பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கூட்டமைப்பின் பணிகளும் பொறுப்புகளும்

கூட்டமைப்பின் பணிகளும் பொறுப்புகளும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அ. குடியிருப்பு அளவிலான அமைப்பு

இவ்வமைப்பு ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு இடையில் ஒரு பாலமாகச் செயல்பட்டு கூட்டமைப்பில் உறுப்பினர்களின் பங்கேற்பை அதிகரிக்கும்.

இதன் பணிகள்:

 • குடியிருப்பில் உள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களையும் குடியிருப்பு அளவிலான அமைப்பில் இணைத்தல்.
 • புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தலுக்கு துணை நிற்றல்.
 • அனைத்து குழுக்களையும் பலப்படுத்த ஆவன செய்தல் (பயிற்சி, கண்காணிப்பு, தரம்பிரித்தல், நிதி இணைப்பு பெற்று தருதல் போன்றவை).
 • குழுக்களின் கடன் மனுவை பரிசீலனை செய்து கூட்டமைப்பிற்கு பரிந்துரை செய்தல்.
 • பெற்ற கடனை குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதை, கடன் திரும்ப செலுத்துதலை உறுதி செய்தல்.
 • குழுக்களின் செயல்பாடு பற்றி மாதாந்திர அறிக்கையை பெற்று கூட்டமைப்பிற்கு சமர்ப்பித்தல்.

கூட்டமைப்பின் முடிவுகளை குழுக்களுக்கு தெரியப்படுத்துதல்.

ஆ. செயற்குழுவின் பணிகள்

பொதுக்குழுவின் வழிகாட்டுதல்படி கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் செயற்குழு மேற்கொள்ளும். இதன் பணிகள் ஆவன:

 • குழுக்களை அமைத்தல் மற்றும் வலுப் பெற செய்தல்
 • குழுக்களை உரிய நேரத்தில் தர மதிப்பீடு செய்ய மற்றும் நிதி இணைப்பு பெற ஏற்பாடு செய்தல்.
 • திட்ட நிதியியை பெறுவதற்கான இலக்குகளை முறையாக முடித்து திட்ட நிதியிணை பெறுதல்.
 • வங்கி பெருங்கடன் போன்ற பிற நிறுவன நிதியை பெற்று குழுக்களுக்கு வழங்க தக்க நடவடிக்கைமேற்கொள்ளுதல்
 • அனைத்து இணைந்த குழுக்களுக்கும் தணிக்கை ஏற்பாடு முடித்து தணிக்கை அறிக்கைபெறுதல்
 • அனைத்து இணைந்த குழுக்களுக்கும் நிதி திட்டம் தயாரித்தலை உறுதி செய்து அதன் அடிப்படையில் கடன் வழங்குதல்.
 • தணிக்கை செய்வதற்கும் நிதிதிட்டம் தயாரிப்பதற்கும் ஆகும் கட்டணங்களை கூட்டமைப்பே மேற்கொள்ளும்.
 • குழு மற்றும் உறுப்பினர்கள் ஏற்ற தொழில்களில் ஈடுபட உதவுதல்.
 • அரசு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடனும் காப்பீடு மற்றும் மகளிர் மேம்பாட்டிற்கான உரிய இணைப்பினை ஏற்படுத்துதல்.
 • விதிமுறைகளுக்கு உட்பட்டு அமுதசுரபி நிதியைத் தேவைப்படும் உறுப்பினருக்கு கடனாக வழங்குதல்.
 • குழுக்கள் வாங்கிய கடன்களை திரும்ப செலுத்துவதை தொடர்ந்து கண்காணித்தல்.
 • சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.
 • குழுக்களின் நன்மைக்கான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுதல்.

இ. பொதுக்குழுவின் பணிகள்

 • உயிர் மூச்சின்படி நடப்பதை உறுதி செய்தல்.
 • கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
 • அமுத சுரபி செயல்பாட்டினை கண்காணித்தல்.
 • செயற்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தல்.
 • கூட்டமைப்பின் ஆண்டு தணிக்கை அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தல்.
 • சமூக தணிக்கைக்குழு அறிக்கையின்மீது விவாதித்தல்.

ஈ. குடியிருப்பு அளவிலான அமைப்பின் நிர்வாகிகள்

குடியிருப்பு அளவிலான அமைப்பின் நிர்வாகிகளாக செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்களின் பணிகளாவன.

செயலாளரின் பணி

 • குடியிருப்பு அளவிலான அமைப்பின் கூட்டத்தை மாதந்தோறும் நடத்துவது.
 • கூட்ட முடிவுகளை தீர்மானப் புத்தகத்தில் எழுதி முறையாக பராமரித்தல்.
 • கூட்டமைப்பிற்கு தேவையான அறிக்கைகளை சமர்பித்தல்.

பொருளாளரின் பணி

 • குழுக்களின் பதிவேடுகள் சரியாக எழுதப்பட்டுள்ளதை கண்காணித்தல்.
 • உறுப்பினர்கள் பெற்ற கடன் தொகை குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்தல்.

