பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டமைப்பின் நிறுவன அமைப்பு முறை

கூட்டமைப்பின் நிறுவன அமைப்பு முறை பற்றிய தகவல்

கூட்டமைப்பின் எல்லை வரையறை

 • ஓரு ஊராட்சியில் உள்ள அனைத்து குழுக்களும் ஓரே கூட்டமைப்பாக செயல்பட வேண்டும்
 • 10க்கு குறைவாக சுயஉதவிக்குழுக்கள் உள்ள ஊராட்சியில் இடைக்கால வாழ்வாதார துணைக்குழுவும், பழங்குடியினர் வறுமை ஒழிப்பு சங்கம் உள்ள பகுதியில் பழங்குடியினர் வாழ்வாதார துணைக்குழுவும் அமைத்து அமுத சுரபி நிதியினை பெற்று பயன்படுத்தி கொள்ளலாம்.

கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கான தகுதிகள்

 • தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற குழுக்கள்.

நிறுவன அமைப்பு முறை

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் நிறுவன அமைப்பு முறை இரண்டு நிலைகளை கொண்டதாகும்.

1. குடியிருப்பு அளவில்

 • குடியிருப்பு அளவிலான அமைப்பு

2. ஊராட்சி அளவில்

 • கூட்டமைப்பு செயற்குழு
 • கூட்டமைப்பு பொதுக்குழு

கூட்டமைப்பில் உறுப்பினராகும் முறை

1. சுய உதவிக்குழு அளவில்

குடியிருப்பு அளவில் உள்ள சுய உதவிக்குழுக்கள் கூட்டமைப்பில் இணைவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதாவது கூட்டமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளவும்.

 • நுழைவு கட்டணம், சந்தா போன்றவற்றை செலுத்தவும்
 • குழுவின் உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களை வழங்கவும்.

2. குடியிருப்பு அளவில்

சுய உதவிக்குழுக்களின் தீர்மானங்களை விவாதித்து உறுப்பினராக சேருவதற்கான பரிந்துரை தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

3. கூட்டமைப்பு அளவில்

 • குடியிருப்பு அமைப்பு அனுப்பிய பரிந்துரையை ஏற்று குழுக்களை உறுப்பினராக்கி தீர்மானம் ஏற்றுதல்.
 • உறுப்பினர் குழு அடிப்படை விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து முறையாக பராமரித்தல் வேண்டும்.

குடியிருப்பு அளவிலான அமைப்பு

1. ஒரே குடியிருப்பு மட்டும் உள்ள ஊராட்சியில்

 • 20 க்கும் குறைவாக குழுக்கள் இருந்தால் குடியிருப்பு அளவிலான அமைப்பு தேவையில்லை. நேரடியாக கூட்டமைப்பின் செயற்குழுவை அமைத்து கொள்ளலாம்.
 • 20க்கும் மேற்பட்ட குழுக்கள் இருந்தால் ஒவ்வொரு 20 குழுவிற்கும் கூடுதலாக ஒரு குடியிருப்பு அளவிலான அமைப்பு அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள ஊராட்சியின் குடியிருப்பில்

 • 5 முதல் 20 குழுக்களிருப்பின் ஒரு குடியிருப்பு அளவிலான அமைப்பு உருவாக்கலாம்.
 • 5க்கும் குறைவாக குழுக்கள் இருந்தால் அவைகள் தங்களின் விருப்பப்படி அருகில் உள்ள குடியிருப்பு அமைப்புடன் இணையலாம்.
 • 20க்கும் மேற்பட்ட குழுக்கள் இருந்தால் ஒவ்வொரு 20 குழுக்களுக்கும் ஒரு குடியிருப்பு அமைப்பு அமைக்க வேண்டும்.

3. குடியிருப்பு அமைப்பின் உறுப்பினர்கள்

 • தர மதிப்பீட்டில் தேர்வு பெற்ற, ஒவ்வொரு சுய உதவிக்குழுவிலிருந்து ஒரு நபர் குடியிருப்பு அமைப்பில் உறுப்பினராவார்.
 • ஒரு குடியிருப்பு அமைப்பின் மொத்த உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 50ரூ இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.
 • குடியிருப்பு அளவிலான அமைப்பின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளாகும்.

4. குடியிருப்பு அளவிலான அமைப்பின் நிர்வாகிகள்

 • செயலாளர்
 • பொருளாளர்

இவர்களில் ஒருவர் இலக்கு மக்களாக இருத்தல் வேண்டும்.

5. நிர்வாகிகளின் பதவிக்காலம்

 • நிர்வாகிகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
 • ஓரே நிர்வாகி இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்கக் கூடாது

அனைத்து சுய உதவிக்குழுவும் நிர்வாக பொறுப்புக்கு வரும் வகையில் சுழற்சி அமைய வேண்டும்.

