: இல்லை. பின் வரும் தழ்நிலைகளில் உற்பத்தியாளரோ, பணித் தொழிலாளரோ எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை

1) உள்ளிடுகள் அல்லது பாதி முடிக்கப் பட்ட பொருட்கள், இப்போதிருக்கும் சட்டங்களில் உள்ள ஷரத்துக்களின்படி குறிப்பிட்ட நாளுக்கு முன்பு அனுப்பி வைக்கப்படும் நிலை

2) பணித் தொழிலாளி, அவற்றை ஆறு மாதங்களுக்குள்ளாக, (அல்லது அதற்கு மேல் நீட்டிக்கப்பட்ட காலகட்டத்திற்குள்) குறிப்பிட்ட நாளில் திருப்பி அனுப்பிவிடுகிறார்.

3) உற்பத்தியாளர் மற்றும் தொழிலாளி ஆகியோர் பணித் தொழிலாளியிடம் இருந்த கையிருப்புச் சரக்கைப் பற்றி குறிப்பிட்ட நாளில் அதற்கான படிவத்தின் வாயிலாக அறிவித்து விடுகிறார்கள்.

இது தொடர்பான சட்டப் பிரிவுகள் - 141(1), 141(2) & 1414)

அதே சமயத்தில், அந்த பொருட்கள் ஆறு மாதங்களுக்குள் (அல்லது நீட்டிக்கப்பட்ட அதிகபட்ச 85T6)loté0T, மேலும் இரண்டு மாதங்களுக்குள்) திரும்ப அனுப்பப்படாவிட்டால், பயன்படுத்திய வரிக்கடன் மீட்டெடுக்கப்படும்.

கேள்வி 11: வேலையாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் என்ன ஆகும்?

பதில்: வேலையாட்கள் பொருட்களை, நிர்ணயிக்கப்பட்டநாளில் இருந்து ஆறு மாதத்துக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) உற்பத்தியாளரின் தொழில் நடக்கும் இடத்துக்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்க்கவில்லை எனில் அந்தப் பொருட்களுக்கான வரி அவரிடமிருந்துதான் பெறப்படும் - பிரிவு 141(1), 141(2)

கேள்வி 12: உற்பத்தியாளர் சோதனைக்காக அனுப்பப்பட்ட முழுமையடைந்த பொருட்களை வரி செலுத்துபவர் வேறு யாருக்கேனும் தர முடியுமா?

பதில்: ஆம், உற்பத்தியாளர் சோதனைக்காக அனுப்பிய முழுமையடைந்த பொருட்களை, ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) இந்தியாவில் வரி செலுத்தப் பதிவுசெய்த வேறு நிறுவனங்களுக்குத் தரலாம் அல்லது வரி செலுத்த வேண்டிய அவசியமற்ற ஏற்றுமதி மூலம் அனுப்பிக்கொள்ளலாம். -141(3)

கேள்வி 13: தொழிற்சாலையிலிருந்து அனுப்பப்பட்ட முழுமையடைந்த பொருட்கள் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நாளில் அல்லது அதற்குப் பின் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்குமா?

பதில்: தொழிற்சாலையிலிருந்து முழுமையடைந்த பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் பிற நிறுவனங்களுக்கு அல்லது சோதனைக்காக அனுப்பப்பட்டு சோதனை செயல்பாடுகள் முடிந்து மீண்டும் நிர்ணயிக்கப்பட்டநாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) திருப்பி வழங்கப்பட்டால் ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 141(3)இன் கீழ் எந்த வரியும் இல்லை.

கேள்வி 14: உற்பத்தி செயல்பாட்டின் கீழ் வராத, சோதனை செயல்பாடுகள் அல்லது வேறு செயல்பாடுகளுக்காக வேறு நிறுவனத்தைச் சார்ந்த வேலையாளுக்கு அனுப்பப்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்குத் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் எப்போது ஜிஎஸ்டி வரியானது செலுத்த வேண்டி வரும்?