உ. கூட்டமைப்பு நிர்வாகிகளின் பணிகள்

1. தலைவர்

 • பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தினை தலைமை தாங்கி நடத்துதல்.
 • கூட்டமைப்பின் பிரதிநிதியாக பல அமைப்புகளில் கலந்து கொள்ளுதல்.

2. செயலாளர்

 • செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடு செய்தல்.
 • கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்தல்.
 • உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய தகவல்களை மூன்று நாட்களுக்கு முன் தெரிவித்தல்.
 • கூட்ட முடிவுகளை முழுமையாக தீர்மான புத்தகத்தில் பதிவு செய்து கையொப்பம் பெறுதல்.
 • வங்கி கணக்கை பொருளாளருடன் இணைந்து இயக்குதல்.
 • மகளிர் திட்டம், புதுவாழ்வு திட்டம் கூசூளுசுடுசூ மற்றும் மாவட்ட சங்க பதிவாளருக்கு தேவையான படிவங்கள், அறிக்கைகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தல்

3. இணைச்செயலாளரின் பணிகள்

 • செயலாளரின் பணிகளில் உறுதுணையாக இருத்தல்.
 • செயலாளர் இல்லாத நேரத்தில் அவரின் பணிகளை முழுமையாக மேற்கொள்ளுதல்.

4. பொருளாளரின் பணிகள்

 • கூட்டமைப்பின் நிதி நிர்வாகத்தை முழுமையாக ஏற்றல்.
 • வங்கி கணக்கினை செயலாளருடன் இணைந்து இயக்குதல்.
 • கூட்டமைப்பின் வரவு-செலவுகளை பராமரித்தல் மற்றும் அனைவருக்கும் தெரிவித்தல்
 • அன்றாட, சில்லறை செலவுகளுக்கு ரூ. 500/-க்கு மிகாமல் கையிருப்பில் வைத்து செலவுகளை தீர்மானத்தின்படி மேற்கொள்ளுதல்.
 • கூட்டமைப்பின் கணக்குகளுக்கு தணிக்கை ஏற்பாடு செய்தல்.
 • ஆண்டு நிதி அறிக்கை, தணிக்கை அறிக்கை மற்றும் பட்ஜெட் தயார் செய்து பொதுக்குழுவின் ஒப்புதல் பெறுதல்.

ஊ. துணைக் குழுக்கள்

கூட்டமைப்பின் செயல்பாடுகளில் உறுதுணையாகவும் பக்கபலமாகவும் இருந்து செயல்படுவதற்கு 4 துணைக்குழுக்கள் பொதுக்குழுவால் நியமிக்கப்படுகிறது. இதன் பணிகள்:-

1. குழு அமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல் துணைக் குழு

 • விடுபட்ட இலக்கு மக்களை புதிய சுய உதவி குழுவில் இணைத்தல்.
 • குழுக்களுக்கான பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

2. நிதி இணைப்பு மற்றும் கண்காணிப்பு துணைக் குழு

 • தரம் பிரித்தல் மற்றும் மதிப்பீட்டுக்கு ஏற்பாடு செய்தல்.
 • உரிய நேரத்தில் வங்கியில் நிதி இணைப்பு பெறச் செய்து கடன் திருப்பத்தினை கண்காணித்தல்.
 • பெற்ற கடனைத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி முறையாகப் பயன்படுத்துவதை கண்காணித்தல்.
 • கடன் தொகை கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்கள் காப்பீடு செய்யப்பட்டதை உறுதி செய்தல்.

3. வாழ்வாதார துணைக் குழு

 • வாழ்வாதார வள ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களை தகுதியான நபர்களுக்கும் தெரியப்படுத்துதல்.
 • குழுக்களிடமிருந்து பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை ஆய்வு செய்து பரிந்துரை செய்தல்.
 • தொழில் திறன் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல்.
 • தொழில் திட்டம் தயாரித்தலுக்கு உதவுதல்.

4. சமுக மேம்பாட்டுக் குழு

 • அரசு நலத்திட்டங்களின் பயன்கள் குழு உறுப்பினர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுத்தல்.
 • கொத்தடிமைகள் பிரச்சினை, குழந்தை தொழிலாளர்கள், பெண்கள் கல்வி, உரிமை மீறல் பிரச்சினை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுதல்.

எ. சமூக தணிக்கை குழுவின் பணிகள்

 • கூட்டமைப்பின் செயல்பாடுகள் பொதுக்குழுவின் முடிவுகளுக்கும், கூட்டமைப்பின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு செயல்படுவதை கண்காணித்தல்.
 • நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட்டு உரிய நபரின் பயன்பட்டிருப்பதைக் கண்காணித்தல்.
 • பொதுக்குழு கூட்டத்தில் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பரிந்துரையுடன் சமர்ப்பித்தல்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

2.91304347826
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top