பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் பற்றிய தகவல்.

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இவ்வாணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,

பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. இவ்வாணையம் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆணையத்தின் குறிக்கோள்கள்

  1. மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
  2. பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
  3. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்

  1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
  2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
  3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
  4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.
3.13829787234
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
பி.அஞ்சலி Aug 28, 2018 10:33 PM

பெண்கள் மனு மேல் விசாரணை எடுப்பதில்லை.மாவட்டம் தோறும்மகளிர் ஆணை வேண்டும்.அரசியல் சாரா அமைப்பு

மலர்விழி Aug 09, 2018 02:08 PM

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, குற்றவாளிகளுக்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், கற்றவாளிளை தப்பிக்வைக்கும் முயட்சியில் ஈடுபட்டு உள்ளுர் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் சேர்ந்து சட்டத்தற்கு எதிரான கட்டபாஞ்சாயத்துகளில் ஈடுபட்டு சுமுக தீர்ப்பு முடித்வைத்து நீதிமன்றங்களின் முன்னால் விபரிதமான சமுக குற்றங்கள் ெதரியாதபடி இருட்டடிப்பு செய்து விடுகின்றன.

ஆர்.கே.இளவரசி May 18, 2018 11:25 AM

சமூக அலுவலர்கள் மாதம் ஒருமுறை அனைத்து துறை அலுவலகத்தில், பள்ளியில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பிரச்சினைகளை கேட்டு
அறிய திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் பெண்கள் பணிபுரியும் இடத்தில் நிம்மதியாக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்கள் பிரச்சினைகள் கூற அனைத்து பொது இடங்களில் தொலைபேசி எண் வைக்க வேண்டும்.

லோகநாயகி Mar 27, 2018 05:21 PM

பெண்கள் சமத்துவம் பெற பெண்கல்வி தேவை.கல்வின்னா இப்போ பள்ளியில் இருக்கும் கல்வி இல்லை.பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற அறிவு தேவை.அதைக் கொடுத்தால் அவள் போராடி சமத்துவம் பெறுவாள்.சாதியை ,மதத்தை,கவுரவக் கொலைகளை வேரறுப்பாள்.நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பாள்.

raj Jul 15, 2017 12:24 AM

ஒவ்வொரு aluvagaththilum பாலியல் கமிட்டி உண்டு அங்கு புகார் செய்யவும் பாலியல் கமிட்டி இல்லை என்றால் கலெக்ட்டரிடம் புகார் செய்யவும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top