பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி கிடைக்க இங்கு படிக்கவும்

அரசாணை எண் 39

அரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000

பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்குதல்- ஆணை வெளியிடப் படுகிறது.

பள்ளிக் கல்வி (இ2 ) துறை

அரசு ஆணை ( நிலை ) எண். 39

ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ,மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ.50,000/- நிதி வழங்கப்படும்.

இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.

3.04545454545
பிரேம்குமார் Aug 24, 2018 01:24 PM

உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகளையும் தெரியப்படுத்தவும்.

சம்பத் ஆசிரியர் Jul 21, 2018 09:51 PM

யாரை அணுகுவது
விண்ணப்பத்துடன் என்ன இணைக்க வேண்டும்

செய்யது அலி பாத்திமா Mar 10, 2018 11:16 AM

என் அத்தை திடீரென பாம்பு கடித்து இறந்துவிட்டார். அவரின் பிள்ளைகள் பள்ளியில் பயில்கின்றனர். இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா?

இராணி Oct 28, 2017 07:56 AM

அரசுப் பள்ளியில்எட்டாம் வகுப்பு,ஆறாம் வகுப்பு பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் இருவரும் ஓராண்டு இடைவெளியில் இயற்கை மரணம் அடைந்துவி்ட்டார்கள்.வருவாய் இன்றி படிப்பைத்தொடர இயலாதநிலையில் உள்ளனர்.அரசாணை எண் 39/நாள்.30/03/2005 இதற்கு பொருந்துமா?

பாலமுருகன் Aug 02, 2017 07:34 AM

அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டால் அதற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் எங்கு கிடைக்கும். ஆன்லைன்னில் பதிவு செய்யலாமா? அவ்வாறு செய்யலாம் எனில் அதற்கான வலையதள முகவரியை அளிக்கவும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top