பதில்: நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சோதனைக்காகவோ அல்லது வேறு செயல்பாடுகளுக்காகவோ பிற நிறுவன வேலையாளுக்கு அனுப்பப்பட்டிருந்தால் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், அந்தப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்) திருப்பி வழங்கப்படாவிட்டால் ஜிஎஸ்டி வரியை அந்த வேலையாள் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் உற்பத்தியாளர் அனுபவித்து அந்த இன்புட் டேக்ஸ் கிரெடிட்டும், அந்தப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் திருப்பி வழங்கப்படாத பட்சத்தில் அவரிடமிருந்து திருப்பி வாங்கப்படும் . பிரிவு 141(3)

கேள்வி 15: பிரிவு 141இல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு மாத நீட்டிப்பு என்பது தானாகவே செயல்படுத்தப்படுமா?

பதில்: இல்லை, தானாகச் செயல்படுத்தப்பட மாட்டாது. ஏற்றுக்கொள்ளத் தக்க காரணங்களைத் தெரிவித்த பின்னரே ஆணையரால் அது நீட்டிக்கப்படும்.

கேள்வி 16: விலைகளை மறுபரிசீலனை செய்வதற்கு டெபிட்கிரெடிட் விவரக் குறிப்புகளை வழங்குவதற்கான கால வரம்பு என்ன?

பதில்: வரி செலுத்த வேண்டிய நபர் டெபிட்கிரெடிட் விவரக் குறிப்புகள் அல்லது சப்ளிமெண்டரி இன்வாய்ஸ் விலை மறுபரிசீலனைக்கு 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விலைகள் கீழ்நோக்கி மறுபரிசீலனை செய்யப்பட்டால், வரி செலுத்துபவர் அவருடைய வரியைக் குறைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார் அதுவும் பொருளைப் பெற்றவர் இன்வாய்ஸ் அல்லது கிரெடிட் குறிப்புகளில் இன்புட் டேக்ஸ் கிரெடிட் குறைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிக் குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படும் பிரிவு 142(2).

கேள்வி 17: தற்போது சட்டத்தில் நிலுவையில் உள்ள திருப்பி வழங்கப்பட வேண்டிய வரிவட்டி போன்றவற்றின் விதி என்ன?

பதில்: நிலுவையில் உள்ள திருப்பி வழங்கப்பட வேண்டிய வரிவட்டி போன்றவை தற்போதுள்ள சட்டம் பிரிவு 1423)இன் படி வழங்கப்படும்.

கேள்வி 18: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள VAT வரியின் மீதான CENVATITC போன்றவற்றைப் பெறுவதற்கான கோரிக்கை அல்லது பரிசீலனையின் விதி என்ன? அது வெளியீட்டு வரியுடன் தொடர்புடையதாக இருந்தால்?

பதில்: CENVAT / ITC அல்லது நிர்ணயிக்கப்பட்டநாட்களுக்கு முன் அல்லது பின் செயல்படுத்தப்பட்ட எந்தவொரு வெளியீட்டு வரி ஆகியவற்றின் மீதான அனைத்து கோரிக்கைகள், மறுபரிசீலனைகள், ஆய்வுகள் அல்லது குறிப்புகள் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். மற்றும் திருப்பி வழங்கப்பட வேண்டிய CENVAT /ITC அல்லது வெளியீட்டு வரி தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தால் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் வழங்கப்படும். அதேபோல் ஏதேனும் தொகை திருப்பி எடுக்கப்பட வேண்டியிருந்தால் அவை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் நிலுவை வரிகளாக எடுத்துக்கொள்ளப்படும் . பிரிவு 142(6/1427).

கேள்வி 19: மேல்முறையீடு அல்லது மறுபரிசீலனை அசெஸிக்கு சாதகமாக மாறினால், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் ரீஃபண்ட் செய்யப்படுமா? ஒருவேளை முடிவு அசெஸிக்கு எதிராக மாறினால் என்ன ஆகும்?

பதில்: தற்போதுள்ள சட்டத்தில் உள்ள விதிமுறைகளுக்கு ஏற்பவே ரீஃபண்ட் முறைகள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள சட்டத்தின் கீழ் ஏதேனும் மீட்கவேண்டிய தொகை மீட்கப்படாமல் இருந்தால் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் நிலுவை வரியாக மீட்கப்படும் - பிரிவுகள் 1426 & 1427)

கேள்வி 20: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கணக்குத் தாக்கல் பரிசீலனையில் ஏதேனும் ரீஃபண்ட் செய்யப்பட வேண்டியதாக இருந்தால் அது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் எப்படி கையாளப்படும்?

