பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி கிடைக்க இங்கு படிக்கவும்

அரசாணை எண் 39

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை

அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

3.04545454545
விஜய் Feb 27, 2017 09:06 PM

விண்ணப்ப படிவத்தின் பெயர் என்ன ஐயா தலைமை ஆசிரியரிடம் எவ்வாறு கேட்க வேண்டும்

s, அடைக்கலராஜ் Dec 31, 2016 07:06 PM

மாரடைப்பால் தந்தை இறந்தால் இதில் பயன் பெற முடியுமா (இறந்தவர் ஒரு மாற்று திறனாலி)

ரெ.இராஜசெகரன் Oct 25, 2016 04:16 PM

பயிலும் மாணவ,மாணவியரின் பெற்றோர்களில் ஒருவர் விபத்தில் இறந்தாலோ,உடல் ஊனமுற்றாலோ 75000 அல்லது 50000 ரூ மாணவரின் பெயரில் வைப்பீடு செய்யப்படும் தேவையான ஆவணங்கள்1.குடும்ப அட்டை நகல்2.விபத்திற்கான முதல் தகவல் அறிக்கை3.பிணக்கூறு சான்று4.இறப்பு சான்று5.விண்ணப்ப படிவம் ஆகியன 3 நகல்களில் இணத்து உரிய தலைமை ஆசிரியர் உரிய ஆய்வு அலுவருக்கு விண்னப்பிக்கவும். காலதாமதம் ஏற்பட்ட்டால் காரணம் தெரிவிக்கவும்

முத்து Aug 01, 2016 03:40 PM

விபத்தில் தந்தை இறந்து விட்டார். இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் எங்கு கிடைக்கும்? ஆன்லைன் இல் கிடைக்குமா?

ஆதியான் Jun 23, 2016 10:06 PM

இத்திட்டதின் கீழ் எந்த அலுவலரிடம் விண்ணபிப்பது,

மற்றும் தேவையான ஆவணங்கள் என்னென்ன??

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top