பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்: பயன் பெறுவது எப்படி?

திட்டத்தின் பெயர்

சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.

ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்-1.

இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம்-2.

நோக்கம்

குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல், பெண் சிசு வதையை ஒழித்தல், ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளித்தல், பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல்.

உதவித்தொகை விவரம்

திட்டம்-1

குடும்பத்தில் ஒரேயொரு பெண் குழந்தை எனில், ரூ.50 ஆயிரத்திற்கான காலவரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வழங்கப்படும்.

திட்டம்-2

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் நிலை வைப்புத்தொகை வழங்கப்படும். (தமிழக அரசு அண்மையில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட தொகை). மேலும், இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டு தோறும் கிடைக்கும் வட்டியை, வைப்புத்தொகை வழங்கப்பட்ட ஆறாம் ஆண்டில் இருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்

 • ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
 • ஆண் குழந்தை இருத்தல் கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது.
 • பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.
 • ஒரு பெண் குழந்தை எனில் (திட்டம்-1) ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு குறைவாகவும்.
 • இரண்டு பெண் குழந்தைகள் எனில் (திட்டம்-2) ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.
 • பயனடையும் குழந்தை 3 வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

 • குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்.
 • வருமானச்சான்று.
 • இருப்பிடச்சான்று.
 • கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று.
 • சாதிச்சான்று.
 • பெற்றோரின் வயதுச்சான்று.
 • ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று.
 • குடும்ப அட்டையின் நகல்.
 • குடும்ப புகைப்படம்.

வழங்கப்படுவதற்கான கால அளவு:- நிலை வைப்புத் தொகையின் 20-ம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகை வழங்கப்படும்.

அணுக வேண்டிய அலுவலர்

 • மாவட்ட சமூகநல அலுவலர்
 • மாவட்ட திட்ட அலுவலர்கள் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்).
 • குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்), ஊர்நல அலுவலர்கள். இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் பி.டீ.ஓ. அலுவலகங்களில் கிடைக்கும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை இதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

ஆதாரம் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு அரசு

3.14388489209
கோவிந்தசாமி May 10, 2018 10:39 AM

ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது நாங்கள் விண்ணப்பம் செய்ய முடிமா

முருகானந்தம் Mar 06, 2018 01:02 PM

முதல் குழந்தைக்கு 3 வயது 8மாதம் ஆகிறது 2இரண்டாவது குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது . இரண்டு குழந்தைக்கும் சேர்த்து பதிவு செய்யலாமா?

தங்கமாரியம்மாள் Feb 28, 2018 03:02 PM

எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. நான் இணையத்தின் வழியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எவ்வளவு அனுப்புவது?

devi Feb 21, 2018 01:31 PM

இரண்டாவது பெண் குழந்தைக்கு நான்கு வயது நிரம்பிவிட்டது , நாங்கள் பதிவு செய்யலாமா .
srstudioo @gmail .com

நடராஜன் Nov 12, 2017 01:04 PM

ஐயா இதில் குடும்ப அட்டை நகல் கேட்டுள்ளீர்கள் நான் குடும்ப அட்டை பதிவு செய்து குடும்ப அட்டை எண்ணுடன் கூடிய சான்று வைத்துள்ளேன். அந்த நகல் போதுமா..

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top