பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய தகவல்.

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,

பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தின் குறிக்கோள்கள்

  1. மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
  2. பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
  3. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்

  1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
  2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
  3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
  4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.
3.11607142857
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ஆலிஸ் Jul 07, 2019 01:02 AM

நான் ஒரு அரசு பெண் ஊழியர்.

பெண்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.
அதற்கான சட்டம் இயற்றபட்டு என்ன பயன்?
பெண்களை இன்னும் கேளிபொருளாகவும், விற்பனை பொருளாகவும் தானே பார்க்கிறது இந்த சமூகம். வீட்டிலும் பாதுகாப்பு இல்லை பணிபுரியும் இடத்திலும் பாதுகாப்பு இல்லை.

ஏன் இந்த அவல நிலை?

ஏன்னென்றால் சட்டம் நாட்டில் தான் ஏற்றபட்டுள்ளது ஆனால் பெண்கள் மனதில் ஏற்றப்படவில்லை. பல பெண்கள் நியாயத்திற்காக இன்னும் போராடி கொண்டுதான் இருக்கிறார்கள். பலர் போராடி தோற்றுபோய்விட்டார்கள்.

சில பெண்களின் உண்மை, நியாயம் கிடைக்குமா என்ற பயத்தில் வெளியே வருவதே இல்லை.

இந்த நிலை மாறவேண்டும்.

இன்னும் விழிப்புணர்வு அதிக படுத்தவேண்டும்.

தனியார் மற்றும் அரசு துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு முதலில் அவர் நிறுவனத்தில் பாதுகாப்பு குழு அமைய பெண்கள் முன்வரவேண்டும் என்று சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு வழிவகை செய்யவேண்டும்.

அதற்கான சட்டம் கட்டாய படுத்தினால் மட்டும் போதாது . ஒவ்வொரு நிறுவனமும் நிர்வாகமும் இத கடைபிடிக்கவேண்டும்.

இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல
பாதிக்கப்பட்ட பல பெண்களின் கோரிக்கை.

விக்டோரியா Jul 03, 2019 10:35 AM

மகளிர் ஆணையம் ஒன்று இருப்பது சாதாரண;கிராமப்புற பெண்களையும் சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Muniammal Jun 04, 2019 05:59 PM

பெண்களுக்கு எதிரான செயல். பேச்சு மூலமாக வன்கொடுமைகள் நடந்து கொண்டு இருக்கின்றன இதை எப்படி தெரிவிப்பது

அருணகிரி சண்முகம் Apr 08, 2019 05:43 AM

மாவட்ட அளவில் மகளிர் ஆணையம் செயல்பட வேண்டும்

Thamo Mar 27, 2019 12:42 PM

அரசு பணிகளில் பணி புரிந்து கொண்டிருக்கும் பெண்களுக்காக வும் ஆணயம் செயல்ப்டவேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top