பதில்: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட கணக்குத் தாக்கல் பரிசீலனையின் விளைவாக ஏதேனும் ரீஃபண்ட் செய்யப்பட வேண்டியிருந்தால் நிர்ணயிக்கப்பட்டநாளுக்குப் பின்னர் ரொக்கமாக தற்போதுள்ள சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பவே ரிஃபண்ட் செய்யப்பட்டுவிடும் - பிரிவு 1429)(பி).

கேள்வி 21: ஜிஎஸ்டியில் எந்தவொரு பொருட்கள் சேவைகள் சப்ளை செய்யப்பட்டாலும், தற்போதுள்ள சட்டத்தின் கீழ் அதற்கான கான்ட்ராக்ட் பதிவு செய்யப்பட்டிருந்தால், எந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும்?

பதில்: அந்த சப்ளைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தப்பட வேண்டியிருக்கும் ஜிஎஸ்டி சட்டம் பிரிவு 142(10)

கேள்வி 22: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி வித்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சப்ளை செய்யப்பட்டால் ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியிருக்குமா?

பதில்: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சப்ளை செய்யப்பட்டால் எந்த ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டியதில்லை - பிரிவு 142(1).

கேள்வி 23: தற்போதுள்ள சட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்டநாளுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட எந்த ஒரு அசெஸ்மெண்ட் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான ரிஃபண்ட் செய்யப்பட வேண்டிய வரி, வட்டி, அபராதம் ஆகியவை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமா?

பதில்: தற்போதுள்ள சட்டத்தின் கீழ் எந்த ரீஃபண்ட் தொகையும் ரொக்கமாகத் தரப்பட மாட்டாது - சிஜிஎஸ்டி சட்டம் பிரிவு 1428)(b)

கேள்வி 24: முந்தைய சட்டத்தின் கீழ் ஐஎஸ்டி பெற்ற சேவைகளுக்கான இன்புட் டேக்ஸ் கிரெடிட் ஜிஎஸ்டி சட்டத்தில் வழங்கப்பட முடியுமா?

பதில்: ஆம், இதுபோன்ற சேவைகளோடு தொடர்புடைய இன்வாய்ஸ் நிர்ணயிக்கப்பட்டநாளில் பெறப்பட்டிருந்தாலும் சரி அல்லது அதற்குப் பிறகு பெறப்பட்டிருந்தாலும் சரி வழங்கப்படும் - சிஜிஎஸ்டி சட்டம் பிரிவு 140(7).

கேள்வி 25: மாநில VAT வரிச் சட்டத்தின் கீழ், பொருட்களை எங்கு விற்றாலும் வாட் வரி பிடிக்கப்படும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முன் இன்வாய்ஸ் வழங்கப்பட்டு ஆனால் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு பணம் செலுத்தப்பட்டிருந்தால் வரிப் பிடித்தமானது இந்தச் சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுமா?

பதில்: இல்லை, இது போன்ற நிகழ்வுகளில் ஆதார விலையில் செய்யப்படும் வரிப் பிடித்தமானது ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.

கேள்வி 26: ஒப்புதலின் பேரில் அனுப்பப்பட்ட பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்கு முந்தைய ஆறு மாதங்களுக்கு முன்பாக அனுப்பப்படவில்லை ஆனால் அந்த பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு ஆறு மாதம் கழித்து விற்றவருக்கே திருப்பி வழங்கப்பட்டால், அதற்கு ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டுமா?

பதில்: ஆம், அப்படிப்பட்ட பொருட்கள் ஜிஎஸ்டி வரி சட்டத்தின் கீழ் வரிச் செலுத்தப்பட வேண்டியிருந்தால், பொருட்களைத் திருப்பி அளிக்கும் நபர் அல்லது பொருட்களை ஒப்புதல் செய்யாத நபர், நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குப் பிறகு ஆறு மாதம் (அல்லது மேலும் அதிகபட்சமாக நீட்டிக்கப்பட்ட இரண்டு மாதங்கள்) கழித்து திருப்பி வழங்கும் பட்சத்தில் வரி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் இந்த நிகழ்வுகளில் பொருட்களை ஒப்புதலில் பேரில் அனுப்பியவரும் வரி செலுத்த வேண்டியிருக்கும் - பிரிவு 142(12).

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.71428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top