6. குடியிருப்பு அமைப்பு, நிர்வாகிகள் தேர்வுமுறை

 • குடியிருப்பு அளவில் உள்ள அனைத்துக் குழுக்களின் கூட்டத்தைக் கூட்டுதல்
 • அனைத்து உறுப்பினர்களின் முன்னிலையில் குடியிருப்பு அமைப்பிற்கு குழுவிற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்தல் (குறைந்தது 50 ரூ பேர் இலக்கு மக்கள்)
 • இவர்களில் இருவரை செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்தல் (குறைந்தது ஒருவர் இலக்கு மக்களாக இருத்தல்)

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு - செயற்குழு

 • கூட்டமைப்பின் செயற்குழு குறைந்தபட்சம் 11 உறுப்பினர்களை கொண்டு இருக்க வேண்டும்.
 • இவர்களில் 10 உறுப்பினர்கள் மகளிர் குழுக்களின் பிரநிதிகளாகவும், ஒருவர் மாற்றுத் திறனாளிகள் குழு உறுப்பினர்களின் பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.
 • செயற்குழுவில் குறைந்தபட்சம் 50ரூ இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களில் இருவர் (செயலாளர், பொருளாளர் தவிர) அமுதசுரபி தொடர்பான கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

1. பதவிக் காலம்

 • செயற்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் ஆகும்.
 • ஓரே நபர் இரண்டு முறைக்கு மேல் தேர்ந்து எடுக்கபடக் கூடாது.
 • புதிய செயற்குழுவில் அதிகபட்சம் 50ரூ உறுப்பினர்கள் பழைய நபர்களாக இருக்கலாம்.
 • இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு மாற்றத்திற்கு தேர்தல் நடத்தி குறைந்த பட்சம் 50ரூ உறுப்பினர்கள் புதியதாக தேர்வு செய்யபட வேண்டும்.
 • குடியிருப்பு அளவிலான அமைப்பும் மாற்ற செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யப்பட வேண்டும்.

2. செயற்குழு அமைத்தல்

2.1 ஓரே குடியிருப்பு மட்டும் உள்ள ஊராட்சியில்

20 க்கும் குறைவாக குழுக்கள் இருந்தால் கூட்டமைப்பின் பொதுக்குழு நேரடியாக செயற்குழுவை அமைக்கும்.

2.2. பல குடியிருப்பு அளவிலான அமைப்புகளைக் கொண்ட ஊராட்சி

ஒவ்வொரு குடியிருப்பு அளவிலான அமைப்பும் தங்களின் பிரதிநிதிகளை பின்வரும் வகையில் செயற்குழுவிற்கு அனுப்பும்.

குடியிருப்பிலுள்ள சுய உதவிக்குழுக்களின் எண்ணிக்கை

செயற்குழுவிற்கு செல்லும் பிரநிதிகளின் எண்ணிக்கை

5-10 குழுக்கள்

2 பிரதிநிதிகள் (குறைந்தது ஒருவர் இலக்கு மக்கள்)

11-20 குழுக்கள்

3 பிரதிநிதிகள் (குறைந்தது இருவர் இலக்கு மக்கள்

 • குடியிருப்பிலுள்ள அனைத்து குழு உறுப்பினர்களும் சேர்ந்து அந்த குடியிருப்பிற்கான கூட்டமைப்பின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • அதன் படி செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 க்கும் குறைவாக இருந்தால், மீதம் தேவைப்படும் பிரதிநிதிகளை பொதுக் குழு கூட்டத்தில் தேர்வு செய்ய வேண்டும்.

நிர்வாகிகள்

 • பொதுக்குழு கூட்டத்தில், கூட்டமைப்பின் நிர்வாகிகளான தலைவர், செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
 • அவர்களின் பதவிக்காலம் 2 வருடங்கள் ஆகும்.
 • குறைந்தது இரண்டு நிர்வாகிகள் இலக்கு மக்கள் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
 • செயலாளர் அல்லது பொருளாளர் ஆகியோரில் ஒருவர் ‘மிகவும் ஏழை‘ பிரிவில் உள்ளவராக இருக்க வேண்டும்.
 • ஓரே நபர் நிர்வாக பொறுப்பில் இரண்டு முறைக்கு மேல் இருக்கக் கூடாது
 • பதவிக்காலம் முடிவடையும் நிர்வாகிகளில் அதிக பட்சம் 2 நபர்கள் மட்டுமே மீண்டும் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படலாம்.
 • அனைத்து குடியிருப்புகளும் வாய்ப்பு பெறும் வகையில் சுழற்சி இருக்க வேண்டும்.
 • நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் நிர்வாகிகளாகவோ சமூக சுய உதவிக் குழு பயிற்றுனர்களாகவோ மற்றும் சமூகத் தணிக்கை குழு உறுப்பினர்களாகவோ இருக்க கூடாது.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு - பொதுக்குழு

கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட அனைத்து சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரையும் உறுப்பினராகக் கொண்ட அமைப்பே பொதுக்குழு ஆகும்.

