பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

குழுவின் பொறுப்புகள்

சுய உதவிக் குழுவின் பொறுப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அ) கூட்டம்

  • மாதத்திற்கு குறைந்தது 2 கூட்டங்கள் நடத்துதல் (15 நாட்களுக்கு ஒரு முறை).
  • வாரக் கூட்டம் நடத்துவது மிகச் சிறந்தது
  • அனைத்து உறுப்பினர்களும் குழு கூட்ட செயல்பாடுகளில் பங்கேற்பது அவசியம்
  • உறுப்பினர்கள் அனைவரும் வட்ட வடிவில் அமர வேண்டும்
  • நிகழ்ச்சி நிரல் தயாரித்து அதன்படி கூட்டத்தை நடத்த வேண்டும்
  • குறைந்தது 90 சதவீத உறுப்பினர்களாவது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
  • கலந்து கொண்ட உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் மட்டுமே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
  • கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதற்கான விதிமுறைகளை உருவாக்குதல் அவசியம்.
  • முடிவுகள் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு அனைவருக்கும் படித்துக்காட்டப்பட்டு கையொப்பம் பெறப்பட வேண்டும்.

ஆ) நிர்வாகிகள்

  • பிரதிநிதி 1, பிரதிநிதி 2.
  • இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகளை கட்டாயமாக மாற்றி அமைக்க வேண்டும்.
  • குழுவில் உள்ள நன்கு எழுதப்படிக்க தெரிந்த ஒரு நபரால் கணக்குகள் பராமரிக்கப்பட வேண்டும்.
  • குழு உறுப்பினர்களால் கணக்கு பராமரிக்க முடியாத பட்சத்தில் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர், கணக்காளர் மற்றும் குழு உறுப்பினரின் மகன் / மகள் போன்றோரின் உதவியை பெற்று கொள்ளலாம்.

1. நிர்வாகிகளின் பொறுப்புகள்

i. பிரதிநிதி- 1

  • குழுசார்பாக வெளியிடங்களில் பங்கேற்றல்
  • தொடர்ந்து குழுக்கூட்டங்களை முறையாக நடத்துதல்
  • வங்கிக் கணக்கினை இணைந்து இயக்குதல் (பிரதிநிதி 2 உடன் இணைந்து)
  • எடுக்கப்பட்ட முடிவுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துதல்.
  • தர மதிப்பீடு, உள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கையை உறுதிப்படுத்துதல்
  • சரியான நேரத்தில் வங்கி மற்றும் பிற துறைகளுடன் இணைத்தல்

ii. பிரதிநிதி- 2

  • நிதி நிலையைக் கண்காணித்தல்
  • உறுப்பினர்கள் கடன் திரும்பச் செலுத்துதலை கண்காணித்தல்
  • வங்கிக் கணக்கை இணைந்து செயல்படுத்துதல் ( பிரதிநிதி 1 உடன் இணைந்து)
  • ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அனைத்து பதிவேடுகளும் முறையாக எழுதப்படுதலை உறுதி செய்தல்.
  • தனி நபர் பாஸ்புத்தகம் உடனுக்குடன் அக்கூட்டத்திலேயே எழுதப்படுதலை உறுதி செய்தல்
  • குறைந்தபட்ச கையிருப்பை உறுதி செய்தல்
  • நிதி நடவடிக்கைகள் குழுக்கூட்டத்தில் மட்டும் நடைபெறுதலை உறுதி

2. கணக்காளர் / ஊக்குனரின் பொறுப்புக்கள்

  • கணக்கு புத்தகங்களை பராமரித்தல்.
  • எடுக்கப்பட்ட முடிவுகளை ஆவணப்படுத்துதல்.
  • தனி நபர் பாஸ்புத்தகம் எழுதி உறுப்பினர்களிடம் ஒப்படைத்தல்.
  • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு, செயல்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தலை உறுதி செய்தல்.
  • உள்தணிக்கை மற்றும் ஆண்டு தணிக்கைக்கு தயார் செய்தல்

3. சுய உதவிக்குழு உறுப்பினர்களின் பொறுப்புகள்

  • குழு கூட்டம், சேமிப்பு போன்ற நடவடிக்கைகளில் தவறாமல் ஈடுபடுதல்.
  • உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கத்திற்கு அனுமதி
  • நிர்வாகிகளை தேர்வு செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல்
  • கடன் கொடுத்தல் மற்றும் திரும்ப செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • நிதி ஆதாரப் பெருக்கம் (சுய உதவிக் குழுவானது பல்வேறு வகையில் சாத்தியமுள்ள வெளி நிறுவனங்களுடன் இணைப்பை ஏற்படுத்தல்)
  • ஒவ்வொரு முறையும் உள்தணிக்கை மற்றும் வெளித்தணிக்கை முடிவடைந்தவுடன் கணக்குகள் மீதான அனுமதி அளித்தல்.
  • குழுவின் நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து மதிப்பீடு செய்தல்.
  • உபரி/ இலாப ஒதுக்கீடு (சுய உதவிக்குழுவில் உபரி வருவாய் ஏதும் இருப்பின், அவ்வாறு சேர்த்து வைக்கப்பட்டுள்ள இலாப நிதியை, பல்வேறு காரணங்களுக்காக குழுவின் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு ஒதுக்கீடு செய்தல்

இ) வங்கி

  • குழுவின் பெயரில்தான் வங்கிக் கணக்கு துவக்கப்பட வேண்டும்.
  • பிரதிநிதி 1 மற்றும் பிரதிநிதி 2 வங்கி கணக்கினை இணைந்து செயல்படுத்துவர்.
  • வங்கிக்கு குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் செல்ல வேண்டும்.
  • நிர்வாகிகள் மாறும் போது வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • சேமிப்பு மற்றும் கடன் வசூல் முறையாக (கூட்டம் முடிந்தவுடன் அல்லது அடுத்த நாள்) வங்கியில் செலுத்த வேண்டும்.
  • தீர்மானத்தின் அடிப்படையில் தான் செலவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • வங்கி பாஸ் புத்தகத்தை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

2.96551724138
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top