பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

GST-யில் உள்ளீட்டு சேவை பகிர்பவர் பற்றிய கோட்பாடு

GST-யில் உள்ளீட்டு சேவை பகிர்பவர் பற்றிய கோட்பாடு குறித்து கேட்கப்படும் கேள்வி பதில்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி 1. உள்ளீட்டு சேவை பகிர்பவர் (ISD) என்றால் என்ன?

பதில்: ISD என்பது சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளுக்கான, உள்ளீட்டு சேவைகளைப் பெறுவதற்கான வரி விலைப்பட்டியலைப் பெறவும், சரக்குகள் அல்லது / மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மத்திய வரி (CGST), மாநில வரி (SGST) ஒருங்கிணைந்த வரி (GST) அல்லது யூனியன் பிரதேச வரி (UTGST) பற்றிய குறிப்பிட்ட ஆவணங்களை வெளியிடவும், ஒரே PANISD உள்ளவர்களுக்காகவும் உள்ள ஒரு அலுவலகம்.

கேள்வி 2. SD-யில் பதிவு பெறத் தேவையான தகுதிகள் என்ன?

பதில்: ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும் ISD-யாகப் பதிவுபெறத் தனியாகப் பதிவு செய்தாக வேண்டும். பதிவுகளுக்கான ஆரம்பகால எல்லை ISD-க்குப் பொருந்தாது. தற்போதையை திட்டத்தின் கீழ் (அதாவது சேவை வரி) ISD பதிவு GST திட்டத்திற்கு மாற்றப்பட மாட்டாது. இருக்கும் ISD-க்கள் அனைவரும் ISD ஆகச் செயல்பட விரும்பினால் புதிய திட்டத்தின் கீழ் புதிதாகப் பதிவு செய்து கொண்டாக வேண்டும்.

கேள்வி 3. ISD கடன் வசதியைத் தர தேவையான ஆவணங்கள் என்ன?

பதில்: இதற்கென தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு ஆவணத்தின் மூலம் கடன் வசதி தரப்படும். இந்த ஆவணத்தில் தரப்படும் உள்ளீட்டு கடன் வசதித் தொகை குறிப்பிடப்பட்டிருக்கும்.

கேள்வி 4. ISD எல்லா சப்ளையர்களுக்கும் உள்ளீட்டு கடன் வசதி தருமா?

பதில்: தராது. பதிவு பெற்ற, உள்ளீட்டு சேவைகளைத் தமது தொழில் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமே உள்ளீட்டு சேவைகள் மீதான கடன் வசதி தரப்படும்.

கேள்வி 5. தொழிலை மேம்படுத்துவது, அதற்கான உள்ளீட்டு சேவைகளின் அளவு இரண்டையும் இணைப்பது சப்ளையர்களுக்குப் பெரும்பாலும் ஒரு சவாலாகவே இருக்கிறது. அந்நிலையில் ISD-யால் TC பகிரல் எப்படிச் செய்யப்படும்?

பதில்: இச்சூழலில் பகிரல் ஒரு சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படும். முதலாவதாக, உள்ளீட்டு சேவை தரப்பட்டு உள்ளீட்டு கடன் வசதி பெறுபவர்கள் மட்டும் இப்பகிரலால் பலனடைவர். இரண்டாவதாக, ஆபரேஷனல் யூனிட்கள் மத்தியில் மட்டும் பகிரப்படும். மூன்றாவது, ஒரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் பெறுபவரின் லாபத்துக்கும் உள்ளீட்டு சேவை பகிரப்படும். அனைவரின் சராசரிக்கும் உள்ள விகித அடிப்படையில் பகிரப்படும். இறுதியாக, பகிரப்படும் கடன் வசதி இதற்கான எல்லையை மீறக்கூடாது.

கேள்வி 6. ISD-க்காகப் பயன்படுத்தப்படும் இலாபம் எவ்வளவு?

பதில்: ISD-க்காகப் பயன்படுத்தப்படும் லாபத்தில் எவ்வித வரியோ அல்லது அரசியலமைப்புச் சட்டம் ஏழாவது பிரிவின் கீழ் பட்டியல் 1-ல் நுழைவு 84, பட்டியல் 2-ல் நுழைவு 51, 54 இல் சுமத்தப்படும் எவ்வித வரியோ அடங்காது.

கேள்வி 7. 1SD ரிடர்னை ஃபைல் செய்ய வேண்டுமா?

பதில்: ஆம்; ISD ரிடர்னை அடுத்த மாதம் 13-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.

கேள்வி 8. ஒரு நிறுவனம் பல்வேறு ISD-க்களை வைத்திருக்கலாமா?

பதில்: ஆம்; மார்க்கெட்டிங் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் தனித்தனி ISD-க்கு விண்ணப்பித்து அவற்றைப் பெறலாம்.