துணைக்குழுக்கள்

கிராம வளர்ச்சி மற்றும் குழு உறுப்பினர்கள் நலனுக்காக, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பல்வேறு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றும். இதற்கு உதவியாக கீழ்க்காணும் துணைக் குழுக்களை கூட்டமைப்பின் பொதுக்குழு அமைக்கும்.

1. குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக்குழு

2. கடன் இணைப்பு மற்றும் கடன் கண்காணிப்பு துணைக்குழு

3. வாழ்வாதார துணைக்குழு

4. சமூக மேம்பாட்டு துணைக்குழு

துணைக்குழுக்கள் அமைக்கும் முறை

 • ஓவ்வொரு துணைக்குழுவிற்கும் 5 உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும்.
 • 5 உறுப்பினர்களில் இருவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்களிலிருந்தும் மீதமுள்ள 3 உறுப்பினர்கள் பொதுக்குழுவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
 • துணைக்குழுவின் 5 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் இலக்கு மக்களாக இருக்க வேண்டும்.

இடைக்கால வாழ்வாதார துணைக்குழு:

ஒரு ஊராட்சியில் 10க்கும் குறைவாக குழுக்கள் இருப்பின் முறைப்படி ஊராட்சி கூட்டமைப்பினை மறுசீரமைக்க இயலாது. இருப்பினும் புதுவாழ்வு திட்ட வாழ்வாதார நிதியினை இலக்கு மக்கள் பெற்ற பயனைடையும் வகையில் இடைக்கால வாழ்வாதார துணைக்குழு அமைக்கலாம்.

இடைக்கால வாழ்வாதார துணைக்குழு அமைப்பதற்கான விதிமுறைகள்:

80% இலக்கு மக்கள் குழுவில் உறுதி செய்தல்

இடைக்கால வாழ்வாதார துணைக்குழு அமைப்புமுறை

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் கண்காணிப்பு குழுவில் உள்ள 3 உறுப்பினர்கள்
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாலர் - 2 கட்டயாய உறுப்பினர்கள்.
 • ஊராட்சியில் உள்ள குழுக்களில் இருந்து தலா 1 உறுப்பினர் (உ-ம்) 6 குழு 6 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
 • மொத்த 11 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும்.

இத்துணைக்குழுவிற்கு தலைவராக சுய உதவி உறுப்பினர்களில் உள்ள ஓரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவர். கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாராகளே இதற்கும் செயலாளர் மற்றும் பொருளாராக செயல்படுவார்கள்

குறிப்பு: இது போன்ற ஊராட்சிகளில் குழுக்களின் எண்ணிக்கை 10 குழுக்களாக வளர்ச்சியடையும்போது இந்த துணைக்குழுவை கலைத்து விட்டு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினை ஏற்படுத்தவேண்டும்.

பழங்குடியினர் வாழ்வாதார துணைக்குழு:

ஒரு ஊராட்சியில் பொது மற்றும் பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஆகிய இரண்டும் செயல்படுகிறதோ அந்த ஊராட்சியில் பழங்குடியினர் வாழ்வாதார நிதியினை பெறுவதற்காக பழங்குடியினருக்கான வாழ்வாதார துணைக்குழு தனியாக அமைக்கப்பட வேண்டும்.

 • பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் செயல்பட்டு வரும் தொழில் மற்றும் கண்காணிப்பு குழுவில் உள்ள – 3 உறுப்பினர்கள்.
 • பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் - கட்டயாய உறுப்பினர்கள்.
 • ஊராட்சியில் உள்ள குழுக்களில் இருந்து தலா 1 உறுப்பினர் (உ-ம்) 4 குழு 4 உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
 • மொத்த 9 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் மாற்றுத்திறனாளியாக இருத்தல் வேண்டும்.
 • இத்துணைக்குழுவிற்கு தலைவராக சுய உதவி உறுப்பினர்களில் உள்ள ஒரு நபர் தேர்ந்தெடுக்கபடுவர். பழங்குடியினர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர்களே இதற்கும் செயலாளர் மற்றும் பொருளாராக செயல்படுவார்கள்.
 • குறிப்பு: இத்துணைக்குழுவில் உள்ள சுய உதவிக்குழுக்கள் அனைத்தும் அந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலும் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆகிகொள்வதுடன் அதன் முலம் வங்கி பெருங்கடன், காப்பீட்டு, தணிக்கை போன்ற பயன்களை பெற்றுக்கொள்ளலாம்.

சமூக தணிக்கைக் குழு

கிராம சபையின் மூலம் அமைக்கப்படும் சமூக தணிக்கைகுழு கூட்டமைப்பின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். இவர்கள் கூட்டமைப்பின் செயற்குழுவிலோ அல்லது குடியிருப்பு அளவிலான அமைப்பின் நிர்வாகியாகவோ இல்லாது இருக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

2.9696969697
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top