கேள்வி 9. 1SD-யால் தவறாக / உபரியாகத் தரப்பட்ட கடனை மீட்பதற்கான சட்டப் பிரிவுகள் என்ன?

பதில்: உபரியாக / தவறாகத் தரப்பட்ட கடன் அதைப் பெற்றவர்களிடமிருந்து வட்டியுடன் பிரிவு 73 (அ) 74-ன் கீழ் மீட்கப்படலாம்.

கேள்வி 10. CGST, IGST கடன் வசதிகள் ISD-யால் IGST கடனாக பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்குத் தரப்படலாமா?

பதில்: முடியும். CGST கடன் வசதி IGST ஆகவும், GST கடன் வசதி CGST ஆகவும் பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.

கேள்வி 11. SGST/UTGST கடன் வசதிகள் GST கடன் வசதியாக ISD-யால் பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்குத் தரப்படலாமா?

பதில்: ஆம்: SGST/UTGST கடன் வசதி IGST கடன் வசதியாகப் பல்வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.

கேள்வி 12. CGST/IGST கடன் வசதியை CGST கடனாக ISD தருமா?

பதில்: ஆம்; ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு CGST / IGST கடன் CGST கடனாக ISDயால் தரப்படலாம்.

கேள்வி 13. SGST / UTGST மற்றும் GST கடன் வசதி SGST / UTGST கடனாகத் தரப்படலாமா?

பதில்: தரப்படலாம்: SGST/IGST கடனை SGSTIUTGST கடனாக ஒரே மாநிலத்தில் இருப்பவர்களுக்கு ISD-யால் தரப்படலாம்.

கேள்வி 14. ISD-யின் கடன் பெறும் அனைவருக்கும் பொதுவான கடனாக இதை எப்படித் தருவது?

பதில்: பொதுக்கடனாக அனைவராலும் பயன்படுத்தப்படும் கடனை ISD 'புரோ ரேட்டா அடிப்படையில் - அதாவது அதைப் பெறும் ஒவ்வொருவரின் லாபம், அனைவரின் லாப சராசரி ஆகியவற்றின் அடிப்படையில் - தரலாம்.

கேள்வி 15. ISD-யானது CGST/IGST கடன் வசதியை வெளி மாநிலத்தில் இருப்பவர்களுக்கு _____ ஆகத் தரலாம்.

(அ) IGST

(ஆ) CGST

(இ) SGST

பதில்: (அ) IGST

கேள்வி 16. CGST கடன் வசதியை மாநிலத்துக்குள் ISD ____ ஆகத் தரும்.

(அ) GST

(ஆ) CGST

(இ) SGST

(ஈ) இதில் ஏதாவது ஒன்று

பதில்: (ஆ) CGST

கேள்வி 17. உள்ளீட்டு சேவைகளைப் பயன்படுத்தும் ஒன்றுக்கும் மேற்பட்ட சப்ளையர்கள் செலுத்தும் வரி மீதான கடன் ____

(அ) ஒரு மாநிலத்தில் புரோ ரேட்டா அடிப்படையில் உள்ளீட்டு சேவைகளைப் பயன்படுத்திய சப்ளையர்களுக்கு மட்டும் இது பகிரப்படும்

(ஆ) எல்லா சப்ளையர்களுக்கும் சமமாகத் தரப்படும்

(இ) ஒரே ஒரு சப்ளையருக்கு மட்டும் தரப்படும்

(ஈ) அந்த மாநிலத்தில் புரோரேட்டா அடிப்படையில் உள்ளீட்டு சேவைகளைப் பயன்படுத்திய சப்ளையர்களுக்கு மத்தியில் மட்டும் இது பகிரப்படும்.

பதில்: (அ) ஒரு மாநிலத்தில் புரோ ரேட்டா அடிப்படையில் உள்ளீட்டு சேவைகளைப் பயன்படுத்திய சப்ளையர்களுக்கு மட்டும் இது பகிரப்படும்

கேள்வி 18. தரப்பட்ட உபரிக் கடனை SD-யிடமிருந்து துறையினரால் மீட்க முடியுமா?

பதில்: முடியாது. தரப்பட்ட உபரிக்கடனை வட்டியுடன் பெற்றவர்களிடமிருந்து திரும்ப மீட்கலாமே தவிர ISD-யிடமிருந்து அல்ல. பிரிவு 73 (அ) 74-ன் கீழ் உள்ள விதிகளின்படி தரப்பட்ட கடன் திரும்ப மீட்கப்படும்.

கேள்வி 19. சட்டப் பிரிவுகளில் சொல்லப்பட்டதற்குப் புறம்பான வழிகளில் தரப்பட்ட கடன் என்ன ஆகும்?

பதில்: சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் தரப்பட்ட கடன் அது யாருக்குத் தரப்பட்டதோ அவரிடமிருந்து வட்டியுடன் மீட்கப்படும்.

ஆதாரம் : http://www.cbec.gov.in

2.89473684211
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top